யாழ்ப்பாணத்தில் ‘கிணற்றுப் படுகொலைகள்’: மர்மத்தின் பின்னணியில் சிங்களப் படையினர்?
யாழ்ப்பாணத்தில் ‘கிணற்றுப் படுகொலைகள்’: மர்மத்தின் பின்னணியில் சிங்களப் படையினர்?
05. 01. 2010, (புதன்), 18:33
மின்னஞ்சல்கடந்த ஒரு மாத காலத்திற்குள் – யாழ் குடாநாட்டில் – இருபதுக்கும் மேற்பட்ட இறந்தோரின் உடல்கள் கிணறுகளில் வீசப்பட்ட நிலையில் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
முன்பு – தொடக்கத்தில் – இவை, தற்செயலாகக் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தவர்களது உடல்கள் என்றே நம்பப்பட்டன.
ஆனால் – காலப் போக்கில் இவ்வாறு கிணற்றுக்குள் கண்டு எடுக்கப்படும் உடல்களின் எண்ணிக்கை அதிகரித்த போது – இவற்றுக்குப் பின்னால் அச்சமுட்டும் உண்மைகள் இருக்கலாம் என பொதுவாக நம்பப்படுகின்றது.
மேலும் – இவ்வாறு கண்டு எடுக்கப்பட்ட உடல்களில் மிகப் பெரும்பாலானவை 25 வயதுக்கு உட்பட்டவையாகவே இருப்பதாக யாழ் போதனா மருத்துவமனை வட்டாரங்கள் புதினப்பலகை-யிடம் தெரிவித்தன.
அத்தோடு – குறிப்பாக – இவர்களில் பெரும்பாலானோர், வன்னியிலிருந்து வந்து மீளக்குடியேறியோர் எனத் தெரிவி்த்தார் மீள்குடியேற்றப் பணிகளில் ஈடுபட்டுள்ள யாழ் செயலகப் பணியாளர் ஒருவர்.
சில நாட்களுக்கு முன்னதாக – கோப்பாய் பகுதியில் சிறிலங்கா படையின் அரண் ஒன்றுக்கு அருகில் வைத்து இளம் தமிழ் பெண் ஒருவர் காணாமல் போய்விட்டார்.
பின்பு – சில மணி நேரங்கள் கழித்து, இருண்டதன் பின்னர் – சில மைல் தொலைவில் இருக்கும் கிணறு ஒன்றில் இருந்து அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் அதிகரித்துவரும் இந்தக் ‘கிணற்றுப் படுகொலை’களின் பின்னணியில் சிறிலங்கா படையினர் இருப்பதாகவே அஞ்சப்படுகின்றது.
நெருடல்.......nerudal.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment