"இலங்கையின் வடபகுதியில் 84 விழுக்காடு நிலம் மத்திய அரசுக்கே உரியது"
[வெள்ளிக்கிழமை, 07 ஓகஸ்ட் 2009, 06:45 பி.ப ஈழம்] [பி.தெய்வேந்திரன்]
இலங்கையின் வடபகுதியில் 84 விழுக்காடு நிலமும் கிழக்குப் பகுதியில் 41 விழுக்காடு நிலமும் சிறிலங்கா மத்திய அரசுக்கே உரியது என்று நாடாளுமன்றத்தில் நேற்று அரசு தெரிவித்தது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அரச தரப்பில் இந்தப் பதில் தெரிவிக்கப்பட்டது.
வடக்கில் உள்ள 8 லட்சத்து 29 ஆயிரத்து 880 ஏக்கர் நிலத்தில் 7 லட்சத்து 25 ஆயிரத்து 471 ஏக்கர் நிலம் மத்திய அரசின் வரம்புக்குரியது என்றும், கிழக்கில் 54 ஆயிரத்து 551 ஏக்கர் நிலம் மத்திய அரசுக்குச் சொந்தமானது என்றும் 76 ஆயிரத்து 666 ஏக்கர் நிலம் கிழக்கு மாகாண சபைக்குச் சொந்தமானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கூறினார்.
இந்த இரு மாகாணங்களிலுமே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எந்த நிலமும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வர்த்தக முதலீடுகளுக்காக வடக்கில் 4.31 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று 26.21 ஏக்கர் நிலம் சில இலங்கையர்களுக்கு அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரித்து வழங்கப்பட்டுள்ளது
கிழக்கில் 148.7 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 620.02 ஏக்கர் நிலம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தனியார் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
puthinam.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment