வவுனியா முகாம்களில் இருந்து நாளை 665 இந்துக் குருமார்கள் விடுவிக்கப்படுவர்
எழுதியவர்....வன்னியன் on August 25, 2009
Thamizmanam.com
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இந்துக் குருமார் 665 பேர் நாளை புதன்கிழமை அங்கிருந்து விடுவிக்கப்படுவர். அவர்கள் நலன்புரி நிலையங்களில் வைத்து இந்துப் பொது அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
விடுவிக்கப்படும் இந்துக் குருமாரை, கையேற்கும் அமைப்புகள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று சர்வதேச இந்து சம்மேளனத்தின் உப தலைவர் இராமச்சந்திரக் குருக்கள் (பாபு சர்மா) தெரிவித்தார்.
இந்துக் குருமாரை முகாம்களிலிருந்து விடுவிப்பதற்கு வேண்டிய சகல ஏற்பாடுகளையும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்திருந்தார்
மீனகம்.கொம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment