மனித உரிமை போராளி அருந்ததி ராய்
அதியுச்ச மயான பயங்கரத்தை எட்டும் இலங்கைப் போர்: மனித உரிமை போராளி
அருந்ததி ராய்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2009, 08:29.31 AM GMT +05:30 ]
சுற்றும் புறமும் மயான மெளனம் காக்கும் காரணத்தையே சாதகமாக்கிக்கொண்டு அதி
பயங்கர உலுக்குங்கொடுமையொன்று இலங்கையில் நிகழ்ந்தே விடும் சாத்தியத்தில்
இருக்கிறது. உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான அருந்ததி
ராய் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான அருந்ததி ராய் இந்திய
நாளேடான டைம்ஸ் ஒஃப் இன்டியா இதழில் எழுதியுள்ள ஆய்வில் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார். அதன் முழுவடிவம் இதோ:-
அனேகமாக அங்கே நடக்கிற இந்த பாரிய கொடுமைகள் பற்றி இந்திய ஊடகங்கள் வாயே
திறப்பதில்லை என்றால் உலக ஊடகங்களும் இவ்விசயத்தில் இவற்றிற்கு
சளைத்தவைகளாக இல்லை. ஏன் இந்த அதர்ம மெளனம்?. இது மிகவும் கவலைக்குரியது.
மெல்லக்கசிந்துவரும் தகவல்கள் புலப்படுத்துவது யாதெனில் இலங்கை அரசு
"பயங்கரவாதத்துக்கெதிரான போர்" என்ற தொனியில் நாட்டின் மொத்த ஜனநாயக
கட்டமைப்புக்களையும் உடைத்து நொருக்கிவிட்டு தமிழ் மக்களுக்கெதிரான
சொல்லவொண்ணாத கொடுமைகளை தாராளமாக நிகழ்த்திகொண்டிருக்கிறது.
தாங்களே தங்களை நிரூபித்துக்காட்டும்வரை தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே
என்னும் கொள்கையுடன் அவர்களின் வாழ்விடங்கள், மருத்துவமனைகள், தஞ்சமடைந்த
தலங்கள் என பேதமின்றி குண்டுமழை பொழிந்து யாவற்றையும் போர்க்களமாக சிதைத்து
வைத்திருக்கிறது.
200,000-க்கும் மேலான மக்கள் இத்தகு அவலக்களங்களில் சிக்குண்டுள்ளார்கள் எனவும்
அவர்களை நோக்கி பல்குழல் உந்திகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் தரித்து வானூரும்
படையுதவ இலங்கை இராணுவம் முன்னேறிக்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டரங்கள்
தெரிவிக்கின்றன.
இதற்கிடயில் இடம்பெயரும் மக்களை குடியமர்த்த மன்னாரிலும் வவுனியாவிலும்
"நலன்புரி இல்லஙகள்" அமைத்திருப்பதாக அரசு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால்
அவ்வகை மையங்கள் யாவும் உயிருக்கு பயந்து தப்பிக்க நினைத்த மக்களை பலவந்தமாக
தடுத்து அடைத்து வைக்கப் பயன்படும் வதை மையங்கள் எனவும். இந்தக்கொடும் வதை
மையங்களுக்கு அரசு சூட்டியுள்ள கவர்ச்சிப்பெயர் தான் "நலன்புரி மையங்கள்' என
டெய்லி டெலெக்ராஃப் நாளேடு(ஃபெப் 14,2009) சுட்டிக்காட்டுகிறது.
அதே டெய்லி டெலிக்ராஃப் நாளேட்டில் இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்
மங்கள சமரவீர கூறுகையில்" அரசு சில மாதங்களுக்கு முன் கொழும்பில் வசித்து
வரும் அத்தனை தமிழர்களின் விவரங்களையும் பதிவு செய்தது, இந்த நடவடிக்கைகள்
நாஜிகள் 1930-ல் நடத்தியதியதைப்போன்று ஒரு கொடும் நோக்கத்துடனேயே நடந்துள்ளன.
அவ்வாறு பதியப்பட்ட விவரங்களைக் கொண்டே அவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என
எதிர்காலத்தில் அறிவிக்கும்
நோக்கிலேயே இப்பதிவானது நிகழ்த்தப்பட்டிருக்கிறது" என்றார்.
புலிகளை ஒழித்துக்கட்டுவது என்ற போக்கில் புலிகளோடு சேர்த்து உடனுறையும்
இலட்சக்கணக்கான மக்களையும் கொலைபுரியும் கொடும் மதி நோக்கில் முழுவளவிலான
இனப்படுகொலையை நடத்தி முடித்திடும் ஏற்பாட்டின் கடையெல்லையில் நிற்கிறது இலங்கை
அரசு.
பல்லாயிரகணக்கில் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் மேலும்
ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் ஐ. நா கூறுகிறது. நேரில் பார்த்த
ஒரு சில சாட்சிகளோ நரகத்தின் கொடுங்கனவே அங்கு நிகழ்வதாக பதைத்தோய்கின்றனர் .
இவ்வாறு நேரில் பார்க்கப்படுவதுவுமாக, செய்திகளாய் கேட்கப்படுவதுமாக,முழு
உலகின்
கண்களையும் திறமையாக மறைத்து அந்த நாட்டில் நடத்தப்படுவது பச்சையான,
வெளிப்படையான பேரினவாதப்போரேதான்.
தண்டிக்கப்படும் பயம் ஏதுமின்றி தமிழ் மக்களின் மேல்கட்டவிழ்த்துவிடப்படும்
இத்தகைய கொடுங்குற்றங்கள் மற்றும் அநீதிகள் தமிழர்களின் மீது சிங்களவரின்
அடிமனத்தில் புதைந்து கிடக்கும் வெறுப்பையும் காழ்ப்பையும் வெளிச்சம்
போட்டுக்காட்டுகின்றன். இதே காழ்ப்புண்ர்வுகள்தான் முதற்கட்டமாக தமிழ் மக்களின்
உரிமையை மறுத்து அவர்களை ஒதுக்கி அந்நியயப்படுத்தக் காரணமாக இருந்தன.
இப்பேரினவாதம் சமூக வெறுப்புகளில் தொடங்கி பொருண்மிய மறுப்புகளாக வளர்ந்து
திட்டமிட்ட படுகொலைகளாகவும் சித்திரவதைகளாகவும் ஒங்கி நின்றது.
அமைதிவழியில் அஹிம்சைப் போராட்டமாக தொடங்கி இன்று உச்சக்கட்ட ஆயுதப்போராக
வெகுண்டிருக்கும் இந்த யுத்தம் மேற்சொன்ன பேரினவாததில்தான்
வேர்பிடித்தது என்றால் அது சாலவும் உண்மை. நம் அண்டையில் இவ்வன்கொடும்செயல்கள்
நிகழ்ந்துகொண்டிருக்கும்போது இந்திய மக்கள் மத்தியில் ஏன் இந்த கண்டுகொள்ளாத
மயான மௌனம்?!.
இன்னொரு செவ்வியில் இலங்கையில் சுதந்திர ஊடகம் என்ற ஒன்று முற்றிலுமாக
அழித்தொழிக்கப்பட்டு இல்லாத ஒன்றாக (Non-Existent) ஆக்கப்பட்டுவிட்டது என
வெதும்புகிறார் சமரவீர. இது பற்றியான (ஊடக சுதந்திரம்) துளி கவலை கூட
இந்தியாவில் பரவவேயில்லையே?! மேலும் கொலைப்படையணிகள்(Death Squads) பற்றியும்
வெள்ளை வான் கடத்தல்கள்(White Van abductions) பற்றியும் ஆன கலவர நிலவரங்களை
பற்றியும் சமரவீர பேசுகிறார். அனர்த்தஙளை எதிர்த்த தலைவர்கள்,அநியாயங்களை
தட்டிகேட்ட ஊடகவியலார்கள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் கதை
முடிக்கப்பட்டுவிட்டார்கள். ஒட்டு மொத்த சமூகமும் உயிர் பயத்தில் உறைந்து
போயிருப்பதாக அவர் கூறுகிறார்.
மேலும் பயரங்கரவதத்துக்கெதிரான கறுப்பு சட்டங்கள்,காணாமல் போகச் செய்தல்,
படுகொலைகள் ஆகிய ஒருங்கிணைந்த மிரட்டல்கள் மூலம் இலங்கை அரசு
ஊடகவியலாளரின் குரல்வளைகள் நெரிப்பதாக அகில உலக ஊடகவியலார் அமைப்பு குற்றம்
சாட்டுகிறது.
இதேவேளை இந்திய அரசு ஆயுதங்களையும் தளபாடங்களையும் கொடுத்து மேலும் கொள்ளல்
மற்றும் வினியோக பணிகளில் உற்றுதவிவருவதாயும் கண்காணிப்பு மற்றும்
தொழினுட்பங்கள் வழங்கி இலங்கையின் மேற்சொன்ன அத்துமீறல் மற்றும் மனித
குலத்துக்கெதிரான போர்க்குற்ற்ஙக்ளுக்கு பங்குதாரர்கள் திகழ்வதாகவும்
அறியப்படுகிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன். அவை
உண்மையாயின் மரபழிந்த, கீழ்மை தங்கிய, பழி சுமக்கும், கொடூர செயல்களாக
குறிக்கப்படும்.
பாகிஸ்தானும், சீனாவும் கூட போட்டி போட்டுக்கொண்டு இந்த தகாத பாதக செயல்களுக்கு
துணைபோவதை எப்படி ஜீரணிப்பது. இந்தப்போரின் தாக்கத்தால் தமிழ்நாடு தன் உறவுகள்
கேட்பாரின்றி அழிக்கப்படுவதில் கொதித்து குமுறியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள்
தம்மைத்தாமே தீயிட்டு எரித்து மாய்ந்திருக்கின்றனர்.உண்மையான உள்ளக்கொதிப்பும்
உணர்வுகளும் மதிக்கப்படாமையினால் அடங்காத கொதிப்பு தேர்தலில் முக்கிய காரணியாக
ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது
இந்நிலை பற்றி சற்றும் கரிசனமோ கவலையோ இந்த நாட்டின் ஏனைய பகுதியில் பரவாதது
ஆச்சரிய அசாதாரணம்!. இங்கு யாரும் வெள்ளை வானில்
கடத்தப்படுவதில்லையே பிறகேன்?.இந்தப்பிரச்சனையை பேசினால் அப்படி என்ன
ஆகிவிடும்?
இலங்கையிலே நடக்கின்ற கொடும்செயல்களின் தன்மையையும் மிகப்பெரும்
தாக்குதல்களையும் மனிதப்பேரவலங்களையும் உணர்கிறபோது இந்த நாட்டில்
நிலவுகிற மௌனம் மன்னிக்க முடியாதது. அதிலும் கடந்த காலங்களில் இலஙகை தமிழ்
மக்களின் வாழ்வியல் பிரச்சனயில் இவர்கள் இப்பக்கம் அப்பக்கம் என தாவித்தாவி
பொறுப்பே இல்லாமல் இழைத்த சேதாரஙகளும் மன்னிக்க முடியாதவை.
இதே வேளையில் நிறைய பேசி செயல்பட்டிருக்கவேணடிய என்னைப்போன்ற பலரும் கூட
போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை என்ற அற்ப காரண்த்தினாலேயே
ஏதும் செய்யாமல் இருந்தது வேதனையானது.
ஆக அருகில் உள்ள ஒரு நாட்டில் ஆயிரக்கணக்கில் படுகொலைகள்
நடந்துகொண்டிருக்கிறபோதும், பத்தாயிரக்கணக்கில் மக்கள் முகாம்களில்
அடைக்கப்பட்டு வதைக்கப்படுகிறபோதும். மேலும் 200, 000-க்கும் அதிகமான மக்கள்
பட்டினியை எதிர் நோக்கும்போதும், எந்த நிமிடமும் அவர்கள் மீது பாரிய
இனப்படுகொலை நிகழ காத்திருக்கும்போதும் பேசாத கவலைப்படாத, பதைக்காத
பரிதாபப்படாத பிணம் போன்ற ஒரு அமைதி, மௌனம் கடைப்பிடிக்கப்படுகிறது
இந்தப்பெரு நாட்டில். இது மாபெரும் மனிதப்பேரவலம். ஒரு கணம் கூட தாமதம்
ஆகாது.உலகம் இதில் உடனே தலையிட வேண்டும்.
--
அன்பின்,
தமிழினி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment