WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Wednesday, November 12, 2008

TAMIL POEMS BY POET:VA.MU.SE.THIRUVALLUVAR

மியான்மார் திருநாடு -கவிதை கண்( வ.மு.சே.திருவள்ளுவர்(துயவன்)

விண்ணில் பறந்து சென்றோம்
வியக்கும் உறவு கண்டோம்
கண்ணீர் கசிந்து இன்பக்
கருனை மனங்கள் சேர்ந்தோம்
மண்ணின் மைந்தராய் எம்மோர்
மகிழ்வாய் கைலிகள் சட்டை
தன்னிகர் பர்மா நாட்டில்
தமிழும் தழைத்து வென்றே

நதியின் வளமை நன்றாய்
நாடும் ஐராவதி ஆறு
வீதியின் கொடுஞ் செய்கை
வீதியில் தமிழர் வாழ்வு
மதியில் நுட்ப நம்மோர்
மாத்தவ உழைப்பு மேன்மை
மியான்மர் திருமண் எழுச்சி
மகிழும் மாண்பு என்னே.

நாட்டுக் கோட்டை நல்லோர்
நாட்டிய உயர் கோயில்
மீட்டும் பொலிவு இன்பம்
மீட்கும் பக்தி முக்தி
கூட்டுக் குடும்பமாய் அன்பர்
குழுமி வாழும் நோன்பு
ஏட்டுக் குடிகள் யாங்கள்
ஏங்கி வணங்கி வந்தோம்.

அறிவில் சிறந்த சான்றோர்
ஆற்றல் இளைஞ ரேறு
நிறைவாய் செல்வர் தாமும்
நேயமாய் இணைந்து நன்றாய்
கரையே காணாத எங்கள்
கன்னித் தமிழ் செருசஞ்
முறைநெறி நிகழ்வு நாளும்
முளைத்து நடத்தி வென்றார்
தட்டோன் நகர மாத்தர்
தமிழைத் தோளில் தாங்கி
கட்டிய வள்ளுவர் கோட்டம்
காக்கும் தமிழர் மாண்பு
கூட்டியே தொழுது ஒன்றாய்
கூடியே நம்மறை ஒதும்
கேட்டுமெய் மறந்தோம் எம்மின்
வாழ்வின் பேறு பெற்றோம்.

தமஞ்ஞா மலையில் பௌத்த
துறவின் பேருடல் கண்டோம்
தமிழர் சேர்ந்து கூடும்
தகைமை தந்த ஏந்தல்
செம்மொழிச் செந்தமிழ் வாணர்
செறிவாய் இயல்இசை கூத்து
நம்முர் கிராமம் போன்றே
நன்கு முழங்கக் கண்டோம்

கொள்கைக் கோசிவ ராமன்
கொல்லும் புலால் நீக்கி
வள்ளலார் தொண்டர் பல்லோர்
வளமார் அருட்சலை மன்றம்

வெல்லும் சுத்தசன் மார்க்கம்
வேண்டும் அருட்பா பாடும்
நல்லூழ் வழியாம் நம்மோர்
நாட்டும் மகிமை கண்டோம்

தலைமைப் பெரியார் தொண்டில்
தக்கொர் இணைத்து வெல்லும்
உழைக்கும் நம்மோர் என்றும்
உயர்நெறி அண்ணா பற்றும்
கலைஞர் கைமமடலை நன்றாய்
கருத்தாய் உயர்நிலை மாட்டி
கலை உளம் காக்கும் தொண்டர்
கலைச்செல்வர்நீடு வாழ்க.

-----------------------------------------------------------------

தில்லியில் தமிழுக்கு மகுடம்-(கவிதை கண்-வ.மு.சே.திருவள்ளுவர்

தலைநகர் தில்லியில் கூடி நின்றோம்
தமிழின மேன்மையைக் காக்க வந்தோம்
கலைவளர் அறிஞர்கள் இணைந்து சென்றோம்
கன்னித் தமிழக்காய்த் தவம் இருந்தோம்

பட்டினிப் போரட்டக் களத்தில் நின்றோம்
பாட்டுடைப் பாவளர் இணைத் திருந்தோம்
வெட்டிப் பேச்சுனைப் கடந்து நன்றாய்
கொட்டி முழங்கிடும் களம் அமைத்தோம்

மன்றங்கள் பற்பல இணைந்து சென்றோம்
மனமாசுகள் யாவும் கடந்து சென்றோம்
நன்றறி நாயகர் கலைஞர் வழியில்
நாட்டிய கொள்கையின் உச்சம் கண்டோம்

அமைச்சர்கள் புடைகுழ நோன்பு நோற்றோம்
ஆர்வலர் கூடியே தவங்கள் செய்தோம்
குமைச்சல்கள் எம்மில் கடந்து வென்றோம்
கொள்கைத் தமிழுக்காய் வெற்றி கண்டோம்

ஈராயிரம் கற்கள் கடந்து சென்றோம்
இணையில்லாத் தமிழக்காய் ஏற்றம் கண்டோம்
சீராகத் தமிழச் செம்மொழி ஆக்கும்
சிந்தனைக்கே ஒருவழி அமைத்தோம்

உலகமே தில்லியை நோக்க வைத்தோம்
உத்தமர் வாஜ்பாய் அறிய வைத்தோம்
பலகட்சி உறுப்பினர் மனம் நேகிழ
பைந்தமிழ்ச் செம்மொழி களத்தை கண்டோம்

கட்சிகள் மறந்து ஒன்றாய் இணைந்தோம்
காக்கும் தமிழ்மொழி நிலை உரைத்தோம்
மாட்சிமை தாங்கிய மாமன்ற உறுப்பினர்
மாண்புடன் எம்மோடு அமரக் கண்டோம்.

தமிழ்நாட்டை நடையால் அளந்து வந்த
தமிழுக்காய் வாழும் பெருங்கவிக்கோ வழியே
அமிழ்தாய்த் தமிழர்கள் இணைந்து சென்றோம்
அன்னைத் தமிழக்கு மகுடம் வைத்தோம்.

திணணிய நெஞ்சினர் ஒன்றிணைந்தோம்
தீந்தமிழ் நினைப்பதில் பகை மறந்தோம்
எண்ணிய வண்ணம் செயல் முடிப்போம்
ஏற்றமாய் என்றும் தமிழ் வளர்ப்போம்

No comments: