இந்திய மருத்துவர்களின் கொடூரம்
புதுமத்தளான் பகுதியில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் புல்மோடையில் உள்ள இந்திய மருத்துவமணைக்கு செற்ற பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் கை மற்றும் கால்கள் அனாவசியமாக அகற்றப்பட்டுள்ளதாக அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறு காயங்களுடன் காணப்பட்ட இவ் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தகுந்த சிகிச்சை அளிக்காமல் அவர்களின் கைகள் கால்களை அகற்றிவருவதாக அங்கிருந்த மருத்துவத் தாதி ஒருவர் அதிர்வு இணையத்திற்கு அறியத்தந்துள்ளார்.
சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய காயங்களாக இருந்தாலும் மாறாக இந்திய மருத்துவர்கள் அதனை விடுத்து அவையங்களை அகற்றி வருவதாகவும் தெரிவித்த அவர், இதில் ஆளமான உள் நோக்கம் இருப்பதாக தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவ்வாறு நடைபெறுவதாக கூறப்படுகிறது. சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வரும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கே இவ்வாறு அவையங்கள் அகற்றப்படுவதாக அறியப்படுகிறது.
இதில் கொடுமையான விடையம் என்ன எனில் தமிழ் மக்களை கொன்றொளிப்பதை ஒரு புறம் இலங்கை அரசு மேற்கொள்ள, தமிழர்களை முடமாக்கி அவர்களை மீண்டும் போராட்டத்தில் இணைவதை திட்டமிட்ட வகையில் இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொள்கிறது.
புனிதமான வைத்திய தொழிலை அவமதித்து உயிர்காக்க வேண்டிய மருத்துவர்களே இவ்வாறு செயல்படுவது இந்திய அரசின் தமிழர் விரோதப்போக்கை நன்றாக உணர்த்தி நிற்கிறது.
http://www.paristamil.com/tamilnews/?p=1718
[ இந்த மின்னஞ்சல் www.odumnathi.blogspot.com என்கிற மின்னஞ்சல் திரட்டியில், திரட்டப்படுகிறது. ]
www.beyouths.blogspot.com
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment