WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, July 21, 2009

சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்டவர்களுக்கு கீரிமலையில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை...!!!

சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்டவர்களுக்கு கீரிமலையில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை
இவ் விடயம் 21. 07. 2009, (திங்கள்), தமிழீழ நேரம் 2:00க்கு பதிவு செய்யப்பட்டது
செய்திகள்கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்தோரிற்கான ஆத்ம சாந்திவேண்டி பிராத்தனைகள் நாளை செவ்வாய்க்கிழமை இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
கீரிமலையில் நாளை இடம்பெறும் இப்பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வுகளின் உறவினர்களினால் வன்னியில் மரணித்தவா்களுக்கான பிதிர்கடன் மற்றும் ஈமைக்கிரியைகள் செலுத்ததாவர்களுக்குமாக இந்த ஆத்மசாந்திப்பிராத்தனை நடைபெறவுள்ளது.

இந்த ஆத்மாசாந்திப் பிரார்த்தனைக்காக இதுவரையில் யாழ்ப்பாணம் தென்மராட்சியில் “இடம்பெயர்ந்து” வந்து தங்கியுள்ளவர்களிடம் இருந்து 127 பேரின் பெயர்கள் விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்து அமைப்பகளின் ஒன்றியத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள கீரிமலைக்குச் சென்று இறந்தவா்களின் பிதிர்கடன் செலுத்துவதற்கு சிறீலங்காப் படையினர் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் காலை 7.00 மணிமுதல் தெல்லிப்பளை சோதனை நிலையம் மற்றும் செந்தாக்குளம் சோதனை நிலையங்கள் ஊடாக சென்று வருவதற்கு சிறீலங்காப்படைகள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் கரணமாக சிறீலங்காவின் முப்படைகளாலும் கொல்லப்பட்ட 25000ற்கும் மேற்பட்ட மக்கள் எதுவித சம்பிரதாயங்கள் இன்றி அவர்களின் உடலங்கள்பெருமளவு கைவிடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

courtesy...nerudal.com
----------------------------------------------
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.

http://www.google.co.in/transliterate/indic/Tamil

No comments: