மாவீரர்களின் கல்லறைகளில் புத்தபெருமான்! கைகூப்பி வணங்கும் சிங்களம்!!
விடுதலைப்போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் துயிலும் இல்லங்கை அடியோடு அழித்து அக்கிரமம் செய்யும் இராணுவம் அதில் புத்தர்சிலைகளை வைத்து வணங்கி வருகின்றது.
இந் நிலையில் வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை ஆக்கிரமித்து அங்கிருந்து கல்லறைகளும், நினைவுக்கற்களும் அகற்றப்பட்டு பாரிய அளவிலான புத்தர் சிலை அமைக்கப்பட்டு சிலை திறப்பு நிகழ்வு நேற்று பிரமாண்டாக நடைபெற்றிருக்கின்றது.
இதனடிப்படையில் 611 வது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினரினாலேயே துயிலும் இல்லக் காணி அபகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
06 அடி உயரம் உள்ள குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டதுடன், அதே காணியில் பத்திற்கும் மேற்பட்ட கட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர்.
ஆயிரத்து ஐநூறு வரையிலான மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ள மாவீரர் இல்லத்தின் நினைவுக்கற்களும், கல்லறைகளும் இராணுவத்தினரால் புள்ளோசர்கள் துணையுடன் இடித்து அகற்றப்பட்டு வேலி ஓரத்தில் அணைபோல குவிக்கப்பட்டிருந்ததாக கண்ணீர் மல்க கவலை வெளியிட்டுள்ளனர் அப் பகுதி மக்கள்.
©2011 www.tamilcnn.com. All Rights Reserved.
Saturday, March 17, 2012
இலங்கை முன்னேற வேண்டுமெனில் அங்கு ஆட்சி மாற வேண்டும்!-.......ஜான் ஹோம்ஸ்
இலங்கை முன்னேற வேண்டுமெனில் அங்கு ஆட்சி மாற வேண்டும்!-ஜான் ஹோம்ஸ்
போர்க் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறல் என்பன இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்திலேயே இப் பிரச்சினையில் முன்னேற்றத்தைக் காண முடியும் என ஐ.நாவின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைமைச் செயலர் சர் ஜான் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் விஷயத்தில், சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் மேலும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கிறது என்ற ரீதியில் எழும் கருத்துக்களுக்கு பதிலளித்த சர் ஜான் ஹோம்ஸ், இதைவிட அதிகமாக என்ன செய்யமுடியும் என்று கூறுவது தற்போதைக்கு கடினமாக இருக்கிறது, ஐநா மன்றத் தலைமைச்செயலர் நியமித்த வல்லுநர்கள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துவிட்ட்து. அது வெளிப்படையாக பொதுமக்கள் பாவனையில் இருக்கிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
இப்போது மேலதிகமாக ஏதாவது செய்யவேண்டும் என்றால் அதற்கு இலங்கை அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை என்றும் அவர் கூறினார்.
“இந்த விசாரணைகள் மூலம் சர்வதேச நாடுகள் தன்னைக் குறிவைப்பதாக இலங்கை அரசு நம்புகிறது. அவர்களை இதில் யாரும் குறி வைக்கவில்லை. ஆனால் அவர்களின் கடந்தகால நடவடிக்கைகள்தான் இந்த விசாரணைகள் கவனம் செலுத்தும் கருப்பொருள். எனவே அவர்கள் இந்த முயற்சிகளுக்கு, அதாவது ஒரு புதிய விசாரணைக்கு, முழுதாக ஒத்துழைக்கமாட்டார்கள். எனவே நாம் இந்த அரசு மாறும்வரை பொறுத்திருக்கவேண்டும். அதன் பின்னர் வரும் புதிய அரசில் இருப்பவர்கள் இதற்கு ஒத்துழைத்தால்தான் நாம் உண்மைகளை வெளிக்கொண்டுவரலாம்”, என்றார் ஜான் ஹோம்ஸ்.
ஆனால் ஆட்சியில் இருக்கும் அரசு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக சர்வதேச சமூகம் அமைதியாக இருந்துவிடமுடியுமா என்று கேட்டதற்கு, சர்வதேச சமூகம் அமைதியாக இருந்துவிடவில்லை என்றார் ஜான் ஹோம்ஸ். “ஐநா மன்ற வல்லுநர் குழு இது தொடர்பில் தனது அறிக்கையை சமர்பித்தது.
பல தன்னார்வக் குழுக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை தந்திருக்கிறது. சேனல் 4 தொலைகாட்சியின் விவரணப்படம் கூட இதன் ஒரு அங்கம்தான். ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் இதை ஒரு முறை ஆராய்ந்திருக்கிறது. எனவே சர்வதேச கவனம் இதில் இருக்கிறது.
பிரச்சனை என்னவென்றால் இந்தப் பிரச்சினைகள் நடந்த இடத்தில் இருக்கும் அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. இது கவலையளிக்கும் ஒரு விஷயம் ஆனால் அதுதான் தற்போதைய யதார்த்தம்” என்றார் ஹோம்ஸ்
ஆனால் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் இவர் கூறும்ப் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் போரின் இறுதிக்கட்டத்தில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்ட்டபோது, சர்வதேச சமூகம், குறிப்பாக ஐ.நா மன்றம் சரியாகத் தலையிடவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே என்று அவரிடம் பிபிசி கேட்டபோது, ஒரு இறையாண்மை பெற்ற அரசை, ஐநா மன்றம் , அந்த அரசின் விருப்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்த முடியாது என்று விளக்கமளித்தார் ஜான் ஹோம்ஸ்.
“இலங்கை விவகாரத்தில் ஐ.நா மன்ற பாதுகாப்பு கவுன்சிலில் கருத்தொற்றுமை இல்லை. ரஷ்யாவும் சீனாவும் இந்த விஷயத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்படுவதற்கு தயாராக இல்லை. எனவே ஐ.நா மன்றத்தின் உறுப்பு நாடுகளிடையே கருத்தொற்றுமை இல்லாத நிலையில், ஐ.நாவால் நடவடிக்கை எடுக்க முடியாது” என்றார் ஜான் ஹோம்ஸ்.
மேலும் ஐ.நா மன்றம் பொதுமக்கள் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில், இலங்கை அரசை, அந்த யுத்தப் பகுதியில் கனரக போர் ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு வற்புறுத்திக்கொண்டிருந்ததாக கூறிய ஜான் ஹோம்ஸ், இலங்கை அரசோ அந்தப்பகுதியில் சாதாரணப் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றே கூறிக்கொண்டிருந்ததாகவும், ஆனால் அது உண்மையல்ல என்றும் கூறினார்.
அதேசமயம், ஐநா மன்றாம் விடுதலைப்புலிகளிடமும், சாதாரணப் பொதுமக்களை விடுவியுங்கள் என்று கூறிக்கொண்டிருந்ததாவும் தெரிவித்தார். “ஏனென்றால் அதுவும் ஒரு அடிப்படையான பிரச்சினை. சாதாரண மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு எதிராக அங்கே பிடித்து வைக்கப்படிருந்தார்கள். ஐ.நா மன்றம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துகொண்டிருந்தது. ஆனால் ஐ.நாவிடம் ஒரு அதிசயத் தீர்வு இருந்தது என்ற கருத்து உண்மையான கருத்தல்ல” என்றார் ஜான் ஹோம்ஸ்.
இது ஒரு புறமிருக்க, போர் முடிந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும், அங்கே போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மனித நேய உதவிகள் கூட சரியாகத் தரப்படவில்லை. இந்த சிறிய விஷயத்தில் கூட ஐ.நா மன்றமோ சர்வதேச சமூகமோ தமிழ் மக்களுக்கு உதவ முடியவில்லை என்ற கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பிபிசி கேட்டதற்கு பதிலளித்த ஜான் ஹோம்ஸ், “ஐ.நா மன்றம் தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது, ஐநா மன்றம்தான் அரசிடம் பேசி, போர் நடந்த பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களுக்கு நிவாரண முகாம்களை அமைக்குமாறு வலியுறுத்தியது. அங்கே அவர்கள் சுந்தந்திரமாக நடமாட முடியவில்லை என்பது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. அந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு சில மாதங்களில் தீர்வு காணப்பட்டது. அவர்களில் பெரும்பாலோனோர் தங்கள் வீடுகளுக்கு இப்போது திரும்பிவிட்டார்கள்”, என்று தெரிவித்தார்.

Friday, March 2, 2012
சீனமொழியின் மிகப்பழையபாடல்தொகுப்பை நேரடியாகத்தமிழுக்கு, அதன் மண்வாசனையும், தொன்மையும் குலையாமல் மொழியாக்கியுள்ளார்...இந்தியவெளியுறவுஅதிகாரி ஸ்ரீதரன்.!
சீனத்து இலக்கியப் பட்டு
பா. கிருஷ்ணன்
01 Mar 2012 09:37:39 AM IST
ஸ்ரீதரன்மதுசூதனன்
சீன மொழியின் மிகப் பழைய பாடல் தொகுப்பை அந்த மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு, அதன் மண் வாசனையும், தொன்மையும் குலையாமல் மொழியாக்கியுள்ளார் இந்திய வெளியுறவு அதிகாரி ஸ்ரீதரன். "வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை' என்பது நூலின் தலைப்பு. பிற மொழிபெயர்ப்பைப் போல் அல்லாமல், இந்நூலைத் தமிழில் கொண்டுவருவதற்கு ஓர் இலக்கியப் பயணமே மேற்கொண்டிருக்கிறார் ஸ்ரீதரன். "பயணி' என்ற புனை பெயரில் இந்நூலை தமிழுக்குத் தந்திருக்கிறார். பிறமொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரும் "கலைச் செல்வங்கள் யாவும்' பெரும்பாலும் நேரடியாக வராமல் ஆங்கில மொழியின் மூலமாகவே வருகின்றன. முதல் முறையாக சீனமொழியிலிருந்து, அதுவும் சங்க இலக்கியம் போன்ற பண்டைய நூல் ஒன்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இன்றளவு சீனாவின் முதல் நூல் என்று கருதப்படுவது "ஷிழ் சிங்' (கிட்டத்தட்ட சீன மொழியின் உச்சரிப்புக்கு இதுவே உகந்தது). இதைத்தான் சீன மொழியிலிருந்து, அதன் பண்பாட்டுப் பின்னணியில், களப் பின்னணியை முழுமையாகப் புரிந்துகொண்டு, அந்த மொழியிலிருந்தே நேரடியாகத் தமிழில் கொண்டுவந்திருக்கிறார் "பயணி'. இவரது இயற் பெயர் ஸ்ரீதரன் மதுசூதனன். சென்னையில் பிறந்து, சென்னையில் படித்து பத்திரிகைப் பணியில் நாட்டம் கொண்டு எழுத்தாளராக, நாடகக் கலைஞராக பன்முகத்தன்மை கொண்ட ஸ்ரீதரன் மதுசூதனன், வெளியுறவுத் துறையில் இருந்தாலும் உலக நாடுகளின் பண்பாட்டுக் கூறுகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். மனைவி வைதேகி, கல்வியாளராகப் பள்ளியில் ஆசிரியப் பணி செய்து வருகிறார். மகன் அபி அமெரிக்காவில் இசை பயின்று வருகிறார். மகள் கீர்த்தனா 7வது வகுப்பு மாணவி. இந்திய அயலுறவுப் பணியாளரான இவர் சீனாவில் 1998ம் ஆண்டிலிருந்து பலஆண்டுகள் பணியாற்றியுள்ளார். காலச்சுவடு வெளியிட்டிருக்கும் இந்த நூலைப் பற்றியும், அதை வடிவாக்கம் செய்த அனுபவத்தைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஸ்ரீதரன்: ""இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியாகப் பொறுப்பேற்ற எனக்கு பெய்ஜிங்கிலும், ஹாங்காங்கிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் முறையாக சீன மொழியைக் கற்றுக் கொண்டேன். தமிழுக்குத் தொல்காப்பியம் என்று சொல்வதைப் போல் இன்று கிடைத்துள்ள பண்டைய சீன நூல் இது. இன்னும் சொல்லப் போனால், சீனாவின் இலக்கிய வரலாறே இந்த நூலில்தான் தொடங்குகிறது. இதில் "ஷிழ்' என்ற சொல்லுக்கு கவிதை அல்லது பாடல் என்று பொருள். "சிங்' என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றில் தொகுப்பு, செவ்விலக்கியம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. எனவே, புறநானூறு, அகநானூறு, கலித் தொகை என்பதைப் போன்று இதை "கவித் தொகை' என்று அழைக்கலாம். உண்மையில் இந்நூலின் கவிதைத் தொகுப்பு கிடைக்கப் பெறவில்லை. மாறாக கவிதைகளுடன் விளக்கங்களாகக் கிடைத்தவற்றைத் தொகுத்து, அவற்றிலிருந்து கவிதைகளைத் தொகுத்த வடிவம்தான் இது. எல்லாவற்றையும் விட தமிழின் சங்க இலக்கியத்துக்கும் சீன "ஷிழ் சிங்'குக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. சங்கப் பாடல்கள் எப்போது எழுதப்பட்டன, தொகுக்கப்பட்டன என்பதற்குச் சரியானஆதாரம் கிடைக்கவில்லை. அதைப் போலவே "ஷிழ் சிங்' கவிதைகளும் எப்போது எழுதப்பட்டன, தொகுக்கப்பட்டன என்பது தெரியாது. "ஷிழ் சிங்' பாடல்களின் காலமும் கி.மு. 1000 என்று கூறுகிறார்கள். சங்க இலக்கியத்தில் திணை, துறை இருப்பது சிறப்பு. இன்ன பின்னணியில், இன்னச் சூழலில், இன்ன கால நேரத்தில், இந்த வகையான உணர்ச்சி வெளிப்பாடு கவிதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் முழுமையாக இல்லாவிட்டாலும் கவித் தொகையின் பாடல்களில் ஒருவித வரைமுறைகள் பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம். மொழி பெயர்ப்பு என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இரு வேறு மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்பது சரியே அல்ல. நான் சீன மொழியைக் கற்றிருந்தாலும், அதில் விற்பன்னனாக இல்லை. காரணம், சீன மொழியைக் கற்றுவிட்டு, பிற சூழலுக்கு மாறும்போது, கற்ற மொழி எளிதில் ஆவியாகிவிடும். மீண்டும் அந்த மொழியை ஆள வேண்டுமானால், அந்த மண்ணுக்குள்தான் புக வேண்டும். இந்த மொழி பெயர்ப்பு தனி ஒரு நபரால் உருவானதே அல்ல. ஒரு குழு சிந்தாமல், சிதறாமல் கவனத்துடன் செய்த நேர்த்தியான பணி. எனக்கு இதில் உதவியவர்களில் முதல் நபர் பீகிங் பல்கலைக்கழக சீனத் துறைத் தலைவர் ட்ச்சீ யோங்ஷ்ஸியாங். ஒவ்வொரு பாடலாக எடுத்துக்கொண்டு நிதானமாக சொல்லிக் கொடுத்தார் அவர். அதையடுத்து என் ஆசிரியை ட்சாங் யீங்ஹுவா. அயலுறவுப் பணியில் இருப்போர் வெளிநாட்டு மொழிகளைக் கற்றிருக்க வேண்டும். எனவே, சீன மொழியை நான் தேர்ந்தெடுத்தேன். அதனால், சீனாவில் பணியாற்றினேன். அப்போது, கட்டாயம் அந்நாட்டிலேயே அந்த மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே எனக்குப் பலமும் ஊட்டியது. மொழிபெயர்ப்புக்காக தனிக் குழுவையே என் வீட்டில் உருவாக்கியிருந்தேன். சீன வானொலியில் தமிழ் படித்த சீனர்கள் உதவினர். தமிழ் படிக்கும்போது அரவிந்தன் என்ற பெயரைச் சூட்டிக் கொண்ட ட்ஷிழ்ஹுவா, திலகவதி என அழைக்கப்படும் ஹான் ச்சொங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். என் மனைவி வைதேகியும் துணை புரிந்தார். கவித்தொகை சீனாவின் சமூகத்தை, மதத்தை, அரசியல், வாழ்வியல் ஆகியவற்றை ஊடுருவியிருக்கிறது. சரியாகச் சொல்லப் போனால், சீன இலக்கியத்தைப் பற்றி மட்டுமல்ல, சீன சமூகம், வரலாற்றுச்சூழல் ஆகியவற்றையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். கன்ஃபூஷியஸ் இந்த நூலை அடிக்கடி மேற்கோள் காட்டியிருக்கிறார் என்பது மட்டுமல்ல, "இப்பாடல்களைப் படிக்காமல் இருப்பது எதையும் பார்க்காமல் சுவரின் பக்கம் திரும்பி நின்று கொண்டிருப்பதுபோன்றது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் நாட்டுப் பாடல்கள், விழாப் பாடல்கள், வேண்டுதல் பாடல்கள் என 305 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன'' என்று கவித்தொகையைப் பற்றிய அறிமுகத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட "பயணி'யிடம், நாம் சில கேள்விகளை முன்வைத்தோம்: இந்த நூலை எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?சீனாவில் பணியில் இருந்தபோது, 2002ம் ஆண்டு ஹாங்காங்கில் சீன மொழி - ஓர் அறிமுகம் என்ற நூலை எழுதினேன். இதுதான் எனது முதல் நூல் என்பது மட்டுமின்றி, சீன மொழி குறித்து தமிழில் உருவான முழுமையான நூல் எனலாம். இந்நூல், ஹாங்காங் தமிழ்ச் சங்கத்தில் அப்போது இருந்த இந்திய துணை தூதரகத் தலைவரால் வெளியிடப்பட்டது. தமிழைப் போல் பழைமை வாய்ந்தது மட்டுமின்றி, தமிழ்ப் பண்பாட்டைப் போல் தொன்மையும் சிறப்பும் கொண்ட சீனத்தைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்; அறிந்ததைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற தணியாத தாகமே இந்நூல் உருவானதற்கு முதல் காரணம். பண்டைய தமிழர்கள் கிரேக்கம், ரோமாபுரி, சீனம் ஆகிய நாடுகளுடன் வணிக அரசியல் உறவுகளை வளர்த்து வந்துள்ளனர். ஆனால், பிற மொழி இலக்கியம் தமிழுக்கு வரவில்லை. அதைப் போல் தமிழ் மொழி இலக்கியமும் அந்த மொழிகளில் சேரவில்லை. ஆனால், வடமொழி நூல்களை மட்டும் தமிழில் கொண்டு வந்துள்ளனர். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. சீனத்திலிருந்து மொழி பெயர்த்தது போல், தமிழின் உன்னத இலக்கியங்களை சீனத்துக்கு கொண்டு செல்லும் எண்ணம் உண்டா?அது அவ்வளவு எளிதான செயல் அல்ல. சீனத்தைக் கற்றுத் தேர்ந்தாலும், தமிழ்மொழி மீது நமக்கு ஆளுமை அதிகம்தான். மொழியாக்கம் செய்யும்போது, இரு மொழிகளிலும் போதிய அளவு ஆளுமைத் திறன் இருக்கவேண்டும். அப்போதுதான், தமிழிலிருந்து இதர மொழிக்குக் கொண்டு செல்வது எளிதாக அமையும். உங்கள் எதிர்காலத் திட்டம்?தமிழில் உள்ள இலக்கியம், இலக்கியம் சார்ந்த படைப்புகள், தகவல்கள், ஆகியவற்றை உலக அளவில் அறிந்து கொள்வதற்காக தகவல் தொகுப்பு (இன்ஃபர்மேஷன் பூல்) கொண்ட இணைய தளத்தை உருவாக்கவேண்டும் என்பது நோக்கம். அதற்காக தேர்ந்தவர்களை அடையாளம் கண்டு வருகிறேன். தமிழ் இலக்கியப் படைப்புகளை அப்படியே பதிவேற்றம் செய்யலாம். ஒருவேளை "காப்புரிமை' இருந்தால், அந்நூல் பற்றிய விவரத்தைத் தெரிவிக்கலாம். அல்லது குறிப்பிட்ட இணையதளத்தின் முகவரியைக் கொடுத்து, அதில் சொடுக்கினால், முழு நூலுக்குள்ளும் செல்லும் வகையில் பதிவு செய்யலாம். இப்படி பல யோசனைகள் இருக்கின்றன.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருத்து:
அருமையான தகவல்கள் அடங்கிய செவ்வி. என் வலைப்பூவில் பதிந்து சில குழுக்களுக்கும் அனுப்பும் ஆர்வத்தில் இருந்த எனக்குத் தினமணி இன்றுதான் மின்பதிப்பில் தருவது வருத்தமாக உள்ளது. இன்னும் சுறுசுறுப்பாகத் தினமணி செயல்பட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
நன்றி : தினமணி ஞாயிறு கொண்டாட்டம்
http://literaturte.blogspot.in/2012/03/blog-post.html
--
அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
பின்வரும் பதிவுகளைக் காண்க:
www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Thursday, March 1, 2012
Saturday, February 25, 2012
இலங்கைக்கு எதிரான ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் உத்தேசிக்கப்பட்டுள்ள நகல் யோசனைத் திட்டம்.!!!
இலங்கைக்கு எதிரான ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் உத்தேசிக்கப்பட்டுள்ள நகல் யோசனைத் திட்டம் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையே இலங்கைக்கு எதிரான தீர்மானமானத்தை நிறைவேற்ற இம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் சர்வதேச பிரகடனங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமானது.
குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்டம், அகதிகள் தொடர்பான சட்டம், மனித உரிமைச் சட்டம் பேன்றன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
இலங்கையின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு உதவியாக அமையும்.
எனினும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியவை.
சட்டவிரோத படுகொலைகள் தொடர்பில் விசாரணை நடத்துதல், வடக்கில் இராணுவ மயப்படுத்தலை தடுத்தல், காணிப் பிரச்சினை தொடர்பில் சுயாதீனமான பொறிமுறைமை ஒன்றை அமைத்து தீர்வு காணல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல், அதிகாரப் பகிர்வின் மூலமான அரசியல் தீர்வுத் திட்டம், கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
எனினும், பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளது.
குறிப்பாக சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படக் கூடிய வகையில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
1. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும். பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும்.
2. சர்வதேச சட்ட மீறல்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல் ஆகியன தொடர்பில் அடுத்த அமர்வுகளின் போது இலங்கை அரசாங்கம் விரிவான திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
3. மனித உரிமை மேம்பாடு தொடர்பில் இலங்கைக்கு ஆலோசனை வழங்குதல்.
ஆகிய முக்கிய காரணிகள் இந்த நகல் யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
உறுப்பு நாடுகளுக்கு இந்த நகல் யோசனைத் திட்டத்தை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
www.tamilenn.net www.jaffnawin.com www.tamilmemorials.com www.kusumbu.com

Wednesday, February 22, 2012
ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி இருக்கிறது. அதனை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது.!!!
பிப்.21 சர்வதேசத் தாய்மொழி தினம். (International Mother Language Day)
by.............V Siva...New zealand
ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி இருக்கிறது. அதனை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது. இளம் பருவத்தில் கல்வி என்பது தாய்மொழியில் இருந்துதான் தொடங்க வேண்டும். கல்வி என்பது வெறும் படிப்பு இல்லை. அது பண்பாடு, கலாசாரம், நாகரிகம், கலைஇலக்கியம், தத்துவம், இசை, நாட்டியம் என்று பலவற்றோடும் தொடர்பு கொண்டது. அதனைத் தாய்மொழி மூலமாகத்தான் எளிதாக அறிந்துகொள்ள முடியும். எனவே, ஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் சர்வதேசத் தாய்மொழி தினத்தின் முக்கியமான நோக்கம்.
சர்வதேசத் தாய்மொழி தினம் என்பது ஒரு தாய்மொழிக்கான தினம் இல்லை. ஒவ்வொரு தாய்மொழிக்கான தினம். அதிகமான மக்கள் பேசும் தாய்மொழி, குறைந்த எண்ணிக்கையிலான தாய்மொழி, எழுத்து கொண்ட தாய்மொழி, எழுத்து இல்லாத தாய்மொழி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. தாய்மொழி என்ற முறையில் எல்லா மொழிகளும் ஒன்றுதான். உலகத்தில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட தாய்மொழிகள் பேசப்படுகின்றன.
எல்லா மொழிகளும் ஒலிகள்தான். மனிதர்கள் வாய்வழியாக எழுப்பும் நாற்பத்திரண்டு ஒலிகள்தான் லட்சக்கணக்கான வார்த்தைகள் கொண்ட மொழிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. ஒரே கூட்டமாக வாழ்ந்த மக்கள் நல்வாழ்க்கையைத் தேடிச் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றார்கள். அதன் காரணமாகப் புதிய மொழிகள் தோன்றின. மக்கள் புலம் பெயர்ந்ததை ஆராய்ந்த அறிஞர்கள் ஒரே மொழியில் இருந்துதான் எல்லா மொழிகளும் தோன்றின என்கிறார்கள். அதற்கு ஆதாரமாக மனிதர்களின் உறவுச் சொற்கள் இருப்பதை எடுத்துக் காட்டுகிறார்கள். மனிதர்கள் புலம் பெயர்ந்த சரித்திரமும் தாய்மொழிகளின் சரித்திரமும் ஒன்றாகவே இருக்கின்றன.
இந்தியாவில் தாய்மொழிகள் பற்றிய கணக்கெடுப்பு 1881-ம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு முதன்முதலாக நடத்தப்பட்டது. குடும்பத்தில் பெற்றோர்கள் குழந்தைகளோடு பேசும் மொழிதான் தாய்மொழி என்று வரையறை செய்யப்பட்டது. அதன்படி இந்தியாவில் 872 தாய்மொழிகள் பேசப்படுகின்றன என்பது தெரிய வந்தது. நகரங்களைவிட வனங்களிலும், மலைப் பகுதிகளிலும் குழுக்களாகப் பிரிந்து வாழ்கின்ற மக்கள் அதிக எண்ணிக்கையில் தாய்மொழிகள் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தாய்மொழி பேச்சு மொழி. அவற்றுக்கு எழுத்துகள் கிடையாது. 1961-ம் ஆண்டு மக்கள்தொகை விரிவான கணக்கெடுப்பின்படி 1652 தாய்மொழிகள் பேசப்படுவது தெரிந்தது.
மனிதர்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தான கண்டுபிடிப்பென்பது மொழியும் எழுத்துந்தான். ஆனால், இரண்டும் ஒரே காலத்தில் கண்டறியப்பட்டதில்லை. மொழி, திருத்தம் பெற்று பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மொழியை எழுதும் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில மொழிகள் எழுத்தைப் பெற்றுத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டன. பண்டைய காலத்தில் எகிப்து, சுமேரியா, சிந்துவெளி மக்கள் தாய்மொழிகள் எழுத்தைப் பெற்று இருந்தன. அவர்கள் பிரமிடுகளிலும், பானை ஓடுகளிலும் எழுதி வந்தார்கள். பெரும் படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தபோது அவர்கள் தாய்மொழியும், எழுத்தும் அழிந்து போயின. பல நாடுகளில் அரசாங்கங்கள் சிறுபான்மை மக்களின் தாய்மொழிகளைத் திட்டமிட்டு அழித்தன. ஒரு நாடு என்பது ஒரு மொழி நாடுதான். அதில் இன்னொரு மொழிக்கு இடமில்லை என்பது கொள்கையாக இருந்தது. கல்வி வேலைவாய்ப்புகள், நிர்வாகம், சட்டம், நீதிக்கு பெரும்பான்மையான மக்கள் மொழிக்குத்தான் இடமளித்தார்கள்.
அதன் காரணமாகச் சிறுபான்மை மக்களின் தாய்மொழிகள் நெருக்கடிக்கு ஆளாகி அழிந்து விட்டன. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்பெயின், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டினர் கடல் வழியாகச் சென்று புதிய நாடுகளைத் தங்கள் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தார்கள். தொழில் புரட்சி மூலமாக வர்த்தகம் பெருகியது. மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குப் புலம் பெயர்ந்தார்கள். ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வட அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்கள். பல நூற்றாண்டுகளாகச் செவ்விந்தியர்கள், எஸ்கிமோக்களிடம் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு தங்களின் ஆட்சியை ஸ்தாபித்துக் கொண்டார்கள். அமெரிக்கா என்ற புதிய நாட்டை ஏற்படுத்தி, ஆங்கிலம் மட்டும் ஆட்சி மொழி என்றார்கள்.
செவ்விந்தியர்கள், எஸ்கிமோக்கள் பல நூற்றாண்டுகளாகப் பேசி வந்த ஐம்பத்திரண்டு தாய்மொழிகள் அழிந்து விட்டன. ஆஸ்திரேலியா ஒரு பழம்பெரும் நாடு. அதில் ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற பழங்குடி மக்கள் நாற்பதாயிரம் ஆண்டுகளாக இருநூற்றைம்பதுக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசிக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மொழிகளுக்கு எழுத்துகள் கிடையாது. எனவே பள்ளிக்கூடங்களில் அவர்கள் மொழிகள் கற்றுக்கொடுக்கப்படவில்லை. இங்கிலாந்தில் இருந்து புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கப் புறப்பட்ட கேப்டன் ஜேம்ஸ் குக், 1770-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கரையிறங்கி பிரிட்டிஷ் கொடியை நட்டு இங்கிலாந்தின் காலனி எனப் பிரகடனப்படுத்தினார். ஆங்கிலேயர்கள் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியா செல்ல ஆரம்பித்தார்கள். 1786-ம் ஆண்டில் இங்கிலாந்து சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போய் ஆஸ்திரேலியாவில் கரையிறக்கினார்கள். ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயக் குடியேற்றம் கைதிகளின் குடியேற்றந்தான். அவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கப் பள்ளிக்கூடங்கள் ஆங்கில மொழியில் தொடங்கப்பட்டன. பழங்குடி மக்களின் தாய்மொழிகள் அழிய ஆரம்பித்தன. 250 தாய்மொழிகள் புழங்கிய இடத்தில் பதினெட்டுத் தாய்மொழிகள் சிலரால் பேசப்பட்டு வருகின்றன எனக் கணக்கிட்டு இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் எங்கெல்லாம் காலனிகளை அமைத்தார்களோ அங்கெல்லாம் ஆட்சிமொழி, பள்ளிக்கூட மொழியாக ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் இருந்தன.
அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜமைக்கா நாடுகளின் தாய்மொழிகளுக்கு எழுத்துகள் இல்லை. எனவே பள்ளிக்கூடங்கள் இல்லை. அவை பிரிட்டிஷ் காலனியாக இருந்தன. எனவே ஆங்கில மொழி பள்ளிக்கூடத்தில் முதல் மொழியாகக் கற்பிக்கப்பட்டது. பழங்குடி மக்களின் தாய்மொழிகள் அழிந்துவிட்டன. அதுவே பிரெஞ்சு காலனிகளிலும் ஏற்பட்டது. போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து புறப்பட்ட வாஸ்கோடகாமா 1498-ம் ஆண்டில் கேரளத்தில் உள்ள கொச்சியில் வந்து கரையிறங்கினார். ஐரோப்பிய நாட்டினருக்குப் புதிய கடல் வழி தெரிந்தது. போர்த்துக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி அமைத்துக்கொண்டு வணிகத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் இருந்து மிளகு, துணிகள், முத்து, பவளம், அபின், நறுமணப் பொருள்கள் ஐரோப்பிய வணிகத்தில் முக்கியமாக இருந்தன. அதனால் இந்தியர்களில் சிலர் முதலில் போர்த்துக்கீசிய மொழி கற்றுக்கொண்டார்கள்.
பின்னர் பிரெஞ்சு, ஆங்கில மொழி கற்றார்கள். ஐரோப்பாவில் இருந்து வந்த வணிகர்களில் சிலரும் கிறிஸ்தவப் பாதிரியார்களில் பலரும், அதிகாரிகளில் சிலரும் தமிழ், சம்ஸ்கிருதம், இந்துஸ்தானி, தெலுங்கு, வங்காள மொழிகள் கற்றுக் கொண்டார்கள். வணிகத்திலும், மத மாற்றத்திலும் மொழிகள் முக்கியமான இடம் பெற்றன. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பெரும் பகுதியைத் தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். மொகலாயர்கள் ஆட்சியில் நிர்வாக மொழியாக இருந்த பாரசீகம் அகற்றப்பட்டது. நாட்டில் வாழ்ந்த உயர் வகுப்பினர்கள் சம்ஸ்கிருதம் படித்து வந்தார்கள். சிறுபான்மையான மக்கள் தாய்மொழியான தமிழ், தெலுங்கு, வங்காளம், இந்துஸ்தானி படித்து வந்தார்கள்.
அரசு நிர்வாகம் ஆங்கில மொழி வழியாக நடைபெற்று வந்தது. இந்திய மக்கள் பல தாய்மொழிகளைப் பேசி வந்ததால், எந்த மொழியில் இந்தியர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பது எந்த மொழியைக் கற்றுக்கொண்டால் அரசுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று ஆலோசனை செய்தார்கள். மெக்காலே இந்தியர்களுக்கு ஆங்கில மொழியில் கல்வி கொடுக்கவேண்டும். அது அவர்களின் பாரம்பரிய மரபுகளை அறுக்கவும், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கவும் உதவியாக இருக்குமென யோசனை கூறினார். கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பென்டிங் அதனை ஏற்று 1835-ம் ஆண்டில் ஆங்கில மொழியில் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். இந்தியா ஏராளமான மக்கள் வாழும் நாடாகவும், பல மொழிகள் கொண்ட நாடும் ஆகும். அதில் பெரும்பான்மையான மக்கள் கல்வி கற்க முன்வரவில்லை என்பதோடு, அரசாங்கத்தோடு எவ்விதமான தொடர்பும் இல்லாமல் தங்கள் தாய்மொழிகளைப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. அரசாங்க வேலைக்குச் செல்ல விரும்பியவர்கள் ஆங்கிலம் படிக்க முன்வந்தார்கள்.
பல்கலைக்கழகங்கள் பட்டம் கொடுத்தன. வேலை எளிதாகக் கிடைத்தது. தாய்மொழி படிக்காமல் பிற மொழிகளைப் படிக்கிறவர்கள் மீது சமூகவியல் அறிஞர்கள் குறைகூறியே வந்தார்கள். 1879-ம் ஆண்டில் "பிரதாப முதலியார் சரித்திரம்\' என்று தமிழில் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தாய்மொழி படிக்காமல் மற்ற மொழிகளைப் படிக்கின்றவர்களை அந்த மொழி புழங்கும் நாட்டுக்கே நாடு கடத்திவிட வேண்டுமென்று எழுதி இருக்கிறார். உ.வே. சாமிநாதையர் தாய்மொழியான தமிழ்ப் படிப்பைக் கைவிட்டுவிட்டு ஆங்கிலம் படிக்க சிலர் ஆலோசனையும், பொருள் உதவியும் செய்ய முன்வந்தது பற்றியும், அதனைப் புறந்தள்ளிவிட்டுத் தமிழ் படித்தது பற்றியும் "என் சரித்திர\'த்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகள் உதயமாயின. 1950-ம் ஆண்டில் இந்தியாவின் தேசிய மொழி தேவநாகரி எழுத்துகளில் எழுதப்படும் இந்தி மொழி. ஆங்கில மொழி பதினைந்து ஆண்டுகளுக்கு இணைப்பு மொழியாக இருக்கும். பின்னர் இந்தி மொழி மட்டுமே தேசிய மொழி என்று சட்டம் இயற்றினார்கள்.
அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானில் தேசிய மொழி உருது என்று சட்டம் ஏற்படுத்தப்பட்டது. அரசுப் பணிக்கான தேர்வுகள் உருது மொழியில் நடத்தப்படும் என்று உத்தரவு போடப்பட்டது. கிழக்குப் பாகிஸ்தானில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்களின் தாய்மொழி வங்காளம். மதம் ஒன்றாக இருந்தாலும், தாய்மொழியில் வேறுபட்டிருந்த அவர்கள், தாய்மொழிக்காகப் போராட ஆரம்பித்தார்கள். தாய்மொழிக்கான போராட்டத்தில் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னணியில் இருந்தார்கள். 1948-ம் ஆண்டில் பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக இருந்த முகமது அலி ஜின்னா டாக்கா சென்றார். தாய்மொழிக் கிளர்ச்சியாளர்கள் அவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். டாக்காவில் கர்ஸ�ன் அரங்கில் பேசிய முகமது அலி ஜின்னா, உருது மட்டுமே பாகிஸ்தான் ஆட்சி மொழி என்றார். தாய்மொழிப் போராட்டம் தீவிரமடைந்தது. வங்க மொழியை அரபு எழுத்துகளில் எழுத வேண்டும் என்று அரசாங்கம் ஆணையிட்டது. 1954-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி கிழக்குப் பாகிஸ்தானில் தாய்மொழிக்கான போராட்டம் பெருமளவில் தொடங்கியது. டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னணியில் இருந்தார்கள். பொதுமக்கள் ஆதரவு கொடுத்தார்கள்.
அரசாங்கம் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், கைது செய்தும் தாய்மொழிப் போராட்டத்தை அடக்கியது. ஆனால் தாய்மொழிப் போராட்டம் தனி நாடு போராட்டமாகியது. ஏராளமான மக்கள் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டார்கள். மக்களின் தாய்மொழிப் போராட்டத்துக்கு இந்தியா ஆதரவு கொடுத்தது. 1971-ம் ஆண்டில் மொழி அடிப்படையில் பாகிஸ்தான் உடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான், வங்க தேசம் என்ற சுதந்திர நாடாகியது. வங்க மொழி அதன் தேசிய மொழி. ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய "சோனார் வங்காளம்\' என்ற பாடல் தேசிய கீதமாகியது. தாய்மொழிக்கான போராட்டம், ஒரு தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்தது. இலங்கை, ஆங்கிலேயர்களிடம் இருந்து 1948-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. சிங்களவர்கள் அதிகம். மக்கள் தொகையில் தமிழர்கள் குறைவு. ஆனால் சிங்களம், தமிழ் மொழி இரண்டும் நெடுங்காலமாக இலங்கையில் பேசப்பட்டு வந்தன. இரண்டு தாய்மொழிகளும் எழுத்துகள் கொண்டவை. சுதந்திர இலங்கையில் இரண்டு மொழிகளும் ஆட்சி மொழியாக இருந்து வந்தன. 1956-ம் ஆண்டில் சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சி மொழி என பண்டாரநாயக அறிவித்தார். "சிலோன்\' என்ற பெயர் "ஸ்ரீலங்கா\' என பெயர் மாற்றப்பட்டது.
தமிழர்கள் தாய்மொழிக்காகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள். அது பெரும் போராட்டமாகியது. ஆயுதம் தாங்கிய தமிழர்களின் உள்நாட்டுப் போரை, இந்தியாவின் உதவியோடு ஸ்ரீலங்கா அரசு அழித்தது. ஸ்ரீலங்கா அரசு, தமிழில் பாடப்பட்டு வந்த தேசிய கீதத்தைப் பாடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் 23 தாய்மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அவற்றில் சக்தி பெற்ற தாய்மொழிகள் என்றால் ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சுதான். மற்ற தாய்மொழிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. தாய்மொழிக்கான போராட்டம் உலகத்தின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. தாய்மொழியை இழக்காமல் இருக்கவும், இழந்த தாய்மொழியை மீட்டெடுக்கவும் போராடி வருகிறார்கள். வங்க தேசத்தில் இருந்து கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்து வான்கூவர் வாசியான ரக்பி சாலமன், 1998-ம் ஆண்டில் ஐ.நா. சபையின் பொதுச்செயலருக்குச் சர்வதேச தாய்மொழிகள் தினம் கொண்டாட ஆவன செய்யுமாறு ஒரு கடிதம் எழுதினார். அக் கடிதத்தை, கனடா, வங்கதேசம், இந்தியா, பின்லாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்.
உலகத்தில் பல நாடுகளிலும் தாய்மொழிகள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன. ஒரு தாய்மொழி அழிவது கலாசாரம், பண்பாட்டின் அழிவு. எனவே, அதைத் தடுக்க தாய்மொழிகளைக் காப்பது அவசியமென ஐந்து நாட்டுப் பிரதிநிதிக்குழு ஆலோசனை கூறியது. அதை, ஐ.நா. சபையின் 188 நாடுகளும் ஏற்றுக்கொண்டன. 1999-ம் ஆண்டில் இருந்து சர்வதேச தாய்மொழிகள் தினம் உலகம் முழுவதும், வங்க தேசத்தில் தாய்மொழிக்காகக் கிளர்ச்சி தொடங்கிய பிப்ரவரி 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தன் தாய்மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் சர்வதேசத் தாய்மொழி தினத்தின் சிறப்பு அம்சம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.

Subscribe to:
Posts (Atom)