WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, April 28, 2009

தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன்; அது அவர்களின்.....!!!



From: விஜி
Date: Mon, 27 Apr 2009 14:15:18 -0400

"அம்மா"ண்ணா சும்மா இல்லேடா!!

*அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன்; அது அவர்களின்
அன்னை பூமி!: ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்*
**
இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி;
அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும்
பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான்
சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல்
பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:


இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி,
இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார் [image:
biggrin.gif] [image: smile.gif] .


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை
நடத்துவதே இந்திய இராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும்
தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று
நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற?
உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி
அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார்


என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த
நடவடிக்கை?.


இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை
பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய இராணுவம் தங்களுக்கு
இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக
தெரிவித்திருக்கிறார்.


இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய
இராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய
இராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன
கருவிகள் எல்லாம் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தது.


வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள
தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை இராணுவத்திடம் இவ்வளவு காலமும்
இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா,
முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் இவ்வளவு
காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை.


இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை இராணுவம் இந்திய இராணுவம் அளித்த
புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று
முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை இராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும்
இந்திய இராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.


இந்தியாவில் இலங்கை இராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய
இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும்
பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்ச.


இலங்கை இராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது.
ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ
முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல
பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.


பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் இராணுவ உதவிகளை
புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய
அரசிடம் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத
கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில்
சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம்
இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?.


இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட
நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு
ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப
கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான்
பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.


இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன்
என்று நான் ...
--------------------------------------------------------------------
2009/4/27 விஜி



*அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன்; அது அவர்களின்
அன்னை பூமி!: ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்*



இந்தக்"காலம்" தான் எத்தனை சித்துவிளையாட்டுக்களைக்காட்டுகின்றது?

இந்திய அரசியல்வாதிகளை இனி நம்பவே கூடாது என்கின்ற அளவில் ஈழத்தமிழர்கள்
ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் காலம் காலமாக(எம்.ஜியார்/வைகோ விதிவிலக்கு)


எவையெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தோமோ அதன் தலைகீழ் வடிவத்தை காலம்
நகர்த்திச்சிரிக்கின்றது.


கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடங்கிய மகிந்த/மத்தியகாங்கிரஸ் அரசின் தமிழின
அழிப்பு யுத்தத்தில் இதுவரை 10,000ற்கும் மேற்பட்ட உறவுகளை இழந்திருக்கின்றோம்.
16000ற்கும் மேற்பட்ட உறவினர்கள் அங்கவீனர்களாகி அடைக்கலமில்லாமல் அநாதையாகி
இருக்கின்றார்கள்.


சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு இன்றைய இளம் தலைமுறை ஈழத்தின் இன்னல்களை
வெளிச்சம் போட்டுக்காட்டும் முகமாக போராட்ட வடிவம் வேறொரு பரிமாணம்
எடுத்திருக்கின்றது.


ஏதோ ஒரு காரணத்தால் அணைந்துபோயிருந்த தொப்புள்கொடி உறவுகளின் அன்புக்கு
மீண்டும் தன்னை வெளிச்சமாக்கி உறவினை ஏற்றிவைத்தான் தம்பி முத்துக்குமார். அதன்
பிறகு எத்தனையோ தீக்குளிப்புகள்.


இந்தத்தியாகங்களை எல்லாம் விளங்கிக்கொண்டால் எவரும் இங்கு அனாவசிய வார்த்தைகளை
அள்ளி வீசமாட்டார்கள்.


கோத்தபாய/உதயநாணயக்கார இவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போன்ற
சிலரின் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினாலும்!! 'வெற்றி ஒன்றே
எங்கள் இலக்கு என்கின்ற பாதையில் இவையெல்லாம் தூசுதான்.


!!அம்மா"...


உங்கள் சொல் செயல்வடிவம் பெற்றால் 'புரட்சித்தலைவரின் ஆத்மா உங்களை
வாழ்த்தும்.....அதுமட்டுமல்ல தன்மானத்தமிழர்களின் வரலாறு உங்கள் பெயரை நிச்சயம்
பொறிக்கும்!!..


தயவு செய்து இதை தேர்தலுக்கான பிரச்சாரமாக மட்டும் கொள்ளாது உணர்வோடு
செயலாற்றுங்கள்'

No comments: