♥ தமிழீழ தேசிய புலிச்சின்னம் வரைந்து கொடுத்த ஓவியர் நடராசா மரணம் ♥
தமிழீழ தேசிய புலிச்சின்னம் வரைந்து கொடுத்த ஓவியர் நடராசா மரணம்
புலிச்சின்னம் வரைந்து பிரபாகரனின் பிரியத்துக்குரிய அண்ணாவான ஓவியர் நடராசா "தம்பிக்கும் எனக்கும் உள்ள தோழமையை உலகறியச் செய்து விட்டது நக்கீரன்' என்று தனது பேட்டி வெளியான இதழை தலைமாட்டில் வைத்துக் கொண்டு, அதில் உள்ள பிரபாகரன் படத்தைத் தடவித் தடவிப் பார்க்கிறார். ""இந்த உடல்ல ஒட்டிக்கிட்டிருக்குற உயிரால யாருக்கு என்ன பிரயோஜனம்? அது இந்த உலகத் துல எங்கோ ஒரு கண்காணாத இடத்துல தமிழீழங்குற ஒரே லட்சியத்துக்காக மூச்சு விட்டுக்கிட்டிருக்குற தம்பிக்கிட்ட போய்ச் சேரட்டும். அது அடுத்து அவரு எடுத்து வைக்கப் போற ஒவ்வொரு அடிக்கும் வலு சேர்க்கட்டும்" என்று முனகியபடியே இருக்கிறார். ""இன்னும் ஏதோ சொல்ல நினைக்கிறார்" என்று அவர் வீட்டிலிருந்து நமக்குத் தகவல் கிடைக்க விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணற்றுக்கு விரைந்தோம்.
அங்கே அவரைப் பார்க்க வந்திருந்தார் யாழ்ப்பாண நண்பரொருவர். அவர் நம்மிடம், ""இப்போது பிரபாகரன் மட்டும் இவர் முன்னால் வரட்டும். நடராசாவுக்கு எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்ல, புன்முறுவலோடு மெது வாகத் தலையசைத்தார் பெரியவர். உடனே அந்த நண்பர் ""இலங்கைல கொடூரமா நடக்குற தமிழினப் பேரழிவைத் தடுத்து நிறுத்தணும். அதுக்காக இங்கே தமிழகத்துல நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொல்லி வழக்கமாச் சாப்பிடுற மருந்து, மாத்திரையை வேண்டாங்குறாரு. எந்திரிச்சு உட்காரக்கூட முடியாத நெலமைல போராடப் போறேன்னு சொல்றாரு" என்று வருத்தப்பட்டார்.
"அய்யா…' என்று பெரியவரின் அருகில் சென்றோம். அவரோ உணர்ச்சிக் கொந்தளிப்பில், ""தேசப் பற்றோடு தமிழ்நாட்டுல கலெக்டரைச் சுட்டுக் கொன்ன வாஞ்சி நாதன் வரலாற்றுல இடம் பிடிச் சிருக்கான். விடுதலைக்காக புரட்சி செய்த பகத்சிங் புகழை நாம் பாடறோம். பிரபாகரனும் சாதாரண மனுஷன் இல்ல. ஒரு இனத்தோட விடுதலைக்காக போராடிக்கிட்டிருக்கான்" என்று அடிக்குரலில் பேசினார். பிறகு கண்ணை மூடிக்கொண்டு மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டார்.
""பிரபாகரனுக்கு பைக் ஓட்டத் தெரியாது. நாஞ் சொன்னேன். என்னோட புல்லட்டத் தர்றேன், நீங்க பைக் ஓட்டக் கத்துக்கணும்னு. அதுக்கு தம்பி சொன்னாரு, "எங்கட நாட்டுல பெட்ரோல் கிடைக்காது. சிங்கள ராணுவத்தோட கண்ணுல மண்ணைத் தூவிட்டு சத்தமில்லாம பயணிக் குறதுக்கு சைக்கிள்தான் சரியா இருக்கும். எங்கட மக்களுக் குப் பயன்படாத ஒரு விஷயத்த நான் கத்துக்கிட்டு என்ன ஆகப் போகுது அண்ணா… சிங்களத்தான் மிகக் கொடியவன். அவனை எதிர்த்து நிக்கணும்னா துப்பாக்கி சுடத்தான் தெரியணும். அதனால, துப்பாக்கிப் பயிற்சிதான் எங்கட இயக்கத்தோட தேவையே. அதைத்தான் மத்திய, மாநில அரசோட ஒத்துழைப்புல இங்கே பண்ணிக்கிட்டிருக் கோம்'னாரு.
போராடணும் போராடணும்னு துப்பாக்கி மீது தம்பிக்கு கிறுக்கே பிடிச்சிருச்சு. துருப்பிடிச்சு ஒண்ணுக்குமே உதவாத துப்பாக்கியா இருந்தாக்கூட, அத வாங்கி மண்ணெண்ணெய் ஊத்திக் கழுவித் துடைச்சு, அக்கக்காப் பிரிச்சு அதன் செயல்பாட்டத் தெரிஞ்சுக்குவாரு. இந்த ஆர்வத்துலதான் எந்தத் துப்பாக்கியா இருந்தாலும் அதைச் சிறப்பா கையாளுற நுட்பம் அவருக்கு அத்துபடியாச்சு.
நேதாஜியத்தான் மானசீக ஆசான்ம்பாரு. நேதாஜியப் படிச்சுப் படிச்சுத்தான் விடுதலை வேட்கைல தனக்குள்ள ஒரு தெளிவு வந்துச்சுன்னு சொல்வாரு. இந்திய தேசியப் படையின் பிரிவு களுக்கு நேதாஜி வச்சிருந்த பெயர்களையும், அவரு படை திரட்டுன விதத்தையும் அத்தனை விரிவாப் பேசுவாரு. எதையும் தீர்க்கமா சிந்திச்சு, திட்டம் தீட்டி ஒரு காரியத்தை முடிக்குற வரைக்கும் அதே சிந்தனையாத்தான் இருப்பாரு.
என் வீட்டுல தங்குறப்ப எப்பவுமே ஜன்னல் பக்கமா படுக்க மாட்டாரு. ரொம்பவும் முன்னெச்சரிக்கையா இருப்பாரு. சில நேரங்கள்ல ஒரு வாரம் கூட தங்குவாரு. ஆனா, வீட்டுல இருக்குறவங்களுக்கே தம்பி மாடில இருக்குறது தெரியாது. அந்த அளவுக்கு அவரோட நடவடிக்கைகள் சைலண்ட்டா இருக்கும். புலி பதுங்கிப் பாயுங்குறது தம்பி விஷயத்துல ரொம்பவும் பொருந்தும். இப்பவும் பதுங்கித்தான் இருக்காரு. அது உயிர் வாழணும்குற ஆசையில இல்ல. தமிழினம் நாதியத்துப் போயிடக் கூடாதுங்குற வெறில… சமைக்குறதுக்காக அறுக்குற கோழியக் கூட ஒரேயடியா அறுத்துட ணும். முனை மழுங்கிய கத்தியால ரொம்ப நேரம் அறுத்து அதைச் சித்திரவதை பண்ணக் கூடாதும்பாரு. இப்படித்தான் ஒரு தடவை என் மனைவியோட பிறந்த நாளன்னைக்கு கோழிய அறுக்கப் போன அவகிட்டயிருந்து கத்தியை வாங்கி "உங்களோட பிறந்த நாளான இன்னைக்கு உங்க கையால ஒரு உயிரு சாகணுமா? நான் அறுத்துத் தர்றேன்'னு அவரே அறுத்தாரு. எதிரிக்கு சிம்ம சொப்ப னமா இருக்குற அவருக்குள்ள இப்படி ஒரு சாந்தமான குணமும் இருக்குறது எனக்கு ஆச்சரியமா இருக்கும்.
ஒருநாள் ஏதோ ஒரு கவலைல நான் இருந்தப்ப, "அண்ணா… குவிச்சு வச்சிருக்குற என் கை விரலப் பாருங்க. இடைவெளி இல்லைல்ல. இப்படி யிருந்தா நல்லதுன்னு சொல்வாங் கள்ல…' என்று உற்சாகமாகச் சொல்ல… நானோ, "இத்தனை குழந்தைத் தனம் உள்ள ஒரு மனிதனை சிங்களனுங்க போராளி ஆக்கிட்டானுக' என தம்பியின் தனிப்பட்ட வாழ்க்கையை எண்ணி வருத்தப்பட்டேன். தம்பியோ "அடப் போங்கண்ணா… என் அப்பா, என் அம்மா, என் சொந்தக்காரங்கன்னு எல்லாரு மாதிரியும் எனக்கும் சாதாரண வாழ்க்கை அமையணும்னா நெனக்குறீங்க. என் நாடு, என் தமிழினம்னு ஒருநாள் வாழ்ந்தாக் கூட போதும்ணா. அப்படித்தாண்ணா… சுயநலமே இல்லாத ஒரு பெரும்படையே நம்ம இயக்கத்துல சேர்ந்து இனத்துக்காக ரத்தம் சிந்தி உயிரை விட்டுக்கிட்டிருக்கு'ன்னு தான் வாழ்வதற்கான அர்த்தத்தையே எனக்கு விளக்கிட்டாரு.
கண்ணகியின் கற்பு கூட இங்கே பேசப்படுது. பிரபாகரன் சுத்தமான தமிழ் வீரன். தமிழ் இனத்தோட அடையாளம்" என்று ரொம்பவே உணர்ச்சி வசப்பட, இயல்புக்கு மாறாக அவர் உடல் நடுங்கியது. உடல் நலிவையும் பொருட்படுத்தாது நீண்ட நேரம் உரையாடிய பெரியவரிடம், ""சற்று ஓய்வு எடுத்துக்கங்க…" என்றார் அந்நண்பர். அவரைக் கைத்தாங்கலா படுக்க வைத்துவிட்டு, கரம் கூப்பி நாம் விடைபெற்ற போது நம் விரல்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார்.
""நக்கீரன்ங்குற பேருக்கு ஏத்த மாதிரியே தமிழ் உணர்வோட நெறய கட்டுரைகள் எழுதுறீங்க. தம்பி பிரபாகரனைப் பத்தி பலருக்கும் பல விஷயம் தெரியும். ஆனாலும், எனக்குத் தெரிஞ்சதயும் உலகத்துக்குச் சொல்ல வச்சிட்டீங்க. ரொம்பவும் மனநிறைவா இருக்கு" என்று கண்கலங்கினார்.
மறுநாளும் பெரியவரின் வீட்டிலிருந்து தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொள்ள… "அய்யா அழைக்கிறாரா?' என்றோம். எதிர்முனையில் பதிலெதுவும் கூறாமல் அமைதி காத்தார்கள். அதுவே வலியாக நமக்குள் ஊடுருவ… ""அய்யா நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாருய்யா…" என்று பெருங்குரலெடுத்து அழுதார்கள்.
தனக்குள் பிரம்மாண்டமாக 32 ஆண்டுகளாக உறைந் திருந்த பிரபாகரனை கடந்த இரண்டு இதழ்களின் வாயிலாக வாசகர்களின் இதயத்தில் இறக்கி வைத்த அவர் அசையாத ஓவியமாக கண்ணாடிப் பேழைக்குள் காட்சியளிக்க… வாசகர் களின் சார்பில் அம் மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தினார் ஆசிரியர்.
-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள்: அண்ணல்
http://www.nerudal.com/nerudal.7921.html
♥ 5ம் கட்ட ஈழப் போரை தமிழீழ தேசிய தலைவர் விரைவில் அறிவிப்பார் ♥
5ம் கட்ட ஈழப் போரை தமிழீழ தேசிய தலைவர் விரைவில் அறிவிப்பார்
அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் பிரபாகரன் அறிவிப்பார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
தமிழீழமும் நமது இன்றைய கடமையும் என்பது குறித்த கருத்தரங்கு விழுப்புரத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவரது சொந்த மண்ணில் நலமுடன் உள்ளார். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அவர் அறிவிப்பார்.
இலங்கை ராணுவ முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் மின்சார வேலி அமைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை மருந்துகள் கிடையாது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர்..
அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் திரும்புவது கிடையாது. இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்..
தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்படாமல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும்..
ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், சர்வதேச பத்திரிகையாளர்கள் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்துள்ளனர். அண்டை நாடான இந்தியா வாய் திறக்கவில்லை. ஏன் இலங்கைத் தலைமை நீதிபதியே கூட தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இருக்கும் உணர்வுகூட இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இல்லை என்றார் நெடுமாறன்.
http://www.nerudal.com/nerudal.7917.html
♥ "தொடரும் துரோக வரலாறு – அருட்தந்தை ஜெகத்கஸ்பர்"-நக்கீரன் கலக்கல் கட்டுரை ♥
தொடரும் துரோக வரலாறு – அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
சென்னை சங்கமம் இத்துணை பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காலம் சிலவற்றை எதற்காகவோ கொண்டாடித் தள்ளிவிடுகிறது. அப்படி நிகழ்ந்ததுதான் சென்னை சங்கமம் வெற்றியும். இந்த வெற்றி எங்களுக்கே புரிந்து கொள்ள முடியாத வியப்பென்றால் பலருக்கு அது வயிற்றெரிச்சலைத் தந்திருக்க வாய்ப்பு உண்டு. இலட்சியங்களிலும், உயர்ந்த விழுமியங்களிலும் புடமிடப்பட்டவர் போல் பம்மாத்து காட்டும் எழுத்தாளர் ஞானி சங்கமத்தை கனிமொழியின் விளம்பர விழா என்று எழுதினார். நான் சொல்வது தவறாக இருக்கலாம், ஆனால் சதா விமர்சித்துக் கொண்டே இருப்பது ஒருவகை மனநோய் என்பது என் எண்ணம். இத்தகையோரை நெருங்கி அணுகிப் பார்த்தீர்களென்றால் சிறுமைகள் அவர்களிடத்து நிறைய இருக்கும். ஆதலினால் பொதுவாக இத்தகையோருக்கு நான் பரிந்துரைப்பது கனிவான உளநல உதவி.
பயணங்களின் போது நான் தேடி பணம் கொடுத்து வாங்கிப் படித்து வந்த பத்திரிகை "காலச்சுவடு'. அவர்கள் சென்னை சங்கமத்தை ஜீரணிக்க முடியாமலும் நாலு வார்த்தை பாராட்டாதிருந்தால் தனது நடுநிலை முற்போக்கு முலாம் சேதாரப்பட்டுவிடுமோ என்ற ஜாக்கிரதை உணர்விலும்பட்டிருந்த அவஸ்தை பரிதாபமாய் இருந்தது. போலித்தனங்களும், நாடகத் தன்மைகளும் இன்றி சமூக வாழ்வை கட்டமைத்தல் கடினம்தான். ஆனால் முற்போக்காளர் என தமக்கு முகவரி இட்டுக் கொள்கிறவர்களின் நாடகத்தன்மை அருவருப்பாகிறது.
நக்கீரனைப் போன்ற இன்னொரு பத்திரிகை எனக்கு முகப்பு அட்டை மரியாதை தந்தது. ""அரசின் ஆசிபெற்ற மர்ம மனிதர்" என்பது பெருந்தலைப்பு. ""யார் இந்த ஜெகத் கஸ்பர்?" என்பது துணைக் கேள்வி. சர்ச்சைக்குரிய ஒருவராக சமூக-அரசியற் களத்தில் ஆக்குவதன் மூலம் இயங்கும் ஆற்றலை மட்டுப்படுத்தலாம் என்ற நுட்பமான மேலாதிக்க அரசியல் அதில் இருந்தது. பொழுதுபோக்கு வியாபாரப் பத்திரிகைகளை பொதுவாக நான் விமர்சித்து மெனக்கெடுவதில்லை, அவசியமுமில்லை. ஆனால், அப்பத்திரிகைகள் தலையங்கம் எழுதி ஊருக்கு உபதேசம் செய்யும்போதுதான் பற்றிக் கொண்டு வரும். உபதேசிப்பதற்கு சில அடிப்படை யோக்கியதைகள் வேண்டும் என்றே நினைக்கிறேன். பொதுவாழ்வில் இருப்போரது தனிவாழ்வை சந்திக்குக் கொண்டு வந்து வியாபாரம் நடத்துகிற பத்திரிகை முதலாளிகளின்
தனிவாழ்வில் இருக்கிற வக்கிரங்களை அவர்தம் வாசகர்கள் அறிந்தார்க ளென்றால் ஆடிப் போவார் கள். அந்த வேலையை செய்வதற்கென்றே தனியாக ஒரு பத்திரிகை தொடங்க லாமா என்று கூட நான் யோசித்ததுண்டு.
ஜெயா தொலைக் காட்சி ஏதோ "இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வரும்' உலகப் புகழ்பெற்ற த்ரில்லர் திரைப் பட விளம்பரம் போல் "சென் னை சங்கம திடுக்கிடும் மர்மங்களுக்கு' இடைவிடா முன் விளம்பரம் செய்து கொண்டிருந்தது. முன் விளம்பரத்தில் எனது முகத்தை நரகாசுரன் போல் கிராபிக்ஸில் வடிவமைத்திருந் ததை நான் நன்றாகவே ரசித்தேன்.
"சென்னை சங்கமம் ஊடாக பெரும் பணம் வந்தது. வந்த அப்பணம் விடுதலைப்புலிகளுக்குச் சென்றது என்பதுதான்' இவர்களது பிரதான கதை. துணைக் கதை அமெரிக்காவில் புலிகள் இயக்கத் தடையை நீக்க லஞ்சம் கொடுத்ததாய் கைது செய்யப்பட்ட நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் எனக்கு நண்பர் என்பது. உண்மையில் துணைக் கதை உண்மைதான். நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் நான் பார்த்த அறிவாளிகளில் மறக்க முடியாதவர். ஒரு நேரத்தில் நான்கு விஷயங் களை சிதறாமல் சிந்திக்கும் அபார அறிவாற்றல் கொண்டவர். அமெரிக்காவின் அணு ஆயுத திட்டமொன் றில் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். 1970-களில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக் கிய தமிழ் அக்னி குஞ்சுகளில் ஒருவர். சேலம் சேந்த மங்கலத்துக்காரர். அற்புதமான மனிதர். எனக்கு நண்பர்.
தந்தை பெரியாரின் கொள்கைபால் ஆழ்ந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவர். ஒரு விதவையை மணம் புரிந்தவர், அதுவும் கலப்புத் திருமணமாய் ஜாதி மீறல் செய்தவர். அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க அவர் உழைத்து வந்தது உண்மை. அதிலொன்றும் தவறேதும் இல்லை. அது சட்டரீதியான செயற்பாடு. ஆனால் அவரை ஏமாற்றி, வஞ்சக வலை விரித்து, 5000 டாலர்கள் ஒரு அதிகாரிக்கு "ஊக்கப்பணம்' கொடுக்க வைத்து சிக்க வைத்ததில் போதைப்பொருள் கடத்தும் கும்பல் தலைவன் சங்கரசே என்ற தமிழனும், ரஜினிகாந்தின் "பாஷா' திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக வரும் ஒரு கேரக்டரும் உண்டு என்பதை உலகறியாது.
ஜெயா தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சி நிஜ மாகவே என்னை மனவருத்தப்படுத்தவில்லை. ஏனென்றால், முன்பு நான் குறிப்பிட்டது போலவே தமிழ் ஈழ ஆதரவு விஷயத்தில் குற்றம் சாட்டப்படுவது பெருமையே என்பது ஒருபுறமிருக்க, பொய் வேகமாகப் பரவினாலும் உண்மை ஒருநாள் உருண்டு, புரண்டு வந்து சேரும் என்ற எனது நம்பிக்கையும் முக்கிய கார ணம். ஆனால் எது வலித்ததென்றால் அந்த நிகழ்ச்சி யை ஆக்கிய பலரில் சௌபா என்ற சௌந்தர பாண்டி முக்கியமானவராக இருந்தார், பணத்திற்காக அதைச் செய்தார் என்று நான் கேள்விப்பட்டபோது உண்மையி லேயே மனது வலித்தது. ஏனென்றால் எனது மாணவப் பருவத்தில் ஏழை மனிதர்களுக்காய் அவர் எழுதிய கட்டுரைகள் படித்து நம்பிக்கை பெற்றவன் நான். அந்த நம்பிக்கை தகர்ந்தபோது வலித் தது. அதுவும் பணத்திற் காகச் செய்தார் என்றபோது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நமது இனத்தின் போர் வாளாய் நிற் கும் ஆற்றல் கொண்ட தோழர் கள், சில்லறை விஷயங்களுக் காய் சோரம் போவது காண எழும் வேதனை அனுபவித்தவர் களுக்கு மட்டுமே தெரியும். வெளியே ஈழத்தமிழர் களின் துயரத்தை வியாபாரமாக்கிக் கொண்டு இலங்கை தூதரகத் தின் மது விருந்துகளுக்கு மலிவாய் துணை போன பத்திரிகை -ஊடக நண்பர்கள் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். அவர்கள் மீதான கோபம் தீர்ந்து விட்டது. ஆனால் வலி தொடர்கிறது. துரோக வரலாற்றிலிருந்து நான் சார்ந்த இனத்திற்கு இறைவா, விடிவே இல்லையா என்ற கேள்வியில் வருகிற வலி அது.
கருணா என இன்று நாம் அறிகிற கருணம்மான் விடுதலைப் போராட்டத்தை விட்டு விலகியபோதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது உடல் என சொல்லப்பட்டதை அடையாளம் காட்டவென இலங்கை ராணுவம் கருணாவை முல்லைத்தீவுக்கு கடந்த மே 17-ம் தேதி கூட்டிச் சென்றது. முல்லைத் தீவு மண்ணில் தமிழின அழித்தலின் குரூர சாட்சியங்களுக்கு நடுவில் நிறுத்தப்பட்டிருந்த கருணம்மானின் முகத்தில் படர்ந்திருந்த வேதனை இறுக்கத்தை தொலைக்காட்சி வழி நான் பார்க்கத் தவறவில்லை. எந்த இனத்தின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து தலைவன் போற்றிய தளபதியாய் உயர்ந்தாரோ அந்த இனம் தோற்கடிக் கப்பட்டு, பல்லாயிரம் சடலங்களால் பிணக்காடா கிக் கிடந்த அவலத்தின் சாட்சியாய் நிற்க வேண் டிய சாபத்தை எண்ணி கருணம்மான் உள்ளுக்குள் அழாமல் இருந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் வன்னிக் காடுகளில் வளரும் போராளியாய் தன் தலைவன் பிரபாகரன் உண்டு மிச்சம் வைத்த உணவை உண்ணும் பாக்கியத்திற்காய் தவமிருந்த நாட்கள் கருணம்மானின் மனசாட்சியை அக்கணம் குத்திக் கிழித்து ரணப்படுத்தியிருக்கும்.
2002-ம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நான் நேர்கண்ட கையோடு வேறு பல மூத்த தளபதிகளையும் நேர்காண முயன்றேன். அவர்களில் முக்கியமானவர் கருணம்மான். மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியிலுள்ள அவ ரது முகாமில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மியன்மார் என்ற பர்மா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் உலகின் பணக்கார நாடுகளாகவோ, பெரிய நாடுகளாகவோ புகழ்பெறவில்லைதான். ஆனால் இந்நாடுகளுக்குப் பயணம் செய்தீர்களென்றால் பொறாமை யாக இருக்கும். அந்த அளவுக்கு எங்கு நோக்கினும் காடுகள், ஆறுகள், நீர் நிலைகள்… ""மீன் பாடும் தேனாடு" என தமிழர்கள் கொண்டாடும் மட்டக்களப்பு பிராந்தியமும் அப்படித்தான். எங்கு பார்த்தாலும் ஆறுகள், நீர்நிலைகள், காடு, கடல் என செழுமை சிறந்த பிராந்தியம். எளிமையான மக்கள், அவர்தம் விருந்தோம்பல் காவியத்தன்மை கொண்டது. எங்கள் வேரித்தாஸ் வானொலிக்கு மட்டக்களப்பு நகரில் கள அலுவலகம் இருந்தது. உயிரைப் பணயம் வைத்து தொடர்பாளர்களாய் கடமையாற்றிய இருவரை உயிருள்ளவரை நான் மறக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு கருதி அவர்கள் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை.
கருணம்மானை பேட்டி காண நான் விரும்பி யமைக்கு பலவேறு காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணம் முக்கியமானது. ஓர் அரசியல்- ராணுவ ஆய்வாளன் என்ற வகையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்த மகத்தான ராணுவ வெற்றியானது என்னைப் பொறுத்தவரை ""ஜெயசிகுறு எதிர்சமர் தான். அதிபர் சந்திரிகா அரசு யாழ்ப்பாணத்துக்கு வவுனியாவிலிருந்து தரைவழிப்பாதை திறக்க முயன்ற ""ஜெயசிகுறு" எனப் பெயரிடப்பட்ட யுத்தம் வென்றிருக்குமேயானால் இன்று முல்லைத்தீவில் நடந்தது 12 ஆண்டுகளுக்கு முன்னரேயே நடந்திருக்க வாய்ப்புண்டு. அந்த ""ஜெயசிகுறு" ராணுவப் பெருநகர்வை எதிர்கொண்டு முறியடித்த வரலாற்றில் முக்கிய பங்காற்றியவர்கள் கருணம்மானும் அவரது படையாளிகளும். உள்ளபடியே வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ""போராட்ட வரலாற்றில் மகத்தான ராணுவ வெற்றி எது?" என நான் கேட்டபோது அவரும் ""ஜெயசிகுறு எதிர்சமர்" என பதில் தர, நான் உளம் சிலிர்த்ததும் உண்மை. எனவே ஜெயசிகுறு எதிர்சமரின் நாயகன் கருணம்மானை நான் நேர்காண விரும்பியதில் வியப்பில்லை.
முப்பது ஆண்டு கால வீர வரலாற்றின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கருணம்மாவின் பிரிவு என்பது யாவரும் அறிந்ததே. கிழக்கின் போர் அணிகள் இல்லாது போனது பேரிழப்பென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவ, பூகோள, அனைத்துலக செயல்பாடு ரகசியங்களை இலங்கை அரசுக்கு அவர் தந்துதவியது கடந்த ஈராண்டு கால போரின் போக்கை முக்கியமாகத் தீர்மானித்தது. உண்மையில் கருணம்மான் இயக்கத்திலிருந்து பிரிந்துவிட்ட செய்தி கேட்ட அன்று மனதில் அவநம்பிக்கை படர்ந்தது, போராட்டம் பெருத்த பின்னடைவு காணும் என உள்மனது சொன்னது. இன்று தன் எஜமானர்களை திருப்தி செய்ய வேண்டி கருணா பிரபாகரன் அவர்கள்மீது பல விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் பிரபாகரன் நெஞ்சார நேசித்த போராளிகளில் ஒருவர் கருணம்மான் என்பதே உண்மை. ஏனென்றால், திறமையாளர்களை பிரபாகரனுக்குப் பிடிக்கும். கருணம்மான் வியத்தகு ஆளுமைத்திறன் கொண்ட ஒரு தளபதி. படையணிகளை கட்டி யெழுப்புவதில் மட்டுமல்ல, மக்களோடு நெருங்கி உறவாடி ஆதரவுத் தளத்தை விரிவாக்கு வதிலும் கெட்டிக்காரன். விடுதலைப் புலிகள் இயக்கம் முதலில் பயன்படுத்திய எறிகணை எந்திரம் (Artillery Machine) கருணாவால் இலங்கை ராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட் டது. அந்த எறிகணை எந்திரத்தை வன்னியில் நின்ற தன் தலைவனிடம் ஒப்படைப்பதற்காக சுமார் 100 கிலோமீட்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பாதை அமைத்துக் கொண்டு சென்று சேர்த்தவர் கருணா. அந்த அளவுக்கு துடிப்பும் செயல்வேகமும் மதிநுட்பமும் கொண்ட கருணா விடுதலைப் போராட்டத்தின் அழிவுக்கு தானும் ஒரு காரணம் ஆனது எப்படி?
அடுத்த வாரம்.
(நினைவுகள் சுழலும்)
நன்றி நக்கீரன்
http://www.nerudal.com/nerudal.7764.html
♥ “நலமாக இருக்கிறோம்” – பொட்டு அம்மான் தரும் உறுதி"-நக்கீரன் கலக்கல் கட்டுரை ♥
"நலமாக இருக்கிறோம்" – பொட்டு அம்மான் தரும் உறுதி
வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய இறுதிநாள் போரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுனாமியால் நிகழ்ந்த மனிதப் பேரவலங்களைவிட இலங்கை ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் அதிக கொடூரமானவை.
இந்தப் படுகொலைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உலகத் தின் புலனாய்விலிருந்து இதன் சாட்சியங் களையும் அடையாளங்களையும் அழிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்தினரை முடுக்கிவிட்டார் ராஜபக்சே. அந்த பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டதாக ராணு வத்தினர் தற்போது தெரியப்படுத்தியுள்ளனர். இத னை அடுத்து, முப்படைகளை கௌரவிக்கும் வைபவத்தை நடத்தி முடித்துதான் அதன் அணி வகுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே.
இந்த வைபவம் குறித்து பாதுகாப்புத் துறையில் விசாரித்தபோது, ""போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசு அறி வித்ததை அடுத்து, முகாம்களில் (திறந்த வெளி சிறைக் கூடங்கள்) தஞ்சமடைந் துள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அரசு மேற் கொள்ள வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தின. இதனை ஏற்று அதனை மேற்கொள்ள வன்னிப் பகுதி ராணுவத் தினருக்கு உத்திரவிடப்படும்னு நினைத் தோம். ஆனால் இதற்கு மாறாக, இறுதி நாளில் நடந்த "நிகழ்வுகளின்' சாட்சியங் களை முற்று முழுதாக அழித்துவிட வேண்டுமென கொழும்பு தலைமையகத்தி லிருந்து கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. இந்த பணிகளை ராணுவத்தினர் செய்து முடிக்கும் வரையில் முப்படைகளுடனான வைபவத்தை நிறுத்தி வைத்திருந்த அரசு, தற்போது அந்தப் "பணிகள்' முடிந்துள்ள நிலையில் கொண்டாடியுள்ளது" என்று, கடந்த 10 நாட்களாக வன்னிப் பகுதியில் ராணுவத்தினர் மேற்கொண்ட "பணிகளை' விவரித்தார் வைபவத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவரே.
இந்த நிலையில், வன்னிப் பகுதியில் அரசு அமைத்துள்ள "முகாம்'களுக்கு (திறந்தவெளி சிறைக்கூடங்கள்) விசிட் அடித்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என் சில்வா, இலங்கை அரசின் கொடூரங்களைப் பகிரங்கப்படுத்தி யிருப்பது, மனசாட்சி உள்ளவர்களை உலுக்கியுள்ளது.
நீர்க்கொழும்பு மாவட்டத்தில் மாரவில் பகுதியில் அமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி சரத் என் சில்வா, ""வன்னிப் பகுதியில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள "நிவாரண முகாம்'களுக்குச் சென்று வந்தேன்.
அங்கு தமிழர்கள் படும் துன்பங்களையும் வேதனை களையும் வார்த்தைகளில் என்னால் விவரிக்க இயலவில்லை. செட்டிக்குளம் முகாமிற்குச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் நிலை மிக பரிதாபமாக இருந்தது. ஒருவேளை கஞ்சிக்காக அவர்கள் ஏக்கத்துடன் இருந்தனர்.
இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட, 50 பேர், 60 பேர் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க வேண்டியிருக்கிறது. முள்கம்பிகளால் சூழப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த மக்கள், ஒரு பிரட் துண்டுக்காக பல நாட்கள் காத்துக் கிடப்பது கொடுமை.
மிகப் பிரமாண்டமான கட்டிடங்களையெல்லாம் நாம் கட்டியெழுப்புகிறோம். ஆனால், போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள், மிகச் சிறிய கூடாரங்களுக்குள் அடைக்கப் பட்டுள்ளனர். ஒரே கூடாரத்தில், 10 பேர் திணிக்கப்பட்டிருக் கிறார்கள். அந்தக் கூடாரத்தில் இந்த 10 பேரும் நிற்கத்தான் முடியும். உட்காரக் கூட முடியாது. கூடாரத்தை விட்டு வெளியே செல்ல முயன்றால், அவ்வளவு எளிதாக வெளியேறி விட முடியாது. அவர்கள் கழுத்து உடைந்துவிடும்.
மொத்தத்தில், வார்த்தைகளால் விவரித்து விட முடியாத கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் அவர்கள். அவர்களுக்குப் போதுமான அளவில் நிவாரணம் வழங்க வேண்டும். உரிய நிவாரணங்களை அளிக்காவிட்டால் நாம் குற்றம் செய்தவர்களாகி விடுவோம். அந்தப் பழியை நாம்தான் ஏற்க வேண்டும்.
நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத் தின் முன் கொண்டு வரப்படவே இல்லை. "இலங்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று இரண்டு இனம் இல்லை. ஒரே இனம்தான் இருக் கிறது' என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதெல் லாம் பச்சைப் பொய்கள். இதனையெல்லாம் நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம். கவ லையில்லை" என்று வன்னி முகாம்களின் நிலைமைகளை புட்டு புட்டு வைத்திருக்கிறார் தலைமை நீதிபதி.
விழா முடிந்து வெளியேறும்போது சக நீதிபதிகளிடம் மனம் திறந்த தலைமை நீதிபதி, ""முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும், இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு இடங்களுக்கு பிரித்து, அவர்களை ஒன்றிணைய விடாமல் தடுப்பதும் பற்றி அந்த மக்கள் விவரிக்கும் போது, என் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது" என்று தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வன்னி "முகாம்' அவலங்களை தலை மை நீதிபதியே பகிரங்கப்படுத்தியிருப்பது இலங்கை அரசின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியிருப்பதாகவே கொழும்பு பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், ""பிரபாகரனை கொன்று விட்டதாக இலங்கை அரசு அவிழ்த்துவிடும் பொய்களை சிங்களவர் கள் நம்பலாம். தமிழர்களாகிய நாங்கள் நம்பவில்லை. கடைசி நாள் போரின் போது அங்கு என்ன நடந்தது என்பது அந்தப் பகுதியில் இருந்த மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், தனி முகாம் களில் அடைந்து கிடக்கும் அவர்கள் யாருடனும் எதுவும் பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். தனி முகாம்க ளில் உள்ள அவர்களோடு கருணாவின் ஆட்கள் ஊடுருவியிருப்பதால், பிரபா கரனைப் பற்றிய எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் மௌனத் தையே கடைப்பிடித்து வருகின்றனர்" என்று வன்னிப் பகுதியிலிருந்து கிடைக் கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பிரபாகரன் பற்றிய பொய்யான தகவல்களை பரப்புவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள இலங்கை அரசு, புலிகளின் புலனாய்வுப் பிரிவு (உளவுத்துறை) தலைவர் பொட்டு அம்மான் குறித்த தேடுதல் வேட்டை யைத் துவங்கியுள்ளது.
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பொய்யான செய்தியை இலங்கை ராணுவம் அறிவித்த சமயத்தில் "புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படை தளபதி சூசை உள்பட முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர்' என்று கொக்கரித்தது ராணுவம். இதையே, பத்திரிகையாளர்களிடமும் வெளிப்படுத்தினார் ராணுவ பேச்சாளர் உதயநாணயக்கார.
இதனை அடுத்து, பொட்டு அம்மான், சூசை உள்ளிட்டவர்களின் உடல்களைத் தேடி அலைந்தது ராணுவம். ஆனால் கிடைக்கவில்லை. "யாரோ ஒருவர் உடலைக் காட்டி இதுதான் பிரபாகரனின் உடல்' என்று கூறியது போல, இவர்களுக்காகவும் அப்படி உடல்களை காட்டுவோமா என்று கோத்தபாய ராஜபக்சே அதிகாரிகளோடு விவாதித்தார். ஆனால் இதனை அறிந்த ராஜபக்சே ""கூடாது" என்று தடுத்து விட்டதால், அந்த நிகழ்வு நடக்கவில்லை. அதனால் பொட்டு அம்மானை பற்றி தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார் ராஜபக்சே.
இந்த நிலையில், (20-க்கும் மேற்பட்ட ஊடறுப்பு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் பத்திரமாக வெளியேறிய சம்பவங்களை "பிரபாகரன் உயிருடன் உள்ளார்' என்ற தலைப்பில் வெளியான நக்கீரன் இதழில் விரிவாகவே எழுதியிருந்தோம்).
தீவிர தேடுதல் வேட்டையில் இலங்கை ராணுவம் மட்டுமல்ல இலங்கை உளவுத்துறையும் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான "ரா'வும் ஈடுபட்டது. இந்த உளவு அமைப்பினர் "பொட்டு அம்மான் தப்பித்து விட்டார், அவர் கொல்லப்படவில்லை' என்று அறிந்து அதனை ராஜபக்சே விடம் தெரிவித்தனர். இதனை அடுத்துதான், பத்திரிகையாளர்களை சமீபத்தில் மீண்டும் சந்தித்த உதயநாணயக்கார, ""பொட்டு அம்மான் கொல்லப் பட்டதாக சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை அல்ல. அவரை தேடி வருகிறோம்" என்று ஒப்புக் கொண்டார். இலங்கை பாதுகாப்புத் துறையும் இதனை வெளிப்படுத்தி யது. ஆனால், பொட்டு குறித்த எந்தத் தகவல்களும் அதற்கு மேல் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில் பொட்டு அம்மான் குறித்து நாம் விசாரித்தோம். கடந்த 10 நாட்களாக அமைதியாக இருந்த பொட்டு, செவ்வாய்க்கிழமை தனது உளவுத்துறையின் கீழ் சர்வதேச அளவில் செயல்படுபவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, ""நலமாக இருக்கிறோம், பிறகு பேசுவோம்" என்று கதைத்துள்ளார். பொட்டுவின் குரலை கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட புலிகளின் உளவுப்பிரிவினர் தலைவர் பிரபாகரனைப் பற்றிக் கேட்டபோது, ""நானே நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் போது தேசிய தலைவர் இருக்க மாட்டாரா? நிம்மதியாக இருங்கள்" என்று தெளிவுபடுத்தியுள்ளார் பொட்டு அம்மான் என்பதாக நமக்கு வரும் தகவல்கள் சொல்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தொடர்ந்து தான் அளித்துவரும் பேட்டிகளில் "பிரபாகரன் இல்லை' என்பது போலவே பதிவு செய்து கொண்டு வருகிறார். இது உலகத் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது.
இதுபற்றி புலிகளின் சர்வதேச தொடர்புகளில் நாம் விசாரித்தபோது, ""சர்வதேச நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. புலிகளின் செயல்பாடு களுக்கு இது மிகப் பெரிய தடை. அதனால் தான் அந்தத் தடை நீக்கப்பட தற்போது உலகத் தமிழர்கள் ஒருமித்த குரலில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பிரபாகரன் இல்லை என்று அவர்கள் நம்பினால்தான் இந்தத் தடையை நீக்க உலக நாடுகள் முன்வரும். இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, சுமுகமான சூழல் உலகம் முழுவதும் பரவுகிற நேரத்தில் திடீரென பிரபாகரன் தோன்றுவார் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
நன்றி நக்கீரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment