
From: Gopi krishna Kanagalingam
Date: Sat, 28 Mar 2009 16:01:31 +0600
Local: Sat, Mar 28 2009 12:01 pm
Subject: மஹிந்த சிந்தனை வரித் திட்டம் 2010
மஹிந்த சிந்தனை...
வரி விதிக்கும் திட்டம் 2010.
நாட்டின் பொருளாதாரம் நடுவீதிக்கு வந்து விட்டதால் அடுத்த வருடத்திற்கான
வரிவிதிப்புத் திட்டங்கள்.
ஒருவர் வரி விசாரணை செய்யப்படுகிறார்.
விசாரிப்பவர் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ர ஆலோசகருமான
திரு.பஷில் ராஜபக்ஷ.
(இவர் ஜனாதிபதியின்ர சகோதரர் எண்டு நான் சொல்லேல... சத்தியமா சொல்லேல...)
1) கேள்வி : என்ன செய்யிறாய்?
பதில் : வியாபாரம்.
வரி : வியாபார வரி கட்டு.
2) கேள்வி : என்ன வியாபாரம் செய்யிறாய்?
பதில் : சாமான் விற்கிறது.
வரி : விற்பனை வரி கட்டு.
3) கேள்வி : எங்கயிருந்து வியாபாரச் சாமான்கள வாங்கிறாய்?
பதில் : வெளிநாட்டிலயிருந்து.
வரி : பொது விற்பனை வரி, சுங்க வரி மற்றும் 'ஒக்ரோய் கட்டு. (Octroi)
4) கேள்வி : சாமான்கள விற்று என்ன கிடைக்குது உனக்கு?
பதில் : இலாபம்.
வரி : வருமான வரி கட்டு.
5) கேள்வி : இலாபத்த என்ன செய்யிறாய்?
பதில் : பங்குதாரருக்கு பிரிச்சு குடுக்கிறனான்
வரி : பங்கு வரி கட்டு.
6) கேள்வி : பொருட்களை எங்க உற்பத்தி செய்யிறாய்?
பதில் : தொழிற்சாலயில.
வரி : உள்நாட்டு உற்பத்தி வரி கட்டு.
7)கேள்வி : உனக்கு அலுவலகம், பண்டக சாலை, தொழிற்சாலை சொந்தமா இருக்கா?
பதில் : ஓம்.
வரி : மாநகர சபைக்கு வரி கட்டு. தீயணைப்பு வரி கட்டு.
8) கேள்வி : உனக்கு கீழ ஊழியர்கள் வேல செய்யிறாங்களா?
பதில் : ஓம்.
வரி : ஊழியர் சேவை வரி கட்டு.
9) கேள்வி : மில்லியன் கணக்கில வியாபாரம் செய்யிறியா?
பதில் : ஓம்.
வரி : பணப் புரழ்வு வரி கட்டு.
10)கேள்வி : வங்கியில இருந்து 1 இலட்சத்துக்கு மேல பணம் எடுப்பியா?
பதில் : ஓம்.
வரி : பண கையாளல் வரி கட்டு.
11)கேள்வி : ஊழியருக்கான சாப்பாட்ட எங்க வாங்கிறனீ?
பதில் : உணவு விடுதியில.
வரி : உணவு மற்றும் களியாட்ட வரி கட்டு.
12)கேள்வி : வியாபார விடயமாக வெளிநாட்டுக்குப் போறனியா?
பதில் : ஓம்.
வரி : வெளிநாடடு வியாபார வரி கட்டு.
13)கேள்வி : அரசாங்க சேவைகள பயன்படுத்திறியா?
பதில் : ஓம்.
வரி : சேவை வரி கட்டு.
14)கேள்வி : வியாபாரம் செய்ய முதல் எங்கயிருந்து கிடச்சது?
பதில் : பிறந்த நாள் பரிசா கிடச்சது.
வரி : நன்கொடை வரி கட்டு.
15)கேள்வி : ஏதாவது சொத்து இருக்குதா?
பதில் : ஓம்.
வரி : சொத்து வரி கட்டு.
16)கேள்வி : வியாபார உளைச்சல குறைக்க என்ன செய்யிறனீ?
பதில் : படம் பாக்க போவன்.
வரி : களியாட்ட வரி கட்டு.
17)கேள்வி : வீடு ஏதும் வாங்கினியா?
பதில் : ஓம்.
வரி : அஞ்சல் வரி, பதிவு வரி கட்டு.
18)கேள்வி : எப்பிடி பயணம் செய்யிறனீ?
பதில் : பேருந்து,
வரி : கூடுதல் கட்டணம் செலுத்து.
19)கேள்வி : பிள்ளைகள் படிக்கிறாங்களா?
பதில் : ஓம்.
வரி : கல்வி வரி, மேலதிக கல்வி வரி, உயர் கல்வி வரி கட்டு.
20)கேள்வி : முந்தி வரி ஏதும் கட்ட பிந்தினதா?
பதில் : ஓம்.
வரி : தண்டப்பணம் கட்டு, வட்டி கட்டு.
22)கேள்வி : ஏதும் கேக்க விரும்பிறியா???
பதில் : ஓம். என்னால இவ்வளவும் வரியும் கட்ட ஏலாது. நான் சாகலாமா?
வரி : பொறு. அண்ணாட்ட கேட்டு சொல்றன். அண்ணாக்கு ஈமச்சடங்கு வரி பற்றி
ஒரு எண்ணம் இருக்கு.
--
K.Gopi krishna.
----
http://tamilgopi.blogspot.com
No comments:
Post a Comment