கடின...உழைப்பு....!!! மே 22, வெள்ளி 2009
கடின உழைப்பு என்பது ஒரு நல்ல தொடக்கமும், முடிவுமாகும். கடினமாக ஒருவர் உழைத்தால், அவர் மகிழ்ச்சியாக இருப்பார்; அவ்வாறு அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அவர் கடினமாக உழைப்பார். சிறந்த கருத்துகளை நாம் செயல்படுத்தாதவரை அவற்றால் பலனில்லை. மனவலிமையும் கடின உழைப்பும் இல்லையென்றால் எப்பேற்பட்ட திறமையும் வீணாகிவிடும்.
உழைப்பின் உதாரணங்கள்:
ஒரு வாத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீரின் அடியில் ஓயாது காலால் உதைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீரின் மேல் அமைதியாகவும், சீராகவும் காணப்படும்.
ஒரு பறவையைய் எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை பறவைகளுக்கு உணவைத் தருகிறதே தவிர அவற்றை அதன் கூடுகளுக்கு கொண்டு செல்வதில்லை. பறவை காலை முதல் மாலை வரை அலைந்தே அதன் இரையைத் தேடுகிறது.
மில்ட்டன் தனது ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்ற காவியத்தை எழுதுவதற்காக தினந்தோறும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடுவாராம்.
'வெப்ஸ்டர்ஸ் அகராதியைய்’ தொகுப்பதற்காக நோவா வெப்ஸ்டர் 36 ஆண்டுகள் கடினமாக உழைத்தாராம்.
ஒரு வயலின் வித்துவான் தனது கச்சேரியை முடித்தவுடன், யாரோ ஒருவர் மேடையருகில் வந்து “உயிரைக் கொடுத்தாவது உங்களைப் போல வாசிக்கும் திறமையைப் பெற வேண்டும்” என்று சொன்னாராம். “நானும் அதைத்தான் செய்தேன்” என்று வித்வான் பதிலளித்தாராம்.
கடுமையான உழைப்பினால் விளைவதே மன எழுச்சி என்பதை உணர்ந்திடுவோம்!
அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு,
கொல்லி மலை சாரல்........... பொ. ஆனந்த் பிரசாத்.
கல்விச்சேவை anudhinam
ananthprasath@drcet.org
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment