தடுப்பு காவலில் துன்புறுத்தப்பட்டேன் – இளைஞர் இசைமணி காவற்துறையில் புகார்
பதிந்தவர்_கனி on January 8, 2010
மலேசியா: செய்யாத குற்றத்திற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பல்வேறான வகையில் மன உளைச்சல் மற்றும் காவற்துறையினர்களின் அடி உதைகளுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகியதாக லிமோசீன் (ஆடம்பர வாடகைக்கார்) ஓட்டுனரான எஸ்.இசைமணி (வயது 27) கண்ணீர் மல்க கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் 6ம் திகதியன்று, தன் உறவுக்காரப் பெண் ஒருவர் தம்மீது வேண்டுமென்றே சுமத்திய குற்றத்தை மறுத்ததன் எதிரொலியாக தாம் இவ்வகையான கொடுமைகளிற்கு ஆளாகியதாக இசைமணி கூறினார்.
“நான் குற்றமற்றவன் என பலமுறை கூறிய போதும் என்னை காவற்துறையினர் அடித்து உதைத்தனர். என் உறவுக்காரப் பெண்மணி, என் மீது வேண்டுமென்றே இக்குற்றத்தை சுமத்தியுள்ளார் என நான் கூறியபோதும், என் குரலுக்கு செவிசாய்க்காமல் அவர்கள் என்னை அடித்து துன்புறுத்தினர்.
என் உறவுக்கார பெண்மணியின் வீட்டில் நான் திருடியதாக அவர்கள் கூறினர். நான் திருடவில்லை என மன்றாடிய போதும் அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்தனர். போலீஸ் தலைமையகத்தில் சம்பந்தப்பட்ட அந்த போலிசாருக்கு எதிராக தேசிய போலீஸ் படைத்தலைமையகம் டான்சிறி மூசாவிடம் மகஜர் வழங்கச் சென்றபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
போலிசாரின் விசாரணைக்காக கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி தான் கைது செய்யப்பட்டதாகவும், கடந்த 14 ஆம் திகதி வரை தாம் சிரும்பான் போலீஸ்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் இசைமணி கூறினார்.
போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், 6 போலீஸ்காரர்கள் தம்மை அடித்து உதைத்ததாக அவர் சொன்னார்.
அதன் பின்னர், போலீஸ் சீருடை அணியாத போலீசார் ஒருவர், என்னை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்ததாகவும், அவர் தெரிவித்தார்.
காலையில் என்னை கைது செய்து 4 மணி வரை போலீசார் என்னை அடித்து உதைத்து துன்புறுத்தினர். பசியால் வாடிய எனக்கு அவர்கள் உணவு ஏதும் கொடுக்கவில்லை.
அதன்பிறகு, அங்கிருந்து அவர்கள் என்னை சிரம்பான் போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ஒரு போலீசுகாரர் என்னை முகத்தில் அறைந்தனர். அவருடன் இருந்து மற்ற போலீசாரும் என்னை அடித்து உதைத்தனர்.
அங்கும் எனக்கு உணவு ஏதும் வழங்கப்படாமல், என்னை 13ஆம் நம்பர் லாக்கப்பில் அடைத்து வைத்தனர்.
7 ஆம் திகதி தாம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு தம்மை நான்கு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப் பட்டதாக அவர் சொன்னார்.
அதன்பின்னர், இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரும் தம்மிடம் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டதாகவும் அந்த இன்ஸ்பெக்டரே அந்த பெண்மணி பொய்ப்புகார் கொடுத்துள்ளார் என கூறியதாக இசைமணி கூறினார்.
அதன் பின்னர் மீணும் 10 ஆம் திகதி தாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாகவும் அங்கு தம் மீதான தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு தொடரப்படவேண்டும் என பணிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அதற்கு முன்னதாகவே, மாஜிஸ்திரேட் முன்பு தாம் பேசக்கூடாது என இன்ஸ்பெக்டர் தம்மை மிரட்டியதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.
நீதிமன்றத்திலிருந்து, சிரம்பான் ஸாக்கப்பிற்கு தாம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தம் ஒரு கைகளும் பின்புறம் கைவிலங்கிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அந்த விசாரணையின் போது, முழங்காலின் பின்புறத்தில் நீர்குழாயை வைத்து என்னை இருக்க வைத்தனர். அங்கு என் மீது புகார் கொடுத்த பெண்மணியும் இருந்தார். அதே அறையில் 7 ஆண் போலீசாரும் 1 பெண் போலீசாரும் இருந்தனர். அங்கு என்னை போலிசார் விசாரித்தனர்.
ஆனால், நான் கொடுத்த எவ்வித பதிலையும் போலிசார் ஏற்றுக் கொள்ளவில்லை. என் மீதான குற்றத்தை நான் மறுக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு நீர்குழாயைக் கொண்டு அடிமேல் அடி கொடுக்கப்பட்டது.
அந்த அறையில் இருந்த பெண் போலீசார் தமது தலைமுடியைப் பற்றிக்கொண்டு பலமுறை கையால் முகத்தில் அறைந்ததாகவும், அதன் பின்னர், நெஞ்சுப்பகுதியில் பலம் கொண்டு அந்த பெண் போலீசார் தம்மை உதைத்ததாகவும் (முழங்கால் கொண்டு) அவர் கூறினார்.
கீழே சாய்ந்த என் மீது, அந்த பெண் போலீசார் உட்கார்ந்து கொண்டு, அவர் அணிந்திருந்த காலணியை என் வாயில் திணித்தார்.
அந்த உறவுக்கார பெண்மணியைவிட தாம் இன்னும் அழகாக இருப்பதாகவும் அந்த பெண்ணை ஏன் நீ பார்க்கிறாய்? என்னை பார் என்ரு அந்த பெண் போலீசார் கூறினார். அந்த வேளையில் தன் சட்டையையும் அவர் அணிந்திருந்த ‘துடோங்’ தையும் அவர் கழற்ற முயற்சித்ததாகவும் அதன் பின்னர் பல தகாத வார்த்தைகளைக் கொண்டு அந்த பெண் போலீசார் தம்மை திட்டியதாகவும் இசைமணி மேலும் கூறினார்.
அதன்பின்னர், அங்கிருந்து புகார் கொடுத்தவருடன் வெளியே சென்ற பெண் போலீசார், 15 நிமிடங்கள் கழித்து என்னிடம் வந்து என் தலைமுடியைப் பற்றிக் கொண்டு அந்த பெண்மணி உன்மீது பொய்ப் புகார் சுமத்தி விட்டார் என கூறினார்.
அதனால் தொடர்ந்து, அந்த அறையில் இருந்த மற்ற போலீசாரும் அந்த பெண்மணி என் மீது பொய்புகார் கொடுத்துள்ளார் என கூறினார்.
அதன் பின்னர், அவர்கள் மீண்டும் என்னை லாக்கப்பில் விட்டுச்சென்றனர். அங்கு எனக்கு காய்ச்சல் கண்டது. காய்ச்சலுக்காக நான் மருந்து கேட்ட போது மருந்தெல்லாம் இங்கு கிடையாது என அவர்கள் கூறிவிட்டனர்.
அதுமட்டுமல்லாமல், எனக்கு அவர்கள் கெட்டுப்போன உணவை அழைத்துச் சென்ற போலீசுக்காரர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர் என அவர் கூறினார். விசாரணைக்குப் பின்னர், போலீசார் ஒரு கடிதத்தை வழங்கியதாகவும், அதில் தாம் குற்றமற்றவர் என எழுதப்பட்டதாகவும் இசைமணி சொன்னார்.
அதன் பின்னர் கடந்த 17 ஆம் திகதியன்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக மாநில போலீஸ் துணைக்கமிஸ்னரிடம் புகார் கொடுக்கச் சென்ற தமக்கு அனுமதியளிக்காமல், வேண்டுமென்றால் போலீசாரிடம் புகார் கொடு என அவர்கள் கூறிவிட்டதாக இசைமணி தொடர்ந்தார்.
புகார் கொடுத்த பின்னர், தங்க ஜப்பார் மருத்துவமனைக்கு தாம் சென்றதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
தமக்கு இழைக்கப்பட்ட இந்ஹ்ட கொடூரம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது எனவும் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனும் பொருட்டில் தாம் இந்த மனுக்களை வழங்குவதாகவும் இசைமணி தெரிவித்துக் கொண்டார்.
மலேசிய சோசலிஸ்ட கட்சி, மனித உரிமை கட்சி, ஜெம்ய இஸ்லாம் மலேசியா உறுப்பினர்கள் இந்த மகஜர் வழங்கப்படுகையில் இசைமணியுடன் இருந்தனர்.
இசைமணிக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கும் இக்கொடூரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
WWW.MEENAKAM.COM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment