கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தின் காரணமாக முடிவின்றி தொடரும் எமது விடுதலைப் போராட்டம்.
நாம் வாழ்ந்து வரும் இந்த பிரபஞ்சத்தில் சுமார் எழுநூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு இலட்சத்து அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட எமது உறவுகள் எல்லோராலும் கைவிடப்பட்டு மரணத்தை எதிர்பார்த்தவர்களாக வன்னியில் வாழ்ந்து வந்த நிலையில் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட பரம்பரை ஒன்று பயங்கரவாதத்தின் பெயரால் அழிக்கப்பட்டுவருவதை மனிதாபிமானம் பற்றி பேசும் உலக நாடுகள் வேடிக்கை பார்த்துவரும் அவலம் இன்று வன்னியில் அரங்கேறியிருக்கின்றது.
வன்னி மக்களை மீட்டு வசந்தத்தை வாரி வழங்குவதற்கான போர் என மகிந்ராசபக்சவினால் பிரகடனப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த இராணுவநடவடிக்கையில் ஆயிரக்கணக்கில் பலியாகியது என்னவோ தமிழ் மக்கள்தான்.
வன்னியில் இடம்பெற்றுள்ள இனப்படுகொலையை தடுத்து நிறுத்துமாறு உலகின் முக்கிய நாடுகளில் வாழ்ந்துவரும் புலம் பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பலவித போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணமுள்ளனர்.
இவ்வாறு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களால் தன்னெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அறவழிப்போராட்டங்களின் விளைவாக அந்தந்த நாடுகள் சார்பில் பலவித கோரிக்கைகள் சிங்கள அரசை நோக்கி விடுக்கப்பட்டு வந்தாலும் தமிழினப் படுகொலைகள் தங்குதடையின்றி நடைபெற்றுதான் வந்துள்ளது.
உலக நாடுகளது கோரிக்கைகளை ஒருபுறம் தள்ளிவிட்டு தமிழ்இனத்தை கருவறுக்கும் பணியில் தன்போக்கில் செயற்பட்டுவருகின்றது மகிந்தராசபக்ச தலைமையிலான சிங்கள அரசு.
சிறுவர் பாதுகாப்பிற்கும், மனித உரிமைகள் பாதுகாப்பிற்கும் என இன்னோரன்ன அமைப்புகளை உருவாக்கி அதனை ஒழுங்கமைத்து உலக அமைதியை உறுதிப்படுத்துவதற்கென்று அய்க்கிய நாடுகள் சபை செயற்பட்டுவருகையில் வன்னியில் தமிழினப்படுகொலைகள் தங்குதடையின்றி நடைபெற்றுவந்துள்ளமை வேதனை அளிக்கின்றது.
ஒருவரை ஒருவர் அடித்து தின்னும் பிறவிகளாக இருந்து பரிணாம வளர்ச்சியின் பயணாக இந்த மனித உருவெடுத்து நவநாகரீக உலகில் சஞ்சரித்து வாழ்ந்துவரும் வேளையிலும் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டுவருவதை இந்த உலகம் மௌனமாக வேடிக்கை பார்த்து வருகின்றது.
பொருளாதார இராணுவ வல்லமையில் மேலோங்கி காணப்படும் உலக நாடுகள் அண்ட வெளி ஆராய்சியில் போட்டி போட்டுக்கொண்டு அங்கும் உயிரினங்கள் ஏதாவது வாழ்கின்றனவா அல்லது வாழ்வதற்குரிய தட்ப வெட்ப சூழ்நிலைகள் நிலவுகின்றதா என அறிய முற்பட்டு நிற்கையில் உலகின் மூத்த குடியான தமிழினம் காலடியில் கொன்றொழிக்கப்படுவதை கண்டு கொள்ளாது இருப்பது மனித மான்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
மனிதாபிமான போர் என்ற முழக்கத்துடன் வன்னியில் ஆரம்பிக்கப்பட்ட போர் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான நடவடிக்கை என்றே ஆரம்பத்தில் கூறப்பட்டுவந்தது.
வன்னி பெருநிலப்பரப்பின் அனைத்து நகரங்களையும் சுடுகாடாக்கி அங்கு குடியிருந்தவர்களை கொன்று வீதியோர வாய்க்கால் வரப்புகளுக்குள் அரைகுறையாக அடக்கம் செய்தும் ஏனையவர்களை ஒருவேளை கஞ்சிக்கும் கையேந்துபவர்களாக காட்டுக்குள் விரட்டியடித்தும் வதைமுகாம்களிலும் சிறைவைத்தது சிங்கள அரசு.
மிகக்குறுகலான பிரதேசத்திற்குள் ஒரு இலட்சத்து அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நெருக்கப்பட்டிருந்த போதும் பயங்கரவாதத்தினை தோற்பகடிப்பதற்கான போர் என கூறிக்ககொண்டு அனைத்துலக எதிர்ப்புக்களை கண்டு கொள்ளாது பிராந்திய வல்லரசினது முழுமையான ஒத்துமுழைப்புடன் தனது இன அழிப்பு நடவடிக்கiயினை தடையின்றி மேற்கொண்டுவந்தது மகிந்தவின் சிங்கள அரசு.
இறையாண்மை பேசி ஓர் இனம் முற்றிலுமாக அழிக்கப்படுவதையே உலக நாடுகள் வேடிக்கை பார்த்து வருகின்றன.
அனைத்து உலக நாடுகளது பாதுகாவலன் தான் தான் என்று கூறிக் கொண்டு சாதாரன வாய்க்கால் வரப்பு பிரச்சினையில்; கூட தலையிட்டு கட்டைப்பஞ்சாயத்து செய்துவரும் அமெரிக்கா கூட ஈழத்தமிழர்களை திரும்பி;ப்பார்க்க மறுத்துவருகின்றது.
அமெரிக்காவும் அதன் தேமாழமை நாடுகளும் எமது பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தாமைக்கு அவர்களது சுயநலப்போக்கே காரணமாகும்.
முதலாலித்துவப் பொருளாதாரத்தில் முக்குளித்து மூச்சுத்திணறிப்போய் பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து விழி பிதுங்கி நின்ற வேளை இவர்களுக்கு மறுவாழ்வழித்தது செஞ்சீனமும், ரசியாவும் இந்தியா போன்ற நாடுகளும் தான்.
கொலை வெறியன் மகிந்த ராசபக்சவின் பின்னால் நின்று இன அழிப்பு போரை நடாத்திக் கொண்டிருப் பவர்கள் இந்த சீன, ரசியா, இந்தியா என்பதால் தான் அவர்களை மீறி ஏதாவது செய்து தமக்கான உதவிகள் தடைப்படுவதை விரும்பாது வெறும் பார்வையாளர்களாகவே கண்டன அறிக்கையும் வேண்டுகோள்களையும் விடுத்து வருகின்றன.
இந்துமா சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் அளவிற்கு பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இலங்கை விளங்கி வருகின்றமையே இத்தனை ஆண்டுகளாக எமது பிரச்சினை ஒவ்வொரு நாடுகளது நலன்களை மையமாக வைத்து இடியப்ப சிக்கலாக நீடித்துவருகின்றமைக்கு காரணமாகும்.
இலங்கையின் முக்கியத்துவத்திற்கு பிரதான காரணங்களுள் முதன்மையானதாக இயற்கைத்துறைமுகமான திருகோணமலை விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழத்தின் தலைநகராக முன்னர் கூறப்பட்டுவந்த திருகோணமலை துறைமுகத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நாடே இந்தப்பிராந்தியத்தில் சகலவித ஆதிக்கங்களையும் செலுத்தமுடியும் என்றால் மிகையாகாது.
பிராந்திய முக்கியது;துவம் வாய்நத திருகோணமலை துறைமுகத்தை இந்தியா சீனா ஆகிய நாடுகள் பகுதி பகுதியாக துண்டு போட்டு அனுபவித்து வருகையில் மன்னார் எண்ணைய் படுக்கையினை அகழும் உரிமைக்காகவும் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர்.
எது எவ்வாறு இருப்பினும் இலங்கை தீவின் முக்கியத்தினை நன்குணர்ந்த சீனா போரை நீடிக்க செய்து அதற்காக அனைத்து வகை போர் ஆயுதங்களையும் வழங்கி தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அன்;மையில்கூட அதிதாக்கு திறன் கொண’ட எப்-7 போர்விமானங்கள் ஆறினை சிறிலங்காவிற்கு வழங்கி தனது ஆதிக்கத்தினை உறுதி செய்துள்ளது.
வன்னியில் தமிழ் மக்களை கொன்றொழிப்பதற்கு இதுவரை பயண்படுத்தப்பட்டு வந்த யுத்தவிமானங்களது வருகையினை ஓரளவிற்கு மக்கள் அனுமானித்து பாதுகாப்பினை தேடிக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
ஆனால் சீனா தனது ஆதிக்கப் போக்கினை உறுதி செய்து கொள்வதற்காக தாராளமாக வழங்கிய எப்-7 யுத்தவிமானம் தாக்குதல் நடாத்திய பின்னரே அதன் வருகையை உணர்ந்து கொள்ள முடியும். ஆதனால் தற்போது எந்த நேரத்தில் என்ன ரூபத்தில் மரணம் ஏற்படும் என்ற மரணப்பீதியுடனயே இறுதிக்கணங்களை எதிரிகொண்டிருக்கும் அவலநிலையில் இருந்தனர் வன்னி மக்கள்.
இதைவிட சிறிலங்காவின் தென் கோடியில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை பல்லாயிரம் கோடி செலவில் சீனா கட்டியமைத்து வருகின்றது.
சீனத்துக்கு தேவையான எரிபொருள்களில் பெரும்பாலும் கடல் மார்க்கமாகவே அரபு தேசங்களில் இருந்து எடுத்து செல்லப்படுவது வழக்கம்.
இவ்வாறு நீண்ட தூர கடல் பயணத்தின் ஆபத்தினை உணர்ந்து கொண்ட சீனா மியான்மர், பாகிசுத்தான், வங்காளதேசு போன்ற நாடுகளிலும் இது போனறு துறைமுகங்களை அபிவிருத்தி செய்து வருகின்றது.
கடல்வழிப் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது இவற்றில் ஏதாவது ஒரு துறைமுகத்தில் உடனடியாக நிறுத்தி பாதுகாபினை உறுதி செய்து கொள்ள முடியும்.
மற்ற எல்லாவற்றையும் விட அம்பாந்தோட்டை துறைமுகமானது சீனபவினது கடல் போக்குவரத்து பாதைக்கு மிக அண்மையாக அமைந்துள்ளமை அதற்கு மேலும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
பாகிசுத்தானும் பத்து நாட்களுக்கு ஒருகப்பல் என்ற அடிப்படையில் போர்தளவாடங்களை தாரளமாக வழங்கி தமது ஆதிக்கநிலையினையும் உறுதி செய்து கொள்ள முயன்றுவருகின்றது.
இலங்கைக்கான பாகிசுத்தான் தூதுவராக முன்னர் செயற்பட்ட பசீர் வலி மொகமட் தான் இந்த உறவின் சூத்திரதாரி ஆவான்.
இவர் இலங்கையில் பணியாற்றிய காலத்தில்தான் பாகிசுத்தான் விமான ஓட்டிகள் யுத்த விமானங்களை இயக்கிவந்து தமிழின அiழிப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்டை நாடுகள் ஏட்டிக்கு போட்டியாக ஆயுத பொருளாதார உதவிகளை வழங்கி தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டி வருவதைக்கண்டு கலங்கிப்போன இந்தியா சாக்குப்போக்கு சொல்லி தமிழகத்து எதிர்ப்புக்களையும் மீறி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயுத உதவிகளை செய்துவருகினறது.
தாம் உதவி செய்யாது விட்டால் பாகிசுத்தான் அல்லது சீனா போன்ற நாடுகளிடம் பயங்கர ஆயுதங்களை வாங்கிக் கொண்டு அவர்களை அங்கு செயற்பட அனுமதித்தால் தமது பிராந்திய நலன் பாதிக்கப்பட்டுவிடும் என்று கூறிக் கொண்டு தாராளமாக தமிழின அழிப்பிற்கு உதவிகளை செய்து வருகின்றது இந்திய மத்திய அரசு.
வன்னியில் நிகழும் தமிழினப்படுகொலையை தடுத்துநிறுத்துமாறு கூறினால் அவர்கள் ஆயுதம் வழங்கி அழிப்பதை விட தாமே ஆயுதம் வழங்கி அழித்துவிடுகிறேன் என வியாக்கியானம் பேசி நிற்கின்றது காந்தி தேசம்.
இலங்கை;கான பிராந்தியப் போட்டியில் உலக வல்லரசான அமெரிக்காவும் களத்தில் இருந்தவரை இவர்கள் அடக்கித்தான் வாசித்தார்கள்.
அணுசக்தி ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் சம்பந்தியாகிய காரணத்தினால் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்துவருகின்றது அமெரிக்கா.
ஆசியப்பிராந்தியத்தில் சீனாவின் அசூரவளர்சியினை கண்டு அரண்டு போன அமெரிக்கா இந்தியாவை அரவணைத்து சீனாவின் எழுச்சியை தடுக்க முணைந்து நிற்கின்றது என்பதே உண்மை.
சீனாவிற்கும் ரசியாவிற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு இருப்பதாகவே நோக்கப்படுகின்றது. இரண்டு நாடுகளும் திரைமறைவில் பாரிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமது வல்லரசு ஆதிக்கநிலையினை உறுதிப்படுத்துவதற்கு எத்தனித்துவருகின்றன.
இதனால் கலக்கமடைந்த அமெரிக்கா இந்தியாவை அரவணைத்து செல்லவேண்டிய கட்டாய நிலையில் உள்ளமையினாலேயே எதையும் கண்டு கொள்ளாது வேடிக்கை பார்த்துவருகின்றது.
எல்லாவற்றையும் விட மேற்கத்தைய நாடுகளது உயிர் மூச்சான சந்தை வாய்பினையும் இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளமையினால் இந்தியாவினது எச் செயற்பாட்டிற்கும் அமெரிக்கா குறுக்கே நிற்க முனையாது.
மேற்கத்தைய நாடுகளது தயாரிப்புகளுக்கு போடடியாக மிகக்குறைந்த விலையில் எளிமையாக கிடைக்கக் கூடியவாறு சீனா பொருட்களை உற்பத்தி செய்து வருவதால் ஆட்டம் கண்டுள்ள மேற்குலகத்திற்கு இந்திய சந்தையே வரமாக உள்ளது.
இந்தியாவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளது உற்பத்தயினை தாராளமாக இறக்குமதிக்கு அனுமதித்திருப்பதனால் தான் உலக நாடுகளது குப்பைத் தொட்டிகளாக இந்தியா மாறிவருகின்றது என பொருளியல் வல்லுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் பகுதியை சுற்றிய பகுதியில் உக்கிரம் பெற்ற இறுதி யுத்தம் பெரும் மனிதப் படுகொலைகள் அரங்கேறிய வரலாற்று நிகழ்வாக அமைந்து உலகெங்கும் பரந்து வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களதும் ஆதரவாளர்களதும் நெஞ்சங்களிலும் தீராத ரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு இராணுவ முற்றுகைக்குள் இருந்த எஞ்சிய மக்களை பூண்டோடு அழிக்கப்பட்ட இறுதிப்போரின் விளைவாக இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தமது பூர்விக வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு சீரழிக்கப்பட்டு வருகின்றனர்.
பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளை தனியாக பிரித்து தனிமைப்படுத்தும் சிங்கள இராணுவம் அவர்களில் இருந்து முதலில் இளம் பெண்களை தமது பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அழைத்து செல்கின்றனர். தமது பாலியல் தேவைகள் நிறைவடைந்த பின்னர் கொன்று வீசிவிடுகின்ற கொடுமை தினமும் நடைபெற்றுவருகின்றது.
15வயதில் இருந்து 35வயது வரையான இளைஞர் யுவதிகளை கிளிநொச்சியில் உள்ள வீடுகளில் நிர்வாணப்படுத்தி கைகால்களில் விலங்கிட்டு அடைத்து வைத்திருப்பதுடன் ஒருவேளை உணவையே வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது போன்ற தனிமை சிறைகள் வன்னி பெருநிலப்பரப்பெங்கும் சிங்களப் படைகளால் உருவாக்கப்பட்டு இளைஞர் யுவதிகள் சித்திரவதை செய்யப்பட்டுவருகின்றனர்.
இளையவர்களுக்குதான் இந்நிலை என்றால் சின்னஞ் சிறார்களையும் பச்சிளம் பாலகர்களையும் தாய் தந்தையர்களிடம் இருந்து பிர்த்து தனிமை சிறையில் வைத்துள்ளனர்.
சுட்டெரிக்கும் வெய்யிலில் ஒதுங்குவதற்கு ஒரு மரம் கூட இல்லாத வெட்டவெளியில் சுற்றிவர முட்கம்பி வேலியால் அடைக்கப்பட்ட வதை முகாம்களில் ஒருவேளை கஞ்சியை மடடும் வழங்கி வருகின்றது கொலைவெறி சிங்கள அரசம் அதன் படைகளும்.
இவர்கள் பால்யபருவத்தை அடைந்து உரிமை கேட்டு போராட புறப்பட்டுவிடுவார்களோ என்ற பயத்தினாலும் இனிமேல் யாரும் தமக்கெதிராக போராட்டக்கத்தில் குதிக்கக் கூடாது என்பதற்காகவுமே ஏதுமறியா பிஞ்சுக் குழந்தைகளும் வதைக்கப்படுகின்றனர்.
காயமடைந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈழத்தமிழர்களுக்கு இலவச கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து வருகின்றது சிங்கள அரசு.
மக்களிற்கு மருத்துவ சேவை செய்ய சென்ற இந்திய மருத்துவக்குழுவினரும் தமது பங்கிற்கு சிறுகாயங்களுடன் சிகிச்சைக்காக வரும் தமிழர்களது கை கால்களை முழுவதுமாக அகற்றி நிரந்தர அங்கவீனர்களாக்கி வருவதாக வரும் செய்திகளையும் மறுப்பதற்கில்லை.
அரச கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்தவர்களது நிலை இவ்வாறு இருக்க தமிழீழ விடுதலைப்புலிகளுடன் வாழ்ந்து வந்த ஒரு இலட்சத்து அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பட்ட இன்னல்களும் சொல்லில் வடிக்கமுடியாதவை.
தினம்தோறும் ஓய்வு ஒழிச்சலின்றி ஏவப்படும் ஆட்லெறி பீரங்கி குண்டுகளாலும் பல்குழல் றொக்கட் குண்டுகளாலும் வெள்ளை பொசுபரசு குண்டுகளாலும் கொத்தணி குண்டுகளாலும் ஈழ மண் சல்லடை போடப்பட்டுவருவது போதது என்று வல்லரசு நாடுகள் வழங்கிய மிகை ஒலி விமானங்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கிலான குண்டுகளை பொழிந்து சின்னாபின்னமாக்கி வந்தது சிங்களப்படை.
சிங்களப்படைகளால் ஏவப்படும் பீரங்கி குண்டுகள் வீழ்ந்து வெடிப்பதை வேடிக்கை பார்க்கும் நிலையில் வன்னி சிறுவர்கள் இசைவாக்கம் அடைந்திருந்தமைதான் கொடுமையிலும் கொடுமை. தொடர்ச்சியான பீரங்கி தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதல்களால் செவிப்பறைகள் சிதறடிக்கப் பட்டுள்ளமையின் விளைவே இந்நிலைக்கு காரணமாகும்.
தமிழீழ விடுதலைப்பலிகள் தம்மால் சேகரித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்டு மக்களிற்கு கஞ்சியைதானும் வழங்கி இறுதிவரை ஓரளவிற்கு அவர்களது வயிற்றை நிரப்பிவந்துள்ளனர்.
இரவுபகல் பாராது சிங்கள இராணுவத்தால் வல்லரசு நாடுகள் வழங்கிய ராடர் மற்றும் உளவு விமானங்கள் மூலமாக குறிபார்த்து ஏவப்படும் கொடிய குண்டுகளால் ஒட்டு மொத்தமாக கொன்றொழிக்கப் பட்டுள்ளனர் ஈழத்தமிழ் மக்கள்.
அனைத்துலக போர் விதிகளை மீறி காயமடைந்து உயிர்பிழைக்க காத்திருந்த இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக இடம் பெற்ற தாக்குதல்களில் சிக்கி அத்தனை பேரும் செத்துமடிந்த போதும் மனிதநேயம் பேசும் நாடுகள் செயற்கை கோள்களினூடாக பார்த்து ரசித்துக் கொண்டுதானே இருந்தனர்.
எமது விடுதலைப் போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதற்கு ஏதுவாக களத்தின் இறுக்கமான முற்றுகையை உடைத்து உக்கிரமாக களமாடி தேசியத்தலைவரையும் ஒப்பற்ற தளபதிகளையும் வெளியேற்றி வீரஞ்செறிந்த போர் புரிந்து வரலாறாகிப் போன மாவீரர்களை என்றென்றும் போற்றுவோம்.
தலைவனும் தளபதிகளும் பாதுகாப்பான தளம் நோக்கி நகர்ந்த போதும் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மக்கள் நலன் கருதி களத்தில் விட்டுதான் சென்றிருந்தனர்.
இறுதிப்போரின் சாட்சியங்களை தமது மேனிகளில் சுமந்தவாறு பரிதவித்த சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும் அவர்களுக்கு அரணாக விளங்கி விழுப்புண் அடைந்த மூவாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றி சிகிச்சை அளிப்பதற்காக உச்சக்கட்ட முயற்சியில் ஈடுபட்டிருந்த தலைவர்களை நயவஞ்சகமாக கொன்று வீழ்த்தி மனித நாகரீகத்தையே கேள்விக்குறியாக்கியது சிங்களப்படை.
சமாதானம் பேசி நின்ற அனைத்துலக நாடுகளை தொடர்பு கொண்டு அவசர நிலையினை விளக்கிகூறி உதவி செய்யுமாறு மண்றாடி நின்றனர் எமது வீரத்தளபதிகள். களத்திலே பகையை புறமுதுகிட்டு ஓடவைத் வீரத்தளபதிகள் மக்களது நலன் காக்க இரந்து நின்றனர். இறுதியாக காந்திதேசத்தையும் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக ஏற்படுத்தப்பட் இணக்கப்பாட்டின் அடித்தளத்தில் வெள்ளைக் கொடிபிடித்து சமாதானத் தூதுவர்களாக சென்ற வேளையிலே இவ்அனாகரிக செயல் இடம் பெற்றுள்ளது.
இத்துடன் நின்றுவிடாது காயமுற்று முனகியவாறு இருந்த மக்களை கவசவாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களால் ஏறிமிதித்து குரூரகொலை களமாக மாற்றியதுடன் எவ்வித தடயமும் இல்லாது இரசாயன துகள்களை வீசி சாம்பல் ஆக்கியுள்ளது சிங்கள பேரினவாத பேய்கள்.
வீரம் செறிந்த போர்க்களங்களில் சமராடி விழுப்புண்அடைந்த புலிப்போராளிகளை சுற்றிநிண்று சுட்டுக் கொன்று வேட்டை நாய்களாக மாறி குதறி அனைத்துலக போர்மரபுகளையும் அந்தக் களத்தில் அடக்கம் செய்துள்ளது சிங்களப்படை.
சிங்களப் பேய்ப்படைகளின் கொலைவெறியாட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த முள்ளிவாய்க்கால் களமுனையில் கூட தமிழீழ விடுதலைப்புலிகளது மனிதனேயம் சிகரம் தொட்டு நிற்கின்றது.
பல்வேறு சந்தற்பங்களில் யுத்தகளத்தில் கைதுசெய்யப்பட்ட ராணுவவீரர்களையும் படுகாயமுற்ற நிலையில் சக படையினரால் கைவிடப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரையும் இதுநாள்வரை எவ்வித ஆபத்தும் நேராது பாதுகத்தேவந்துள்ளனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.
சண்டை உக்ரமடைந்த பல காலகட்டங்களில் அவர்களையும் பாதுகாப்பாக இடம் மாற்றி தீங்கு நேராது பார்த்துக் கொண்ட விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் இறுதிக்களத்தில் எல்லேரிற்கும் மரணம் நிற்சயம் என உணர்ந்த பின் அவர்களை மக்களுடன் மக்களாக வெளியேற அனுமதித்ததன் முலம் போர்க்கள மனித நேயத்ததையும் விஞ்சி நிற்கின்றனர்.
தம்மிடம் உயிருடனனோ பிணமாகவோ அகப்படும் புலிவீரார்களை அதுவும் பெண்புலிகளை கொடூர சித்திர வதை புரிந்து அதனைக் காட்சிப்படுத்தி வக்கிரத்தனம் செய்யும் சிங்களக்கயவர்களையும் மன்னித்து உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சர்வதேசப்போர் மரபுகளுக்கே பெருமை சேர்த்துள்ளனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.
தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டதாக சிங்கள அரசதரப்பு வெளியிடும் செய்திகளை அப்படியே உள்வாங்கி வாந்தி எடுத்து மீண்டும் மீண்டும் செய்தி வெளியிட்டு வரும் பெரும்பாலான கானொளி, அச்சு ஊடகங்கள் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்து தமது ஊடக தர்மத்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஒரு சம்பவத்தில் மாத்திரம் அல்ல பல தடவைகள் போர்க்கைதிகளாக அகப்பட்ட சிங்கள ராணுவ வீரர்களை சகல மரியாதைகளுடனும் பராமரித்து அவ்வப்போது ஏற்பட்ட உடன்பாடுகளை அடுத்து விடுவித்து அவர்களது குடும்பத்தினருடன் இணைய சந்தற்பம் வழங்கியிருந்தனர்.
தமது மரணம் உறுதியாகிவிட்ட நிலையில்கூட போர் மரபிற்கமைய செயற்பட்ட புலி வீரர்கள் இன்றும் அனைத்துலகத்தால் பயங்கர வாதிகளாக சித்தரிக்கப்பட்டு வருவதுடன் அனைத்துலக போர் விதிகளையும் மீறி மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி அதன் சாட்சியங்களையும் அழித்து வரும் சிங்களப்படை வீரர்களை வெற்றி வீரர்களாகவும் பாரட்டி வருவதன் மூலம் வன்னியில் அரங்கேறிய தமிழினப் படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்டுவந்தமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போதோ அல்லது இறுதிப்போரின் போது இடம் பெற்ற இனப்படு கொலைகளுக்கான சாட்சியங்களை கைவசம் இருந்தும் அனைத்துலக நாடுகள் ஏன் அய்க்கிய நாடுகள் சபையால் கூட சிறிலங்கா அரசை தடுத்து நிறுத்தவோ தட்டிக்கேட்கவோ முடியாது வெறும் கண்டனங்களையும் கவலைகளையும் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.
அய்க்கிய நாடுகளது பாதுகாப்பு சபையில் தீர்மாணம் நிறைவேற்றி ஒருமித்த கருத்து ஏற்பட்டால்தான் அய்க்கிய நாடுகள் சபை இயங்கு நிலைக்கு வரும் என கண்ணாம் மூச்சி ஆடிக் கொண்டிருப்பதைவிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து எஞ்சியிருக்கும் மக்களையாவது காப்பாற்றி சுதந்திரமாக தமது தாயக பிரதேசத்தில் வாழ வழிவகை செய்ய முன்வர வேண்டும்.
அனைத்துலக நாடுகளது கையாலாகத்தனமும் பிராந்திய நாடுகளது சுயகட்டுப்பாடற்ற ஆதிக்கப்போக்கும் மேலோங்கி இருக்கும் வரை எம் தலைவனது இருப்பு திரைமறைவாகவே இருக்கும். தமிழீழ மீட்பிற்கும் சுபீட்சமான வாழ்விற்குமான எமது விடுதலைப்போரில் விதையாகிப்போன மாவீரத் தெய்வங்களதும், விடுதலைக்கு உரம் சேர்த்து இறுதிவரை களத்திலே நின்று உயிரை பறிகொடுத்த தாயக மக்களதும் கனவு மெய்ப்பட வேண்டுமாயின் தலைவன் மீண்டும் புதுப்பலத்துடன் களமிளறங்க வேண்டும்.
திரைமறைவில் களப்பணியாற்றும் தலைவன் வெளிப்படுவதற்குரிய களத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது புலம் பெயர்வாழ் ஈழத்தமிழர்களது கையில்தான் உள்ளது. அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு இறுதிப்போரில் கரம்சேர்த்து தமிழீழத்தை வென்றெடுப்போம். “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
ஈழதேசம் இணையத்திற்காக - இரா.மயூதரன்
http://dhesam.de.tl/kaddurai-mythin.htm
Muthamizh
Chennai
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment