பிரபாகரன் நன்றாக இருக்கிறார்;உறுதியான தகவல் கிடைத்துள்ளது
பிரபாகரன் நன்றாக இருக்கிறார்;உறுதியான தகவல் கிடைத்துள்ளது
சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு சார்பில் நேற்று பெங்களூர்
தமிழ்ச்சங்கத்தில் `ஈழத்தமிழரும்-நமது கடமையும்' என்ற கருத்தரங்குநடந்தது. உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.
''சிங்களஅரசு 6 மாதத்தில் மட்டும் 1 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது.சர்வாதிகாரி ஹிட்லரால் யூத மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதை விடமிகப்பெரிய கொடுமை இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்து உள்ளது. இந்தியாவில்
வாழும் தமிழர்களை மத்திய அரசு நமது நாட்டின் குடிகளாக நினைக்கவில்லை. ஏறத்தாழ 31/2 லட்சம் தமிழர்கள் ராணுவ கட்டுப்பாட்டில் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
3 ஆயிரத்து 500 பேருக்கு ஒரு கழிவறை வசதி மட்டுமே செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் மத்திய அரசு தான் காரணம். இலங்கை
தமிழர் பேரழிவுக்கு காரணமாக இருந்தவர்களில் மலையாளிகளுக்கு முக்கிய பங்குஉள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கரமேனன், இந்தியாவில் முக்கிய பதவி வகிக்கும் பி.கே.நாயர், ஜெனீவாவில் உள்ள
மனித உரிமை ஆணையத்தின் இந்திய பிரதிநிதி கோபிநாத், ஐ.நா.சபை செயலாளரின்விவகாரத்துறை அதிகாரி விஜய்நம்பியார், இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவின்ராணுவ ஆலோசகரும் விஜய் நம்பியாரின் சகோதரருமான சதீஷ் நம்பியார் ஆகியஅனைவரும் மலையாளிகள்.
இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இந்த பேரழிவை ஏற்படுத்தி உள்ளனர். சிவசங்கரமேனனும், நாராயணனும் மாதத்துக்கு 4 தடவை இலங்கைக்கு சென்று வந்தனர். போர்
நிறுத்தம் பற்றி பேசுவதாக இலங்கை சென்று டெல்லி திரும்பும் வழியில்சென்னையில் இறங்கி அவர் கள் தமிழக முதலமைச்சரையும் ஏமாற்றி விட்டனர். இலங்கையில்சீனா நாடுகள் உள்பட நமது எதிரி நாடுகள் கால்பதித்து வருகின்றன. இது நமது
நாட்டு பாதுகாப்புக்கு பாதிப்பாக அமையும். இதை புரிந்து கொள்ளாமல் மத்தியஅரசு தனது தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு உள்ளது. தமிழீழதேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நன்றாக உள்ளார். மிக பத்திரமாக
இருக்கிறார். எந்த கட்டத்திலும் மீண்டும் தோன்றி தமிழீழ போராட்டத்துக்குதலைமை தாங்கி போராடுவார். அதை அவரே அறிவிப்பார். பிரபாகரன்இறந்து விட்டார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி.
விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன், பிரபாகரன்இறந்ததாக செய்தி வெளியிடும் முன்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார்.அவ்வாறு செய்தி வெளியிட நீங்கள் யார்? என்று கேட்டேன். எனது கேள்விகளுக்குஅவரால் பதில் அளிக்க முடியவில்லை.
நம்மைகுழப்பவும், போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலும் பரப்பப்படும் பொய்செய்திகளை யாரும் நம்பக்கூடாது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றுஎனக்கு உறுதியான செய்தி களத்தில் இருந்து கிடைத்து உள்ளது.
தம்பிபிரபாகரன் தலைமையில் போராட்டம் முன் நிறுத்தப்படும். அப்போது உலகதமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை நாம் ஒன்று திரண்டு எந்தஒரு குழப்பத்துக்கும் ஆளாகாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன்''என்று பேசினார்.
.........................................................................
"இலங்கை ஜெயிலில் உணவின்றி, தூக்கமின்றி.....!"
தமிழக மீனவர்கள் ♥
இலங்கை ஜெயிலில் உணவின்றி, தூக்கமின்றி நரக வேதனை அனுபவித்தோம்: தமிழக மீனவர்கள் கண்ணீர் பேட்டி இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 21 பேர் புதன்கிழமை மண்டபம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சிறையில் உணவு, தூக்கமின்றி தவித்ததாக கூறினர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4 ந் தேதி 600 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதில் கச்சத்தீவு அருகே 5 படகுகளில் மீன்பிடித்து கொண்டு இருந்த மலைச்சாமி (வயது 45), போஸ், ராமச்சந்திரன் (40), ரவிச்சந்திரன் (40), கணேசன், முனியசாமி, சேட்டு, முத்தழகு, பிரேம் (25) உள்பட 21 மீனவர்களையும், படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றனர். பின்னர் அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 21 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில் கடந்த 8 ந் தேதி 5 படகுகளையும், 21 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. ஆனால் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு இருந்ததால் அவர்களை ராமேசுவரத்துக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை காலை 10 மணிக்கு 5 படகுகளுடன் 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லைக்கு அழைத்து வந்தனர். அங்கு தயாராக நின்ற இந்திய கடலோர காவல்படையிடம் அவர்களை ஒப்படைத்தனர். பின்னர் இந்திய கடற்படையினர், 21 மீனவர்களையும் மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு அழைத்து வந்தனர். புதன்கிழமை மாலை 4 மணிக்கு மண்டபம் வந்து சேர்ந்த அவர்களிடம் கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் 21 மீனவர்களும் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் இளம்வழுதி, மீன்துறை ஆய்வாளர்கள் சின்னகுப்பன், அஸ்மத்துல்லாகான் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை அடுத்து மீனவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். நிரபராதி விடுதலைக்கான கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம், மீனவர் சங்க தலைவர் போஸ் ஆகியோரும் வரவேற்றனர். விடுதலையாகி வந்த மீனவர்கள் மலைச்சாமி, சேகர், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது: "கடந்த 4 ந் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 2 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி எங்கள் படகை சுற்றிவளைத்தனர். பின்னர் படகில் ஏறி பைப்களால் தாக்கி எங்களை தரக்குறைவாக பேசினர். அதன்பின் எங்களை பிடித்துச் சென்று தலைமன்னார் கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். அங்கு ஒரு அறையில் 300 க்கும் மேற்பட்ட சிங்கள கைதிகளுடன் எங்களையும் சேர்த்து அடைத்தனர். நாங்கள் தமிழர்கள் என்று தெரிந்ததும் சிறையில் இருந்த சிங்கள கைதிகள் எங்களை தூங்கவிடாமல் சித்ரவதை செய்தனர். அங்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை. நாங்கள் ஜெயிலில் உணவின்றி, தூக்கமின்றி நரக வேதனை அனுபவித்தோம். கடந்த 15 ந் தேதி அனுராதபுரம் சிறையில் இருந்து விடுதலை என்று கூறி மன்னார் கடற்கரைக்கு எங்களை அழைத்து வந்தனர். ஆனால் அன்று கடல் கொந்தளிப்பு காரணமாக அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆலயத்தில் எங்களை தங்கவைத்தனர். நேற்று தான் எங்களால் வரமுடிந்தது. அவர்கள் எங்களை ஒப்படைக்கும்போது எல்லைதாண்டி மீன்பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்தனர்."
---------------------------------------------------------------------------
♥ தமிழர் பேரழிவுக்கு மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது ♥ தமிழர் பேரழிவுக்கு மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது: பழ.நெடுமாறன்அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு சார்பில் நேற்று பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் `ஈழத்தமிழரும்-நமது கடமையும்' என்ற கருத்தரங்கு நடைபெற்றது. உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.''சிங்கள அரசு 6 மாதத்தில் மட்டும் 1 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது. சர்வாதிகாரி ஹிட்லரால் யூத மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதை விட மிகப்பெரிய கொடுமை இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்து உள்ளது. இந்தியாவில் வாழும் தமிழர்களை மத்திய அரசு நமது நாட்டின் குடிகளாக நினைக்கவில்லை.ஏறத்தாழ 31/2 லட்சம் தமிழர்கள் இராணுவ கட்டுப்பாட்டில் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். 3 ஆயிரத்து 500 பேருக்கு ஒரு கழிவறை வசதி மட்டுமே செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் மத்திய அரசு தான் காரணம்.இலங்கை தமிழர் பேரழிவுக்கு காரணமாக இருந்தவர்களில் மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன், இந்தியாவில் முக்கிய பதவி வகிக்கும் பி.கே.நாயர், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் இந்திய பிரதிநிதி கோபிநாத், ஐ.நா.சபை செயலாளரின் விவகாரத்துறை அதிகாரி விஜய்நம்பியார், இலங்கை இராணுவ தளபதி பொன்சேகாவின் இராணுவ ஆலோசகரும் விஜய் நம்பியாரின் சகோதரருமான சதீஷ் நம்பியார் ஆகிய அனைவரும் மலையாளிகள்.இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இந்த பேரழிவை ஏற்படுத்தி உள்ளனர். சிவசங்கர மேனனும், நாராயணனும் மாதத்துக்கு 4 தடவை இலங்கைக்கு சென்று வந்தனர். போர் நிறுத்தம் பற்றி பேசுவதாக இலங்கை சென்று டெல்லி திரும்பும் வழியில் சென்னையில் இறங்கி அவர் கள் தமிழக முதலமைச்சரையும் ஏமாற்றி விட்டனர்.இலங்கையில் சீனா நாடுகள் உள்பட நமது எதிரி நாடுகள் கால்பதித்து வருகின்றன. இது நமது நாட்டு பாதுகாப்புக்கு பாதிப்பாக அமையும். இதை புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு தனது தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு உள்ளது.தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நன்றாக உள்ளார். மிக பத்திரமாக இருக்கிறார். எந்த கட்டத்திலும் மீண்டும் தோன்றி தமிழீழ போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராடுவார். அதை அவரே அறிவிப்பார். பிரபாகரன் இறந்து விட்டார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. நம்மை குழப்பவும், போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலும் பரப்பப்படும் பொய் செய்திகளை யாரும் நம்பக்கூடாது.பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எனக்கு உறுதியான செய்தி களத்தில் இருந்து கிடைத்து உள்ளது. தம்பி பிரபாகரன் தலைமையில் போராட்டம் முன் நிறுத்தப்படும். அப்போது உலக தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை நாம் ஒன்று திரண்டு எந்த ஒரு குழப்பத்துக்கும் ஆளாகாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று பேசினார்.
--------------------------------------------------------------------------
♥ தமிழகத்தில் இலங்கை அகதிகள்--'பி.எல். படிச்சுட்டு கல் உடைக்கிறான்...' ♥ தமிழகத்தில் இலங்கை அகதிகள்--'பி.எல். படிச்சுட்டு கல் உடைக்கிறான்...' 'இருந்த ஊரிலும் இடமில்லை; வந்த ஊரிலும்வாழ்வில்லை...' என்கிற கதையாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத் தில் அகதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்கள். தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் பிள்ளைகள் கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பித்தால், அது நிராகரிக்கப்படுவதாக ஒரு விவாதம் சமீபத்தில் சட்டமன்றத்தில் எழுந்தபோது, 'ஈழத்தமிழ் பிள்ளைகள் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பித்தால், முதல்வரிடம் பேசி முறையான வாய்ப்பு வழங்கப்படும்...' என்று சமாதானம் சொல்லியிருந் தார் நிதியமைச்சர் அன்பழகன். ஆனால், ''எங்கட பிள்ளைங்க மெத்தப் படிச்சு மட்டும்என்ன புண்ணியம்? அரசாங்க உத்தியோகம் கிடைக்காவிட்டாலும் பரவா யில்லை, எந்த கம்பெனிக்குப் போனாலும் 'இலங்கைத் தமிழனா... போடா வெளியே!' என்று விரட்டியடிக்கிறார்கள். தாய் மண்ணைத் தொட்ட பின்னும் கல்லு டைத்து, மண் சுமந்து பிழைக்கத் தான் நாங்கள் ஜென்மம் எடுத்திருக்கிறோமா?'' என்று விசும்பு கிறார்கள் அகதிப் பெற்றோர்கள்.பொறியியல், சட்டம், கலை என்று பல வகையான கல்லூரிப் படிப்புகளை முடித்துவிட்டு, தமிழ் அகதி இளைஞர்கள் கட்டட வேலை, பெயின்டர் வேலை என்று கூலித் தொழிலுக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர். ஈழத்தமிழ் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நல்வாழ்வுக்காக களப்பணியில் இறங்கியிருக்கும் நேரு, இந்த வேதனைகளை விளக்குகிறார்.''ஒரு சமயத்துல இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இங்கே பள்ளி, கல்லூரிகள்ல இட ஒதுக்கீடு, இலவச பஸ் பாஸ்னு ஏகப்பட்ட சலுகைகள் இருந்தன. ஆனா, காலப் போக்குல எங்களுக்கான சலுகைகள் படிப்படியா குறைஞ்சுகிட்டே வருது. குறிப்பா, 2003-ம் வருஷத்துல இருந்து எங்க மேலே ஏகப்பட்ட கெடுபிடிகள் பாய ஆரம்பிச்சிருக்கு. அகதிக் குழந்தைகள் அரசு பள்ளிகள்ல படிப்பு வேண்டிப் போறப்ப... எந்த சிக்கலும் பண்ணாம பள்ளிகள்லசேர்த்துக்கிறாங்க.அப்படியே சிலபள்ளிகள்ல சிக்கல் பண்ணினாலும், பணம் கொடுத்துத் தனியார் பள்ளிகள்ல பிள்ளைகளைச் சேர்த்துப் படிக்க வச்சுடுறோம். ஆனா, ப்ளஸ்-டூ முடிச்சுட்டுக் கல்லூரி வாழ்க்கையில அடியெடுத்து வைக்கிறப்ப, 'நீ இலங்கை அகதி'னு சொல்லி, அரசு கல்லூரிகள்ல ஸீட் தர மறுக் கறாங்க. எங்களுக்கான ஒதுக்கீடு குறித்துக் குரல் கொடுத்தாலும், எந்தப் பலனும் கிடைக்கிறதில்லை. தனியார் கல்லூரிகள்லயும் இதே பிரச்னைதான். ஆனாலும், எக்கச்சக்கமா பணம் கட்டுறோம்னு சொன்னா, கொஞ்சம் மனசு இரங்கி வந்து ஸீட் தர்றாங்க. ஆனா, ஒவ்வொரு செமஸ்டருக்கும் கொள்ளைப் பணம் கட்டிப் படிக்கிறதுக்கு எங்க கையிலே காசு ஏது? 'அகதிகள் முகாமைவிட்டு வெளியே போகக் கூடாது, அங்கே பேசக் கூடாது, இங்கே பேசக்கூடாது'னு எங்க மக்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள். இதுக்கு நடுவுல கஷ்டப்பட்டு கூலி வேலை பார்த்துக் குழந்தைகளைப் படிக்க வைக்க நினைக்கிற பெத்தவங்களால பிரைவேட் காலேஜுக் கான ஃபீஸை எப்படிக் கட்ட முடியும்? ப்ளஸ்-டூ படிப்புல ஆயிரத்துக்கு மேலே மார்க் எடுத்தும், வறுமையால கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாம இருக்கிற முகாம் குழந்தைகள் பத்தி, ஈழ இன உணர்வு உள்ளவங்ககிட்டே எடுத்துச் சொன்னோம். அதோட விளைவா நடிகர் சூர்யா, சத்யராஜ், மணிவண்ணன் போன்றவர்கள் எங்க பிள்ளைகளுக்கு உதவ இந்த ஆண்டு முன் வந்திருக்காங்க. இப்படிக் கஷ்டப்பட்டுப் படிச்சு முடிச்சாலும் எங்க எதிர்காலம் கேள்விக்குறியாத் தான் இருக்கு. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காவிட்டாலும்கூடப் பரவாயில்லை...அதுக்கு சம்பந்தமேஇல்லாத வேலையைக்கூடத் தரமாட் டேன்னுதான் சொல்றாங்க. இப்படித்தான் பாருங்க... டெலாம், ஷோபா, லூமன், சிவாகரன், ஆனந்தசிவம்னு ஐந்து பேர் தமிழக அரசு சட்டக் கல்லூரிகள்ள பி.எல். படிச்சு பாஸ் பண்ணிட்டு, வழக்கறிஞரா ப்ராக்டீஸ் பண்றதுக்காக பார் கவுன்சில்ல பதிவு பண்ணப் போனப்போ... 'நீ இந்திய பிரஜை இல்லை. அதனால ப்ராக்டீஸ் பண்ண முடியாது'ன்னு சொல்லி புறந்தள்ளிட்டாங்க. என்ன தான் அரசு கல்லூரின்னாலும் பல வகையான செலவு களைப் பண்ணி, அஞ்சு வருஷமா விழுந்து விழுந்து படிச்சதுக்கான பலனில்லாம நொந்து போய்க் கிடக்கிறாங்க. இந்தப் பதிவுக்காக அலைஞ்சு திரிஞ்சு வெறுத்துப் போன பவானிசாகர் அகதிகள் முகாம்ல இருந்த ஆனந்த சிவம், பிழைப்புக்காக எங்கேல்லாமோ போய் ஒரு கட்டத்துல செத்தே போயிட்டாரு. அதே முகாம்ல இருக்கிற டெலாம் குடும்பத்தினரும் அவனோட வக்கீல் தொழிலை நம்பித்தான் எதிர்காலத்தை ஓட்ட நினைச்சி ருந்தாங்க. ஆனா, வக்கீலுக்குப் படிச்சது வீணாகிப்போய் ஏதாவது பிரைவேட் கம்பெனியில நல்ல வேலைக்குப் போகலாம்னு நினைச்சு ஏறி இறங்காத கம்பெனி யில்லை. ஆனா, எல்லா கம்பெனியிலேயும் சொல்லி வச்ச மாதிரி, 'இலங்கை அகதிக்கு இங்கே வேலை இல்லை'னு முகத்துல அடிச்சுத் திருப்பி அனுப்பிட்டாங்க. பத்து மாசத்துல குறைஞ்சது இருநூற்றியறுபது இன்டர் வியூக்களை அட்டெண்ட் பண்ணின அந்தப் பையனால, ஒரு வேலைகூட வாங்க இயலலை. விளைவு, பெயின்டர் வேலைக்கும் கல் உடைக்கிற வேலைக்கும் போயிட்டிருக் கிறான். என்ன கொடுமை பாருங்க! இந்த டெலாம் மாதிரியே இன்னும் ஏகப்பட்ட பேர் தமிழக முகாம்கள் முழுக்கத் தவிச்சுக் கிடக்கிறாங்க.எங்களோட பிரச்னைகள் குறித்து முதல்வர், அமைச்சர் முதலியவங்களுக்கு மனு அனுப்பினாலும் கூட சிக்கல்தான். அந்த மனு நகலை எடுத்துக் கொண்டு வந்து க்யூ பிராஞ்ச் போலீஸ்காரங்க, 'யாரைக் கேட்டு மனு அனுப்பினே?'னு குடைஞ்செடுக்கிறாங்க. நிலைமை இப்படியே போயிட்டிருந்தா... எங்க எதிர்காலம் என்ன ஆகுறது? எங்க சந்ததிகள் முழுக்க இனி கூலி வேலை பார்த்தே மடிய வேண்டியதுதானா? இந்த வேதனைகளை எல்லாம் கனிமொழி எம்.பி-யை சமீபத்துல சந்திச்சு விளக்கியிருக்கோம். எங்களுக்கு அரசாங்க உத்தியோகம் கொடுங்கன்னு கேட்கலை; படிப்புக்கு ஏற்ற மாதிரி ஓரளவு வருமானம் வரும் வகையில சாதாரண வேலைக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாலும் தேவலை என்று புலம்பியிருக்கோம். அவங்களும் 'அப்பா கிட்ட பேசி நல்ல தீர்வு கிடைக்க முயற்சிக்கிறேன்'னு சொல்லியிருக்காங்க. நல்ல சேதி வருமா என்று பார்ப் போம்...'' என்கிறார் வேதனை பொங்க. ஈழத்தமிழர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாத நிலை குறித்து சில சீனியர் வழக்கறிஞர்களிடம் பேசியபோது, ''அட்வகேட் ஆக்ட்படி ஒருவர் இந்தியாவில் சட்டம் பயின்றிருந்தாலும், அந்த நபர் இந்தியப் பிரஜையாக இருந்தால் மட்டுமே பார் கவுன்சிலில் பதிவு செய்து ப்ராக்டீஸ் செய்ய இயலும். அதே நேரத்தில், பி.எல். படித்து விட்டு ஒருத்தன் கல் உடைக்கிறான், பெயின்ட் அடிச்சு குடும்பத்தைக் காப்பாத்துறான் என்பதும் கொடுமை யான விஷயமே. அரசுதான் தலையிட்டு இவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர வேண்டும்!'' என்கிறார்கள்.- எஸ்.ஷக்திபடங்கள்: 'ப்ரீத்தி' கார்த்திக்நன்றி:விகடன்
............................................................................
♥ தமிழகத்திலேயே தமிழர்களை அடிக்கும் சிங்களர்கள்! ♥ தமிழகத்திலேயே தமிழர்களை அடிக்கும் சிங்களர்கள்!
'தமிழனுக்குஇதைவிட கேவலம் வேறென்ன வேணும்ங்க?! ஈழத்துல நம்மாளுங்களை அழிச்சப்பதான்தட்டிக்கேட்கத் திராணியில்லாம இருந்துட்டோம். ஆனா, தமிழ்நாட்டுக்குள்ளேவந்து சிங்களன் நம்மளை அடிக்கிறான்னா எவ்வளவு திமிரு இருக்கணும்!'' - கனல்
வார்த்தை தெறிக்கிறது திருப்பூர் திசையிலிருந்து! திருப்பூர் மாவட்டம்பெருமாநல்லூர் அருகிலுள்ள காளாம்பாளையத்தில் 'மெர்டியன் அப்பேரல்ஸ்' என்றபனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. வினோத்குமார் என்ற வட இந்தியருக்கு
சொந்தமான இந்த நிறுவனத்தில், சுமார்ஆயிரத்து ஐந்நூறு பணியாளர்கள் பணிபுரிகி றார்கள். இதில் மூன்றில் ஒருபங்கினர் தமிழர்கள். மற்றவர்கள் ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில்,ஜூலை 17-ம் தேதி கம்பெனி கேன்டீ னுக்குள் ஒரு பெரிய மோதல் உருவாகி,தமிழர்கள் தர்ம அடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒரிஸ்ஸா
மாநிலத்தைச்சேர்ந்தவர்களிடம் கடியும், அடியும் வாங்கிய செல்ல பாண்டியன் அதைப் பற்றிச்சொல்கிறார். ''மூணு மாசத் துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாதான்இருந்துச்சுங்க கம்பெனி. ஆனா, சமீந்தா பண்டாராங்கிற சிங்களன் என்னிக்கு
இங்கே ஜெனரல் மேனேஜரா வந்து சேர்ந் தாரோ... அன்னிலேருந்து எங்களுக்குஆரம்பிச்சுதுங்க தலைவலி. அந்தாளுக்கு தமிழர்களைக் கண்டாலே பத்திக் கிட்டுஎரியும். நாங்க எதைப் பண்ணினாலும் தப்புன்னு சொல்லித் திட்டுறது,மிரட்டுறதுன்னு டார்ச்சர் பண்ணிட்டே இருப்பாரு. எல்லாத்தையும் தாங்கிட்டு
வேலை பார்த்துட்டு இருந்தோம். அதனால, மத்த மாநிலத் துக்காரங்களை வச்சுதமிழ் ஆளுங்களை வம்பு பண்ண ஆரம்பிச்சாரு. குறிப்பா, ஒரிஸ்ஸா ஆளுங்ககிட்ட,'நீங்க தமிழனுங்ககூட பழக்கம் வச்சுக்கக்கூடாது'னு சொல்லி யிருக்காரு.
அவங்க முதல்ல இதைக் கண்டுக்கல. ஆனா, 'வேலையை விட்டு தூக்கிடுவேன்'னுமிரட்டுனதால, அவங்க எங்ககிட்டே தேவையில்லாம முறைச்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க. லேசா ஆரம்பிச்ச உரசல், நாளாக நாளாக வளர ஆரம்பிச்சுடுச்சு. அன்னிக்கு கேன்டீன்ல வச்சு எங்களுக்கும், ஒரிஸ்ஸாக் காரங்களுக்கும் சின்ன வாக்குவாதம் உருவாச்சு. ஆனா,
திடீர்னு அவங்க அடிதடியில இறங்கிட்டாங்க, கத்திரி மாதிரி இருக்கிறட்ரிம்மரை எடுத்து கண்டபடி கீறிவிட் டாங்க. தமிழருங்களைப் பார்த்துபார்த்து அவங்க அடிச் சாங்க; கடிச்சாங்க. அவனுங்ககிட்ட கடிபட்டதுல எனக்கு
ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. உடனே,இதைப்பற்றி நிர்வாகத்துகிட்ட சொன்னோம். ஆனா, கொஞ்சமும் கண்டுக்காம, தமிழர்களைஅடிச்சவங்களை பாதுகாக்கறதுலேயே குறியா இருந்தாங்க. அப்புறம் நாங்க எல்லாம்அடிச்சுப் பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்!'' என்கிறார்வேதனையாக. இவரைப் போலவே ரவி என்பவ ரையும் ட்ரிம்மரால் நெஞ்சில்கீறிவிட்டிருக்கின் றனர். ஏஞ்சல் என்கிற பையனுக்கும் அடிவிழுந்திருக்கிறது. இதனைக்கண்டித்த தமிழர் தொழிலாளர்கள் தங்கள் கம்பெனிக்கு எதிரே பந்தல் போட்டுஆக்ரோஷத்துடன் போராட்டத்தில் உட்கார்ந்து விட்டார்கள். அவர்களில் ஒருவரானகமலநாதன்,
''எங்க முதலாளி வினோத்நல்லவர்தானுங்க ஆனா, அவரோட பையன்கிட்டே... இந்த சமீந்தா பண்டாரா'கம்பெனியை பக்காவா மாத்திக்காட்டுறேன்!'னு சொல்லி பவர் வாங்கிக்கிட்டு,இந்த ஆட்டம் ஆடுறாரு. இந்த கம்பெனியில ஒரு தமிழன்கூட வேலை பார்க்கக்
கூடாதுங்கிறது அவரோட எண்ணம். கூடவே இலங் கையில இருந்து சிலரை கூட்டிவந்திருக்கிறாரு. அவங்களுக்கும் ஏதேதோ பொறுப்பு போட்டுக்கொடுத்திருக்காரு. அந்த இலங்கைக் காரனுங்க தமிழ் ஆளுங்களை கண்காணிச்சு,வம்புக்கிழுக்கிறதே முழுநேர தொழிலா வச்சுருக்கானுங்க. தமிழ் பொண்ணுங்ககிட்டேயும் தரக்குறைவா நடந்துக்கிறாங்க.சுடிதாரை பிடிச்சு இழுக்கிறது, பின்பக்கம் தட்டிட்டு போறதுன்னு மோசமாசிலுமிஷம் பண்றானுங்க. இதையெல்லாம் தட்டிக் கேட்டா, தகராறு வந்து அடிவிழுது. இந்தப் போக்கு மாறணும்; சமீந்தாவை வேலையில இருந்து தூக்கணும்னுசொல்லித்தான் இந்தப் போராட்டத்துல உட்கார்ந்திருக்கோம்!'' என்றார்.
மெர்டியன்அப்பேரல்ஸின் ஜெனரல் மேனேஜரான சமீந்தா பண்டாராவை இந்த விவகாரம் தொடர்பாகசந்தித்துப் பேச முயன்றோம். ஆனால், அவர் பேச சம்மதிக்கவில்லை. நிர்வாகத்தரப்பு மட்டும், ''இனவெறித் தாக்குதல் எல்லாம் இங்கே நடக்கல. தொழிலாளர்களுக்குள்ளநடந்த சின்ன மோதலை பெரிய விஷயமா சிலர் வேணும்னே ஊதிவிட்டிருக் காங்க. இந்த விவகாரம் போலீஸ் கேஸாயிருக்கு. போலீஸ்காரங்களும் பேச்சுவார்த்தைநடத்தியிருக்காங்க. நாங்களும் பேச்சுவார்த்தை நடத்து றோம். கூடிய விரைவில்இந்த விவகாரம் சரிசெய்யப்படும்!'' என்று சொல்கிறது.
இந்த கம்பெனியில் மட்டுமில்லை... திருப்பூரில்பல கம்பெனிகளில் இப்படியரு நிலை இருப்பதாகச் சொல்லிச் சாடும்ம.தி.மு.க-வின் திருப்பூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரான வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ''திருப்பூர்ல இருக்கிற பல பிரபல பனியன் கம்பெனிகள்லசிங்களளர்கள் முக்கியப் பொறுப்புல இருக்கிறாங்க. தமிழ் தொழிலாளர்களைநசுக்கிப் பிழியுறதுதான் இவங்களோட முக்கிய வேலையே. 'யூனியன்வைக்கக்கூடாது; சட்டம் பேசக் கூடாது; எதிலும் நியாயம் கேட்கக் கூடாது'ன்னு
சொல்லி தமிழ் தொழிலாளர்களோட கழுத்தை நெரிக்கிறாங்க. தமிழ் பெண்கள்கிட்டேயும் பாலியல் அத்துமீறல் நடக்குது. எவ்வளவு கொடுமையான நிலைபாருங்க... இதைவிட பெரிய கேவலம் தமிழனுக்கு வேறென்ன இருந்திடப் போகுது?
இந்தசிங்களர்களுக்கு பெரிய பொறுப்பும், கைநிறைய சம்பளமும், காரும் பங்களாவும்கொடுத்து ஆடவிட்டிருக்கிற பனியன் கம்பெனி முதலாளிகளுக்கு 'தமிழுணர்வு
அற்றுப் போயிடுச்சு'ன்னுதானே அர்த்தம்? மெர்டியன் அப்பேரல்ஸ்ல நடந்ததுஅப்பட் டமான இனவெறித் தாக்குதல்தான். இதை அப்படியே மூடிமறைக்க முயலாம,அந்த சிங்களர்களை உடனடியா வேலையில இருந்து தூக்கி எறியணும். இங்கேஇருக்கிற எல்லா கம்பெனிகளுமே எந்த சிங்களர்க ளுக்கும் கூலி வேலை கூடகொடுக்கக்கூடாது. கூடிய சீக்கிரத்தில் அத்தனை கம்பெனி தமிழ்தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து மிகப்பெரிய போராட்டங்கள்ல இறங்குவோம்!''என்றார் ஆக்ரோஷமாக.
இதுதொடர்பாகதிருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளர்கள் சங்கங்களிடம் பேசியபோது,''ஒருத்தரை வேலைக்கு எடுக்கிறப்போ படிச்சவனா, நிர்வாகத் திறமையானவனான்னுபார்க்கிறோமே தவிர... அவனோட சாதி, இனமெல்லாம் பார்க்கிறதே இல்லை. பனியன்கம்பெனிகள்ல சிங்களர்கள் ஆட்டம் போடுறாங்க... பெண்களைத் தொந்தரவுபண்றாங்கன்னு சொல்றதெல்லாம் அடிப்படையற்ற குற்றசாட்டுகள். இலங்கையிலஇருந்து அகதியா வந்த தமிழர்கள் பலபேருக்கு எங்க கம்பெனிகள்ல வேலை வாய்ப்புகொடுத்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிற எங்களுக்கா தமிழ்உணர்வு இல்லை?'' என்று திருப்பிக் கேட்கிறார்கள்.
- எஸ்.ஷக்தி, ஜெ.அன்பரசன்
ஆதிசிவம்,சென்னை.
www.beyouths.blogspot.com
ஓடும்நதி........!
www.odumnathi.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment