அம்மாவை நினைக்கையிலே அன்பு ஊற்றெடுக்கும்! பண்பு பாய்ந்து வரும்!!
பணிவு தேடி வரும்! பாசம் நாடி வரும்!அறிவு ஆறாகும்!பக்தி பெருகிவிடும்!!
அப்பாவை நினைக்கையிலே ஆற்றல் ஓடிவரும்! எதிர்காலம் கனவு காணும்!!
கற்பவை நாடிவரும்! சிந்தனை சிறகடிக்கும்! கற்பனை குதிரை பாயும்!!
அக்காவை நினைக்கையிலே சங்கீதம் நினைவு வரும்! ராகம் ரீங்காரமிடும்!!
தாளம் தாளமிடும்!பல்லவி பாட்டிசைக்கும்!பக்திப் பரவசமாகும்!!
தங்கையரை நினைத்துவிட்டால் குறும்புகள் நினைவுவரும்!குட்டுகள் நினைவுவரும்!!
குழப்படிகள் நினைவுவரும்! குறுஞ்சண்டை நினைவுவரும்!குசும்புகள் கூடவரும்!!
தம்பியை நினைத்துவிட்டால் தூக்கித் திரிந்தகாலம்,பாடசாலை கூட்டிச்சென்றகாலம்,
தோட்டவெளியில் வாய்க்காலில் கால்கழுவிச்சுமந்து இழுத்துப்பறித்த இனியகாலம்!!
அம்மப்பாவை நினைக்கையிலே ஐம்பத்தெட்டுகலவரத்தில் பட்டதுன்பம் கூறிடுவார்!!
பாலத்துறைவர்த்தகராய் புகைலை,சுருட்டுதனை விற்றகதைகேட்டு,வாய்பிளப்போமே!!
அம்மம்மா கடவுள்பக்தி!அப்பனே பிள்ளையாரே!நீயே விட்டவழி!என தன்னையே
ஒப்படைத்து வாழ்விலே எமையும் தாங்கி எல்லோர்மனமும் கோணா வாழ்ந்தவர்!!
அப்பப்பா என்னும் அப்பு!தப்பாமல் நியாயம் கூறி,பகிடிகள், கதைகள்,பேசிவாழ்ந்தவர்!!
எப்போதும் அறிவாய்பேசி!வைரவர்மடையும்,தோட்டவேலையில் மகிழ்வும்கண்டார்!!
அப்பம்மா எனும் குஞ்சி ஆறுதல் தந்து எம்மை அரவணைத்து உணவூட்டி அன்பாய்
அன்னை இளம்வயதில் மறைந்த சிலகாலம் பராமரித்த பண்புதனை மறக்கலாமோ!!
அன்னை,தந்தையின் சோதர,சோதரியர்,எல்லோரும் காட்டியபாசத்தை மறக்கலாமோ!!
ஆங்கில,சங்கீத,தமிழ்,கணித பாடம் கற்றுதந்த சித்தியர்,சினிமா காட்டிய சித்தப்பா!
அம்மான்:தாயின்மாமன்,தமிழ்,சைவம் வளர,பரராசசேகர பிள்ளையார் கோவிலில்
எம்மூர் இணுவிலில் தொண்டுகள்,சிரமதானம்,சங்கம் வளர்த்து,உரையாற்றியவர்!!
உறவுகள் தானே தமிழரின் வாழ்வும்,வளமும்!உறவுகள் அற்றோர்க்கு உலகம் ஏது!?
சுனாமி ஆழிப்பேரலையில் உறவுகளை இழந்தோர் தம் உயிர் துறந்தனரே!ஏன்??ஏன்??
--------------பிரபு ,நோர்வே-------------------------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment