WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, January 1, 2009

BLACK FLAG TO INDIAN PM ON JAN.2009 IN TAMILNAADU!!!

ஜன.8 இல் பிரதமருக்கு கருப்புக்கொடி!
பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு

ஜன. 8 ஆம் தேதி சென்னை வரும் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்டுவது என பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கோவையில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகம் ஒருமித்த கண்டனக் குரலை எழுப்பி வருகிறது. தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசு உடனே போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.

இவ்வளவுக்கும் பிறகு சென்னையில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான தமிழர்கள் அணிவகுத்து சிங்கள ராணு வத்தின் இனப்படுகொலைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை உண்மையாக வெளிப் படுத்தினர். பிறகு தமிழக நாடாளுமன்ற குழு - பிரதமரை சந்தித்து வற்புறுத்தியது.

இறுதியாக முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் டெல்லியில் பிரதமரை சந்தித்து வலியுறுத்திய பிறகும் இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை. தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதையும் தடுக்கவில்லை.

ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, பிரதமர் எந்த இணக்கமான முடிவும் எடுக்காமல், தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், பிரதமர் தமிழகம் வருவது - தமிழக மக்களைஅவமதிக்கும் செயலே ஆகும்.

எனவே 8.1.2009 அன்று சென்னை வரும் பிரதமருக்கு, தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திட, கருப்புக்கொடி காட்டு வது என பெரியார் திராவிடர் கழகம் முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெருமை சேர்க்கிறார், சிற்பி. ராசன்


2008 ஆம் ஆண்டுக்கான தலை சிறந்த 10 மனிதர் களில் பெரியார் திராவிடர் கழகத் தைச் சார்ந்த தோழர் சிற்பி. இரா சன் அவர்களை 'ஆனந்தவிகடன்' குழு தேர்வு செய் துள்ளது. கழகத் துக்கு பெருமை சேர்க்கும் சமூகப் புரட்சியை - அமைதியாக செய்து முடித்துள்ள தோழர் சிற்பி. இராசன் பற்றி 'ஆனந்த விகடன்' வெளியிட்ட செய்தியை பூரிப்புடன் வெளியிடுகிறோம்.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, சாமி களையே செதுக்கிச்செய்யும் சிற்பிகளை உரு வாக்கியவர் ராஜன். இவரும் சிஷ்யர்களும் செய்து அனுப்பிய சிலைகள் இன்று உலகம் எங்கும் பல கோயில்களில் அருள்பாலிக்கின்றன. இதுதான் மௌனப் புரட்சி. பெரியாரின் கருத்துக்களைப் படித்து வெடித்த வயதில்,தாகமும் கோபமுமாகச் சிற்பக் கலை பயின்றார். உலகம் அறிந்த சிற்பியாக உருவான பிறகு எடுத்தார் அடுத்த ஆயுதத்தை. 'கோயில் பிரவேசம், கர்ப்பக்கிரகத் தரிசனம் எல்லாம் இன்னும் மறுக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கைகள் செய்யும் சிலைகளே கோயி லுக்குப் போக வேண்டும்' என முடிவெடுத்தார். சுவாமிமலை அருகே உள்ள திம்மக்குடியில் ஆர்வம் உள்ள தலித் இளைஞர்களுக்குத் தங்க இடம், பயிற்சிகள் அத்தனையும் இலவசமாகத் தந்து, ராஜன் நடத்துகிற சிற்ப மையம், புரட்சியின் இன்னொரு களம். தனது உளியால் சமூகத்தைச் செதுக்கி வரும் ராஜன், கலைப் போராளி!

- நன்றி 'ஆனந்த விகடன்' 31.12.08


போராட்டங்களின் ஆண்டாகியது 2008


போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கைதுகள் என்று களப்பணிகளில் பம்பரமாகச் சுழன்ற பெரியார் திராவிடர் கழகம் மீண்டும் தன்னை செயல்படும் இயக்க மாக தமிழ்நாட்டுக்கு வெளிப்படுத்திய ஆண்டு 2008.
தமிழகத்தில் தொடர்ந்து மத மோதல்களை உருவாக்கும் வன்முறைகளை நடத்திய பாரதிய ஜனதா தனது மாநில செயற்குழுவை சேலத்தில், அதன் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் கூட்டியபோது, செயற்குழு நடக்கும் பகுதியிலேயே எதிர்ப்புப் போராட்டம் நடத்திய கழகம் ஈழத் தமிழருக்கு எதிராக அதிகார ஆணவத் திமிர் காட்டிய தமிழக காங்கிர° தலைமையகத்துக்கு அருகேயும் தமிழின உணர்வை போராட்டங்களாக வெளிப்படுத்தியது.

தமிழகத்தில் பயிற்சிக்கு வந்த சிங்கள ராணுவத்தை ஓட வைத்ததும், தீண்டாமை திமிர் பேசிய ஆதிக்க சாதியினரைப் பணிய வைத்ததும், கடந்த ஆண்டு கழகம் நடத்திய போராட்டங்கள்தான், அறிக்கை விளம்பரங் களில் தன்னை மூழ்கடித்துக் கொள்ளாமல், ஆக்கபூர்வ கள பணிகளில் அர்ப்பணித்துக் கொண்டுள்ள பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கடந்த ஆண்டு தொய் வின்றி தொண்டாற்றிய செயல்பாடுகளை இத் தொகுப்பு பட்டியலிடுகிறது.

பெரியாரின் எழுத்து பேச்சுகளைத் தொகுக்கும் மகத்தான கழகப் பணியை முடக்கிய திராவிடர் கழகத் தலைமை நீதிமன்றத்துக்கு ஓடிய வரலாற்றுத் துரோகம் நிகழ்ந்ததும், அதை கழகம் எதிர் கொண்டதும் இதே ஆண்டுதான்.

தமிழக காங்கிரசாரை மகிழ்விக்க அப்பட்டமான பொய் வழக்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், மணியரசனை கைது செய்து, பல வாரங்களாக சிறையிலடைத்து வைத்துள்ளது கலைஞர் ஆட்சி.
பிரச்சாரம், போராட்டம், களப்பணி என கடந்த ஆண்டு கழகம் கடந்து வந்த பாதையில் பதித்த சில முக்கிய சுவடுகளின் தொகுப்பு:

ஜனவரி

7 ஈரோடு மாவட்டம் நம்பியூரிலுள்ள திருமண மண்டபத்தை அருந்ததியர் சமூகத்தினருக்கு வாடகைக்குவிட மறுத்த தீண்டாமைக்கு எதிராக கழகம் களமிறங்கி, சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தை உருவாக்கி, கோபியில் மாபெரும் ஆர்ப்பாட் டத்தை நடத்தியது. போராட்டம் வெற்றி பெற்றது. ஆதிக்கசாதியினர் இறங்கி வந்து மறுக்கப்பட்ட அதே அருந்ததி தோழருக்கு மண்டபத்தை வாடகைக்கு வழங்க முன் வந்தனர். தீண்டாமைத் தடை தகர்ந்தது.

14 சென்னை வந்த குஜராத், பா.ஜ.க. முதல்வர் மதவெறியர் மோடிக்கு எதிராக கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பிப்ரவரி

3 இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ராணுவ உதவி செய்யக்கூடாது என்று ஜனவரி மாதத்திலிருந்து தமிழகம் முழுதும் பொது மக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தி - அந்த கையெழுத்துகளை டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியிடம் நேரில் அளித்ததோடு, டெல்லி நாடாளுமன்றத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் கழகம் நடத்தியது. 10 லட்சம் கையெழுத்துடன் 400 கழகத் தோழர்கள், தோழியர்கள் பிப்.3 ஆம் தேதி டெல்லி புறப்பட்டு, பிப். 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தி, 7 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சரை நேரில் சந்தித்து வற்புறுத்தினர். இந்தியா இலங்கை இராணு வத்துக்கு ஆயுதம் வழங்கும் துரோகத்தை முதன்முதலாக மக்கள் மன்றத்திற்கு இதன் வழியாக கழகம் அம்பலப்படுத்தியது.
தேசிய ஜிம்னா°டிக் போட்டியில் பங்கேற்று கேரளா சென்ற தமிழக அணியை அவமதித்தது மலையாள அணி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிப். 3 ஆம் தேதி பொள்ளாச்சியில் கராத்தே போட்டிக்கு வந்த மலையாள
அணிக்கு கழக சார்பில் கண்டனமும், ஆர்ப்பாட்டமும் நடத்தப் பட்டது.

4 கோபியில் சுற்றுச் சூழலைக் கெடுக்கும் 'வர்ணா பட்டுநூல்' தொழிற்சாலைக்கு எதிராக கோபியில் கழகம் ஆர்ப்பாட்டம்.

18 உடுமலை அருகே உள்ள சாளரப்பட்டி கிராமத் தில் அருந்ததியினர் மீது ஆதிக்கசாதியினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கழகம் பங்கேற்றது. இதே பிரச்சினைக்காக மதுரையில் பிப்.23 இல் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தேனியில் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துப் பெண்ணை, தேனி காவல் நிலையத்தில் காவல் துறையினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய குற்றத்தில் வழக்குப் பதிவு செய்யாத தேனி காவல்துறையைக் கண்டித்து, போராட்டம் நடத்தச் சென்ற கழகத் தலைவர், தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

மார்ச்

3 சிங்கள புத்த பிக்குகள் மரம் நடு விழா என்ற பெயரில் தமிழகத்தில் ஊடுருவ முயல்வதற்கு திருச்சியில் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

4 தில்லை சிற்றம்பல மேடையில் நீதிமன்ற அனுமதி யோடு தேவாரம் பாடச் சென்ற 80 வயது முதியவர் ஓதுவார் ஆறுமுகசாமியைத் தாக்கிய தில்லை தீட்சதப் பார்ப்பனர்களைக் கண்டித்து தில்லை நடராசர் கோயிலை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வலியுறுத்தி, சென்னை யில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மதுரையில் கழகம் மார்ச். 8 இல் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

11 இலங்கை ராணுவத் தளபதிகள் குன்னூர் அருகே பயிற்சிக்காக இந்திய ராணுவப் பள்ளிக்கு வரும் செய்தி அறிந்து, உடன் கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சிங்கள ராணுவத்தினர் பயிற்சி பெறாமல் ஆந்திராவுக்கு ஓடினர்.

15-16 சீர்காழி ஒன்றிய கழக சார்பில் கிராமங்களில் பிரச்சாரப் பயணம் நடந்தது.

18 இந்திய அரசுக்கு சொந்தமான அச்ச கத்தில் மலையாளிகள் ஆதிக்கம், தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு
களைக் கண்டித்து, கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம், போராட்டம் வெற்றி பெற்றது. அச்சகப் பணியாளர் தேர்வு நிறுத்தப்பட்டது.

28 தமிழக மேற்கு மாவட்டங்களில் தீண்டாமைக்கு எதிராக அருந்ததி யினர் எழுச்சிப் பெற்றுள்ளதற்கு பெரியார் திராவிடர் கழகம் முக்கிய பங்காற்றியுள்ளதாக 'பிரன்ட் லைன்' (மார்ச் 28) பத்திரிகை எழுதியது.

ஏப்ரல்

7 ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்காக கன்னட வெறியர்களைக் கண்டித்து பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப் பாட்டம்.

10 ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்த கன்னடர்கள், பெங்களூரில் தமிழ்ச் சங்கத்தின் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, சென்னையில் கன்னட நிறுவனங்கள் தாக்கப் பட்டன. தாக்குதலையொட்டி சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு வாரம் கழித்து பிணையில் விடுதலை யானார்கள். ஆனை மலையிலும், ப.குமார பாளையத்திலும் கழகம் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்திய அரசுக்காக தகவல் சேகரிக்க, மாநில உரிமைகளுக்கு எதிராக, ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசின் இருப்புக் காவல்படை (சி.ஆர்.பி.எஃப்) குவிக்கப்பட்டதை எதிர்த்து கழகம் முற்றுகைப் போராட்டம்.

14 கா.சு.புதூர் கிராமத்தில் சுகாதார பாதுகாப்பு கோரி பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வரை தூத்துக்குடி மாவட்டக் கழகம் சாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணத்தை நடத்தியது.

மே

3 மத்திய அரசின் சுங்கம் மற்றும் கலால் வணிக துறையில் மலையாளிகள் ஆதிக்கத்தை எதிர்த்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்.

6 பாதிக்கப்பட்ட சாளரப்பட்டி அருந்ததி மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்கக் கோரி, உடுமலையில் கழகம் ஆர்ப்பாட்டம்

17 கோவையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு விழா மாநாடு போல் நடந்தது.

20 மேட்டூரில் மாபெரும் நாத்திகர் விழா மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி எழுச்சியுடன் நடந் தது. கழகத்துக்கு 50000 நன்கொடை வழங்கியது.

30 குடந்தையில் நடிகவேள் நூற்றாண்டு விழாவை கழகம் எடுத்தது. கழகத்துக்கு ஒரு லட்சம் நன்கொடை வழங்கியது.

31 பயிற்சி முகாம்களை நடத்தும் திட்டத்தின் கீழ் இரண்டு நாள் பயிற்சி முகாம் புதுவையில் தொடங்கியது.
ஜுன்

7, 8 மேட்டூரில் சேலம் மாவட்டக் கழக சார்பில் இரு நாள் பயிற்சி முகாம் சிறப்புடன் நடந்தது.
சின்ன சேலம் கள்ளக் குறிச்சி ரயில் பாதையை மேலும் சுற்றுப் பகுதிகளுக்கு நீட்டிக்கக் கோரி சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்.

12 சென்னை சேத்துப்பட்டில் சட்டவிரோத கோயிலை எதிர்த்து கழகம் தொடர்ந்த வழக்கில் கோவிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

14 கழக மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுக்கு பாராட்டு விழாவையும், நாத்திகர் விழாவையும் சென்னை மாவட்டக் கழகம் நடத்தியது.

15 சென்னையில் கழகத்தின் செயற்குழு கூடியது. 'குடிஅரசு' தொகுப்புகளை வெளியிடும் திட்டங்களை உருவாக்கியது.

21, 22 கோபியில் ஈரோடு மாவட்டக் கழக சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் சிறப்புடன் நடந்தது.
காரத் தொழுவில் கழகம் மூட நம்பிக்கை ஊர்வலம்.

30 சாதி மறுப்பு திருமணத் தம்பதிகளை எதிர்த்த சாதிவெறியர்களுக்கு துணை போன ஈரோடு மாவட்டக் காவல் துறையைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்
ஜூலை

4 நிர்வாண சாமியார்கள் ஊர்வலத்தை எதிர்த்து சென்னை மாவட்டக் கழகம் போராட்டம்; சாமியார்கள் ஊர்வலம் ரத்தானது.

5-6 பூம்புகாரில் நாகை மாவட்டக் கழகத்தின் 2 நாள் பயிற்சி முகாம் சிறப்புடன் நடந்தது.
கேரளாவுக்கு மணல் கடத்துவதை எதிர்த்து ஆனைமலையில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அடுத்த இரு நாட்களிலேயே கேரளாவுக்கு மணல் கொண்டு போக அரசு தடை விதித்தது; போராட்டம் வெற்றி.

8 ரோகினி மில்° முன்பு கழக அமைப்பான பஞ்சாலை தொழி லாளர் சங்கம் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

12 மீனவர் படுகொலையைக் கண்டித்து பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி உருவ பொம்மை பொள்ளாச்சியில் கழக சார்பில் எரிப்பு.

17 விழுப்புரத்தில் நடிகவேள் நூற்றாண்டு விழா

22 ஜூலை 2 முதல் 27 வரை கழக முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம், தமிழகத்தில் பல்வேறு
ஊர்களில் பயணம் செய்து மாணவர்களை சந்தித்தது.

25 பெரியார் நூல்களை நாட்டுடை மையாக்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. சென்னை, சேலம், நெமிலி, திருப்பூர், தர்மபுரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், உடுமலை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல ஊர் களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

30 சென்னையில் கழக சார்பில் கலைவாணர் நூற்றாண்டு விழா.

ஆக°டு

26 மேட்டூரில் 'குடிஅரசு' 27 தொகுதி களை கழகம் வெளியிட்டது.

செப்

15 அண்ணா நூற்றாண்டையொட்டி கோவையில் 100 பேர் அண்ணா போல் வேடமணிந்து கழக சார்பில் ஊர்வலமாக வந்தனர்.

27 தொடர்ந்து மதக் கலவரங்களை உருவாக்கி வரும் பா.ஜ.க. மாநில பொதுக்குழு சேலத்தில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் கூடியபோது பல்வேறு மனித உரிமை அமைப்பு களை ஒன்று திரட்டி செயற்குழு கூட்டம் நடக்கும் மண்டபம் அருகே கழகம் போராட்டம் நடத்தியது. 250 தோழர்கள் கைது செய்யப்பட்ட னர். கழகத் தோழர்கள் மோட்டார் வாகனங் களை பா.ஜ.க. வினர் எரிக்க நிலைமை பதட்ட மானது.

அக்டோபர்

5 திருப்பூரில் பெரியார் அண்ணா சிலைகளை அகற்றக் கோரிய இந்து மதவெறி சக்திகளுக்கு எதிராக திருப்பூர் கழகத் தோழர்கள் பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தி கைதானார்கள்.

13 சிங்கள ராணுவத்துக்கு இந்தியா வழங்கிய படைக் கருவிகளை திரும்பப் பெற வற்புறுத்தி, சென்னை, சேலம், கோவை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் கழகம் ஆர்ப்பாட்டங்களை காயக் கட்டுகளுடன் நடத்தியது.

14 ஈழத்தில் சிங்கள ராணுவம் போரை நிறுத்தக் கூடாது என்று பார்ப்பனத் திமிரு டன் கட்டுரை வெளியிட்ட 'இந்து' நாளேட்டின் அலுவலகம் முன்பு கோவையில் கழகத்தினர் 'இந்து' ஏட்டைக் கொளுத்தி கைதானார் கள்.

24 சென்னையில் மனித சங்கிலியில் கழகம் பங்கேற்பு

27 தீபாவளி நாளன்று காலை 7 மணியி லிருந்து 11 மணி வரை சென்னையில் 'ஈழத்தில் ரத்தத்தில் வெடி குண்டு; தமிழகத்தில் சத்தத்தில் பட்டாசா' என்ற முழக்கத் தோடு, பெரியார் திராவி டர் கழகம் தோழமை அமைப்புகளோடு இணைந்து வீதி வீதியாக ஊர்வலமாக சென்று மக்களிடம் தீபாவளியை புறக்கணிக்க வேண்டு கோள் விடுத்தது.

30 ஈழத் தமிழர் அவலங் களை விளக்கிடும் 500 குறுந்தகடுகளை உடு மலை கழகத் தோழர்கள் இலவசமாக மக்களுக்கு வழங்கினர்.

31 ஈழத் தமிழர்களுக்காக புதுவையில் அமைதியாக உண்ணாவிரதம் இருந்தவர்களை மிரட்டி, வன் முறையில் இறங்கிய காங்கிர சாரை தட்டிக் கேட்ட புதுவை கழகத்தினரை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்து வழக்கு தொடர்ந்தது.

நவம்பர்

11 மயிலாடுதுறையில் கழகத் தோழர் கள், ராஜபக்சே உருவ பொம்மை களை எரித்து கைதானார்கள். சீர்காழியில் கிராமம் கிராமமாக வீடியோ காட்சிகளை கழகம் ஒளிபரப்பியது.
கோபியில் ராஜபக்சேயை பாடை யில் ஏற்றி ஊர்வலம் நடத்தி, உருவ பொம்மைக்கு தீயிட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

18 நவம்பர் 18 முதல் டிசம்பர் முதல் தேதி வரை 15 நாட்கள் தமிழக மாணவர் கூட்டமைப்பு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைப் பயணத்தில் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுதும் பயணக் குழுவினரை வரவேற்று கூட்டங்களை ஏற்பாடு செய்யும் கடமைகளை கழகத்தினரே ஏற்றனர்.

17 வி.பி.சிங்கை இழிவுபடுத்தி எழுதிய 'இந்தியா டுடே' பத்திரிகைக்கு செருப்படி தரும் போராட்டத்தை கோவையில் கழகம் நடத்தியது.

19 ஈரோட்டில் நடந்த ஈழத் தமிழர் படுகொலை கண்டன கூட்டத்தில் உரையாற்றியதற்காக காங்கிரசாரின் மிரட்டலுக்கு பணிந்து கலைஞர் ஆட்சி கழகத் தலைவர் கொளத்தூர் மணி த.தே.பொ.க. பொதுச்செய லாளர் மணியரசன், இயக்குநர் சீமான் ஆகியோரை 19 ஆம் தேதி கைது செய்து கோவை சிறையில் அடைத்தது.

டிசம்பர்

20 கைதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிர° கட்சி அலுவலகமான சத்திய மூர்த்தி பவன் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்ற 62 கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். அனை வரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு 22 ஆம் தேதி இரவு நிபந்தனை பிணை யில் விடுதலை செய்யப்பட்டனர்.

தடைகள் - கெடுபிடிகளுக்கு இடையே நிகழ்ந்த பரப்புரைகள்


பிப்ரவரி தொடங்கி, மே மாதம் வரை வாரத்துக்கு இரண்டு பிரச்சாரக் கூட்டங்கள் என்று திட்டம் வகுத்து பெரியார் சிந்தனைகளை மக்களிடம் இடைவிடாது பரப்புவதில் முனைப்போடு செயல்பட்டது திருப்பூர் பெரியார் திராவிடர் கழகம்.

சிற்பி ராசன் - மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சிகளை தோழர்கள் அழைத்த ஊர்களுக்கெல்லாம் சென்று நடத்தினார். சென்னையில் 11 நாட்கள் தொடர்ந்து அவரது நிகழ்ச்சிகள் நடந்தன.
திருப்பூர், கோவை, மயிலாடுதுறை, சீர்காழி, மேட்டூர், சேலம் நகரங்களில் 4 நாள், 5 நாள் தொடர்ந்து சிற்பி ராசன் நிகழ்ச்சிகளை கழகத்தினர் நடத்தினர். குழந்தைகள் - சிறுவர்களுக்கான பயிற்சி முகாமை, சென்னை மாவட்டக் கழகம் நடத்தியது.

சமர்பா குழுவினரின் எழுச்சி இசை நிகழ்ச்சிகள், மேட்டூர் 'டி.கே.ஆர்.' குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், காவை. இளவரசன் தூத்துக்குடி பால். அறிவழகன், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டன. 'குடிஅரசு' தொகுப்புக்கு முன்பதிவுத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களை இணைக்கும் பணியில் கழகத் தோழர்கள் கடும் உழைப்பை வழங்கினர். 'ஒப்பந்தங்களை சீர்குலைத்தது - யார்' நூலின் இரண்டாம் பதிப்பை கழகம் வெளிக் கொண்டு வந்து, மக்களிடம் பரப்பியது. மேட்டூரில் வெளியிடப்பட்ட 'குடிஅரசு' தொகுப்புப் பணியில் கழகத் தோழர்களின் உழைப்பு மதிப்பிட முடியாதது.

ஜனவரி 5 ஆம் தேதி சென்னையில் கழகம் ஏற்பாடு செய்த மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிக்கு இந்து முன்னணி இராம.கோபாலனின் மிரட்டலுக்கு பணிந்து கலைஞர் அரசு தடை விதித்தது. ஈழத் தமிழர் ஆதரவு பொதுக் கூட்டங்களுக்கும் கலைஞர் ஆட்சி தடை விதித்தது. புதுவையில் கழகக் கூட்டத்துக்கு அம்மாநில அரசு விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கழகம் வழக்கு தொடர்ந்தது. தடையை நீக்கி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

தடை நீங்கியதால் தொடர்ந்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியோடு கழகம் மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுக்கு பாராட்டு விழாவையும் சென்னையில் நடத்தியது.

திருச்சி விமான நிலையத்தில் கொழும்பிலிருந்து வந்த விமானம் தரை இறங்க விடாமல் தடுக்கும் போராட்டத்தை திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். தடைகளை எதிர்கொண்டு கழகம் பிரச்சாரங்களை கடந்த ஆண்டு நடத்தியது.

புதுவை கழகத்தின் சீரிய பணிகள்


டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்ற புதுவை கழகத் தோழர்கள் புதுவையில் பயிற்சி முகாம்கள் கலைவாணர் நூற்றாண்டு விழா, ஈழத் தமிழர்ஆதரவுக் கூட்டங்களை நடத்திய தோடு, புதுவை அடித்தள மக்களைப் பாதிக்கக் கூடிய தேங்காய்த் திட்டு துறைமுகத் திட்டத்தை எதிர்த்து, பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி, தொடர்ந்து போராட்டங்களை முன் னெடுத்து திட்டம் வரவிடாமல் தடுப்பதில் வெற்றி பெற்றனர். அதன் காரணமாகவே அவ்வப்போது காவல்துறையின் பழிவாங் கலுக்கு உள்ளாக்கப்பட்டாலும் புதுவைக் கழகம், நெஞ்சுரத்துடன் அவற்றை சந்தித்து உறுதியாக செயல்பட்டு வருகிறது.


தலையங்கம் - சரியான தீர்ப்பு!


பார்ப்பனப் பண்ணையமாய் திகழும் அய்.அய்.டி. நிறுவனத்துக்கு எதிராக முதன்முதலாக ஒரு சமூகநீதி தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இந்தியாவின் அனைத்து அதிகாரங்களையும் தங்களது பூணூலுக்குள் சுருட்டி வைத்திருப்பவர்கள் அய்.அய்.டி. நிர்வாகப் பார்ப்பனர்கள் என்பதை இந்தத் தீர்ப்பு வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. அய்.அய்.டி.யின் இயக்குனராக உள்ள எம்.எ°.அனந்த் எனும் அய்யங்கார் பார்ப்பனர் நியமன முறையே சட்ட விரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, முனைவர் ஈ.முரளிதரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளதோடு வழக்குச் செலவுக் காக இயக்குனர் எம்.எ°. அனந்த் ரூ.5000-த்தை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

1961 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சட்டத்தின் கீழ் இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் (அய்.அய்.டி.கள்) செயல்படுகின்றன. இந்த சட்டத்தின் 17(1)வது விதியின்படி இயக்குனர் தேர்வு நடைபெற வேண்டும். இதன்படி இயக்குனர் தேர்வு செய்யப்படவிருப்பதை அரசிதழில் (கெசட்) வெளியிட வேண்டும். பிறகு குடியரசுத் தலைவர் முன் அனுமதி பெற்று (அவர்தான் அய்.அய்.டி.யின் தலைவர்) குழு ஒன்றை நியமிக்க வேண்டும். அக்குழுவில் தொடர்புடைய துறையின் அமைச்சர், தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் இயக்குனர், பல்கலைக்கழக மான்யக் குழு தலைவர், விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆய்வு நிறுவனத்தின் மேலாளர் மற்றும் இயக்குநர், பெங்களூர் விஞ்ஞான கழகத்தின் தலைவர், மற்றும் முன்னாள் இயக்குநர், மத்திய அரசு நியமிக்கும்
3 பிரதிநிதிகள், மூன்று நாடாளுமன்ற உறுப் பினர்கள், தொழிற் கல்வி தொடர்புடைய மத்திய அரசு அதிகாரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற வேண்டும். இயக்குனராகும் தகுதியுடையோர் பட்டியலை குழு தயாரித்து, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு அறிவிக்க வேண்டும் என்பதுதான் சட்டம். இவ்வளவு கடுமையான தேர்வுமுறைகளை புறக்கணித்து சட்டத்தை மதிக்காமல், மனித வளத்துறை அமைச்சகத்தைச் சார்ந்த ஒரு சிறு செல்வாக்குள்ள குழுவே இயக்குனரை தேர்வு செய்துள்ளது. குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட தகவலில் குழு அமைக்கப்படாததும் சுட்டிக்காட்டப் படவில்லை. பார்ப்பனப் பண்ணையம் கேட் பாரில்லை என்பதுபோல் தொடர்ந்து நாட்டின் உயர்கல்வி நிறுவனத்தின் இயக்குனர்கள் நியமனம் நடந்து வந்துள்ளது.

பதவி தனக்குத்தான் கிடைக்கும் என்பதை உறுதியாக தெரிந்த எம்.எ°.அனந்த் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே நியமனத்துக்கான பத்திரங்களை வாங்கி வைத்துள்ளது நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு மோசமாக முறைகேடுகள் நடந்த நிலையிலும்கூட ஏதோ சில நிர்வாக நடைமுறைகளால் பதவி நியமனம் ரத்தாகிவிட்டதுபோல் பார்ப்பன ஏடுகள் எழுதி வருகின்றன. "இந்த இயக்குனர் மீண்டும் இப்பதவியை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு சூடாகவே காலியான இடத்தை அனந்த் வைத்துக் கொண்டிருந்தார்" என்று நீதிபதி சந்துரு தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தத் தீர்ப்பு இந்தியாவில் தற்போது இயக்குநர்களாக உள்ள அனைவருக்குமே பொருந்தக் கூடியதாகும். காரணம் அனைத்து இயக்குனர்களுமே கொல்லைப்புற வழியாகவே நுழைந்துள்ளனர். இது நாட்டின் மிகப் பெரிய மோசடியாகும்.
57 வயதுக்குட்பட்டவராகவே புதிய இயக்குநர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் மீறப்பட்டு 62 வயதுள்ள அனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே சட்டவிரோதமாக பதவி பெற்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இவர்கள் காலத்தில் நடந்த பேராசிரியர்கள் நியமனங்களை யும் ரத்து செய்ய வேண்டும். வெகு மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய தீர்ப்பை வழங்கிய நீதிபதியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. உறுதியோடு போராடிய முனைவர் முரளிதரன் அவர்களை பாராட்டுகிறோம்.


கொள்கையற்ற கட்டுப்பாட்டை சாடுகிறார் பெரியார்


2002 ஆம் ஆண்டு 'விடுதலை' ஞாயிறு மலரில் வாசகர் ஒருவர் கி.வீரமணியிடம் ஒரு கேள்வி கேட்டார். தோழர் என்று அழைப்பது பற்றிய கேள்வி இது. அந்தக் கேள்வியும், கி.வீரமணி தந்த பதிலும் இது தான்.
கேள்வி : கம்யூனி°ட் கட்சிகளில் தோழர் சங்கரய்யா என அழைக்கும் நிலை உள்ளது. அதுபோல நமது கழகத்திலும் நடைமுறைப்படுத்தப்படுமா?

வீரமணி பதில் : அவரவர்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. பிறரைப் பார்த்து காப்பியடிப்பது நமது வேலை அல்ல.

- இப்படி ஒரு பதிலை ஒரு பெரியாரியல்வாதி கூறுவது பெரியாரியலுக்கு எதிரானதேயாகும்.
1932 ஆம் ஆண்டிலேயே 'தோழர்' என்றே அழைக்க வேண்டும் என 'குடிஅரசு' பத்திரிகையில் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டவர் பெரியார். அந்த அறிக்கை இதுதான்.

"இயக்கத் தோழர்களும், இயக்க அபிமானத் தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால், பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக, "தோழர்" என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா-ள-ஸ்ரீ, திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, நீஜத் என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துப் பேசவோ, எழுதவோ கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன். 'குடிஅரசி'லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்".

- ஈ.வெ.ரா. (குடிஅரசு 13.11.1932)

- இப்படி தோழர் என்றே அழையுங்கள் என்று பெரியார் கூறியதை, இளம் தலைமுறையினரிடம் மறைப்பது பெரியாரியல் புரட்டு அல்லவா?


1932 இல் பெரியார் வலியுறுத்திய ஒரு கருத்து, ஏதோ கழகத்துக்கு தொடர்பே இல்லாதது போல் அது பிறருக்குரியது என்றும், அதை காப்பியடிக்க வேண்டாம் என்றும், அப்படி காப்பியடிப்பது நமது வேலை அல்ல என்றும் எழுதுவதற்குப் பெயர் என்ன?

இப்படி கேள்வி கேட்ட இளைஞர்கள் எல்லாம் 'குடிஅரசை' பார்க்கவா போகிறார்கள் என்ற நம்பிக்கை தானே? அப்படி இளைஞர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதால்தான் காலவரிசைப்படி முழுமையான பெரியார் தொகுப்பு வெளியிடுவதை, இவர்கள் தடுத்திட துடிக்கிறார்கள் என்பதும் இப்போது புரிகிறதா?
இப்படி பெரியாரியலுக்கு எதிராக வீரமணி எதை வேண்டுமானாலும் கூறினாலும் அதை கேள்விக்கு உட்படுத்தும் நிலையே அந்த அமைப்பில் இல்லை.

திராவிடர் கழகத்தில் வீரமணி - கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதைத் தட்டிக் கேட்டால், உடனே துரோகிகள் என்ற முத்திரையைக் குத்திவிடுவது அவரது வழக்கம். பார்ப்பன ஜெயலலிதாவை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதை 1996 இல் திராவிடர் கழகத்துக்குள் இருந்த இளைஞர்கள் கேள்விக்கு உட்படுத்திய போது வழக்கம்போல 'துரோகிகள்' பட்டத்தையே கி.வீரமணி சூட்டினார். ஒரு இயக்கம் கொள்கையை விட்டே விலகிப் போகும்போது, கட்டுப்பாடு பேசுவதில் என்ன அர்த்தமிருக்க முடியும் என்ற கேள்வியைத்தான் அன்று இளைஞர்கள் முன் வைத்தார்கள். கொள்கையா, கட்டுப்பாடா என்ற கேள்வி எழும்போது, கட்டுப்பாடு என்பதைவிட கொள்கைதான் முன்னுரிமை பெற வேண்டும் என்பதே சரியான பெரியாரியல் பார்வை.
பெரியார் காங்கிரசில் இணைந்து அதன் கொள்கைகளை நம்பி கடுமையாக உழைத்த தலைவர். கதர் மூட்டையைத் தெருதெருவாக சுமந்து விற்றார். நீதிமன்ற புறக்கணிப்புக்காக தனக்கு வரவேண்டிய பல ஆயிரம் ரூபாய்க்கான பத்திரங்களையும் உதறித் தள்ளினார். அதே பெரியார் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிர° ஏற்க மறுத்தபோது காங்கிரசு மாநாட்டிலே 'கலக'க் குரலை உயர்த்தினார். கி.வீரமணி வாதப்படி பார்த்தால் பெரியார் கூட காங்கிர° வலியுறுத்திய ஒற்றுமையை கட்டுப்பாட்டை மீறியவர்தான். அதற்காக பெரியாருக்கு துரோகி பட்டம் தந்துவிட முடியுமா? அது பெரியாரியல் அணுகுமுறையா என்று கேட்கிறோம். திராவிடர் கழகத்தில் வீரமணியால் வெளி யேற்றப்பட்டவர்கள் துரோகிகள் பட்டம் தரப்பட்டவர்கள்கூட வீரமணி அணுகுமுறையை கேள்வி கேட்டவர்களாகவே இருப்பார்களேதவிர, பெரியார் கொள்கைக்கு எதிராக செயல்பட்டவர்களாக இருப்பதில்லை. பெரியார் கொள்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டே கூட வீரமணி கூடாரத்தில் இருக்கலாம். ஒரு தடையும் இருக்காது. வீரமணி புகழ் பாடினால் யாரும் ஆதிக்கசாதி உணர்வாளராக இருக்கலாம். தலித் வெறுப்புள்ளவராக இருக்கலாம். அவையெல்லாம் பிரச்சினை அல்ல. ஈரோட்டில் தீண்டாமை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தை உருவாக்கி போராடியவர் தோழர் இரத்தினசாமி. அவர் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர். இப்போது திராவிடர் கழகத் தலைமை அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டது. காரணம் - அந்த சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தில் பெரியார் திராவிடர் கழகமும் இடம் பெற்றுள்ளது என்பதால் தான், தமிழ்நாட்டில் இன்னும் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடி வருகிறது. தலித் மக்களை அனுமதிக்காத கோயில்கள், கோயில் நுழைவுப் போராட்டங்களும்,இரட்டை தம்ளர் உள்ள தேனீர் கடைகளை எதிர்க்கும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

வீரமணியோ, அவரது 'விடுதலை'யோ இவைகளை எதிர்ப்பதிலோ, போராடுவதிலோ முனைப்புக் காட்டுவது இல்லை. அந்தக் கழகத்துக்குள்ளே ஓரளவு கொள்கை உணர்வோடு செயல்படும் இரத்தினசாமி களும் வெளியேற்றப்படுகிறார்கள். கேட்டால் 'கட்டுப்பாடு', 'ஒற்றுமை குலைவு' என்ற 'தாரக மந்திரத்தை' வீசி விடுவார்கள்.

கொள்கையற்ற ஒற்றுமை கட்டுப்பாடு பற்றி பெரியார் என்ன கூறினார்? இதோ அவரது கருத்து:
"ஒற்றுமையை உச்தேசித்து, கொள்கைகளை விட்டுக் கொடுத்தன் பலன்தான், மகாத்மா முக்காடிட்டு சங்கராச்சாரி போல் மூலையில் உட்கார நேர்ந்ததும் அவரது நடவடிக்கைகள் இப்போது ஒரு மடாதிபதி சம்பிரதாயம் போல் ஆனதும் மடங்களில் பலர் ஆஷாடபூதித்தனம் செய்து பெருமை அடைவது போல் காந்தி மடத்திலும் பல சா°திரிகள் போய் அமர்ந்து முக°துதி செய்து பெருமை பெற்று வாழ்வதுமான காரியங்கள் நடந்தது. காந்தி கொள்கைக்கு இருந்த மதிப்புகள் அடியோடு போய் காந்தி மடம் ஏற்பட்டதற்குக் காரணமே கொள்கையை விட்டுக் கொடுத்து ஒற்றுமையை நாடிய பைத்தியக்காரத்தனம்தான். மகான்களின் செயலில் பைத்தியக்காரத்தனமும் ஒன்றாதலால் மகாத்மா காந்திக்கு அது தகும். ஒரு சமயம் அதை மாற்றிக் கொள்ள அவருக்கு நம்பிக்கைப் பிறந்தாலும் பிறக்கும். நமக்கு அது தகாது. நமக்கு அந்த நம்பிக்கை இல்லை. கொள்கையை விட்டு இராஜியான ஒரு °தாபன மும் ஒரு மனிதனும் ஒரு நாடும் உருப்படியாகாது என்பது என் புத்திக்கு எட்டிய உறுதியான முடிவு."

பெரியார் - 'குடிஅரசு' 12.6.1927


- பெரியார் இவ்வளவு தெளிவாகக் கூறிய கருத்துகள் வீரமணியால், இளைய சமுதாயத்திடம் விளக்கப்படுவது இல்லை. காரணம், இந்தக் கருத்துகள் நூலாக அச்சேற்றப்படாததுதான். இதுவே - இவர்கள் பெரியாரியலைப் புரட்டுவதற்கும் திருப்புவதற்கும் வாய்ப்பாகி விடுகிறது.

கொள்கையற்ற ஒற்றுமை, கட்டுப்பாடு பற்றி பெரியார் கூறும் இந்தக் கருத்துக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


இயக்குநர் சீமான் வாகனம் எரிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் - கைது
சென்னை வளசரவாக்கம் இயக்கு நர் சீமான் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை நள்ளிரவில் காங்கிர° காரர்கள் எரித்துள்ளனர். செய்தி அறிந்ததும் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு 19.12.2008 வெள்ளிக் கிழமை காலை 11 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட் டிணன் தலைமையில் சீமான் காரை எரித்தவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத் தில் செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச் சாமி, மாநகர செயலாளர் வே.கோபால், மாநகர அமைப்பாளர் இ.மு.சாஜித், அலுவலகப் பொறுப்பாளர் சா.கதிர வன், பகுதி கழக தோழர்கள் அ.வகாப், செந்தில், காட்டூர் கார்த்தி, தமிழரசன், குமணன், ப. கண்ணன், வழக்கறிஞர்கள் பாலசந்தர், பார்த்தசாரதி, சூலூர் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் சகா. மணிகண்டன், பாலமுரளி, சிலம் பரசன் மற்றும் தமிழ் தேச பொது வுடைமை கட்சி கோவை பொறுப் பாளர்கள் தமிழரசன், சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து அனைவரையும் கைது செய்து பாப்பநாயக்கன் பாளை யத்திலுள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இரவு 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னையில்

20.12.08 அன்று சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள்
கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், எ. கேசவன், இரா. உமாபதி, பா. இராசன், ஆ. தமிழ்ச் செல்வன், சி.அருள்தாசு, நா. தினகரன், ந. அய்யனார், சொ. அன்பு, ரியா° பாசா, கோ. சீனு, ப. மனோகரன், சைதை இராசு, கலங்கரை ஓவி, நா. தஞ்சை தமிழன், பாவலர் கீர்த்தி, கி. முருகன், இளைய சிம்மன், வெங்டேசன் (ம.க.இ.க.), எம். கார்த்திக், பாண்டியன் (தமிழ் உரிமை மீட்பு இயக்கம்), கோ. தமிழரசு, சு. ஆனந்த், சு. பிரகாசு, ச. சரவணன், கு. சரவணன், ந. சுதாகர், ந. சுபாசு, எல். ரகுநாத், ம. கணேசன், பா. விஜி, இராவணன், சுகுமார், பொற் செல்வன், அருள், இராஜி, எ°. ராஜா, எ°. நாகராஜ், கன்னியப்பன், எம். கார்த் திக், எம். எட்டப்பன், வ. ரவிக்குமார், மு. சக்திவேல், கோதண்டன், வெங்கடேசு, நந்தா, வி.தீபக், மு. கண்ணதாசன், தமிழ்ச் செல்வன், ஜெயக்குமார், அப்பு, வி.ஜெய ராம், செயவேல், சுப்ரமணி, சுப்பு, பால சிங்கம், சக்திவேல், மனோஜ்குமார், மு. பைரவன், பி. சுரேஷ், கார்த்திக். இவர்கள் அனைவரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாள் மாலையிலும் அண்ணா சாலை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது நீதிமன்ற நிபந்தனை.

தூத்துக்குடியில்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதற்காக பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி மற்றும் திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி 1 ஆம் நுழைவாயில் காந்தி சிலை முன்பாக 19.12.2008 மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாநகர தலைவர் கோ. அ.குமார் தலைமை யேற்றார். ஆதித் தமிழர் பேரவை இரா.வே.மனோகர் ஆர்ப்பாட்டத் தினை தொடங்கி வைத்து தனது கண்டனத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து பெரியார் தி.க.வின் தூத்துக் குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி இரா.தமிழரசன், தலித்திய சமூக நீதி உரிமை பேரவை தவராசு பாண்டியன், மக்கள் குடி யுரிமை ஜனநாயகம் செ. பிரபாகர், மனித உரிமைப் பாதுகாப்பு மய்யம் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். கழகத் தோழர் தூத்துக்குடி பால். பிரபாகரன், காங்கிரசு கட்சியின் போலி தேசப் பற்றினையும் தமிழின விரோதப் போக்கையும், ஈழத் தமிழருக்கு இழைக்கும் துரோகத்தையும் விளக்கிப் பேசினார்.

நிறைவுரையாக மக்கள் உரிமைக் குழு வழக்கறிஞர் அதிசயக்குமார் காங் கிர° கட்சி மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோரைக் கண்டித்து வழக்கறிஞர் களாகிய எங்களுக்கே கருத்து சொல்ல உரிமை உண்டா என்று கேள்வி எழுப்பி தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார். இறுதியாக கழக மா நகர துணைத் தலைவர் சா.த.பிரபாகரன் நன்றி கூறினார்.

பாண்டு வாத்தியத்துடன் சிறை ஏகினர்


டிசம்பர் 19 ஆம் தேதி கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ. மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோர் கோவை சிறைக்கு காவல்துறை அழைத்து வந்தபோது ஒரே உணர்ச்சி வெள்ளம். பொதுச் செயலாளர் கு. இராமகிருட் டிணன், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் மற்றும் கோவை தோழர்கள் ஏராள மாகத் திரண்டிருந்தனர். திருப் பூர், பொள்ளாச்சி, பல்லடம் தோழர்களும் ஏராளமாக திரண்டு வந்திருந்தனர். பாண்டு இசை முழங்க மூவரும் சிறைக் குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நாள் - டிசம்பர் 19.

தொடர்ந்து இருவாரமாக சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

No comments: