WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, September 1, 2009

வன்னியை ராணுவஆக்கிரமிப்புக்குள் கொண்டுவந்து ஒட்டுமொத்த வடகிழக்குபகுதியை சிங்களபவுத்தபூமியாக மாற்றுவதே அரசின்கொள்கை

இலங்கையில் தமிழ் மக்களின் கலாசார சின்னங்கள் அழிப்பு

on 31-08-2009 16:31

இலங்கையில் தமிழ் மக்களின் கலை மரபுகளை வெளிப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட கலாசார மண்டபம், இந்து பேரவை கட்டிடம் போன்றவை அனைத்தும் அழிக்கப்படுகிறது. அங்கிருந்த கலாசார சின்னங்கள் யாவும் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளன. இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த கண்ணி வெடிகள் தடையாக உள்ளன. அவற்றை அகற்றிய பின்னர் தான் அங்கு மக்களை மீண்டும் குடியமர்த்த முடியும் என அதிபர் ராஜபக்சேயின் சிங்கள அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், கிளி நொச்சியிலும், அதனை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் ராணுவ வீரர்களுக்கான நினைவு சின்னங்கள் மற்றும் புத்த கோவில்களை கட்டி வருகிறது.


ஓமந்தையில் இருந்து பளைவரை ஏ9 வீதியின் இருமருங்கிலும் இருந்த அனைத்து கட்டிடங்களும் இடித்து தரை மட்டமாக்கப்பட்டு அவை இருந்த இடமே தெரியாமல் செய்யப்பட்டு வருகிறது.

சைவத்தையும் தமிழையும் பாதுகாத்த தமிழ் மக்களின் கலாசார சின்னமான யாழ் பாணத்தின் முகப்பான ஆனையிறவில் பிரமாண்டமான புத்தர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு ராணுவ முகாம் மட்டுமே இருந்தது. இன்று பவுத்த, சிங்களத்தின் ஆக்கிரமிப்பின் வடிவமாக யாழ்ப்பாணத்து நுழைவு வாயிலில் இக்கோவில் கட்டப்பட்டு வருகிறது.

கிளிநொச்சியில் இருந்த மிகச்சிறிய புத்த கோவில் தற்போது பிரமாண்டமாகப் கட்டப்படுகிறது. தமிழ் மக்களின் கலை மரபுகளை வெளிப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட கலாசார மண்டபம், இந்து பேரவை கட்டிடம் போன்றவை அனைத்தும் அழிக்கப்படுகிறது. அங்கிருந்த கலாசார சின்னங்கள் யாவும் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளன.

இதன் அருகில் இருந்த கிளிநொச்சி பொதுச்சந்தை, எண்ணை நிரப்பு நிலையம், போக்குவரத்து டெப்போ போன்ற அனைத்து இடங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு போரில் கொல்லப்பட்ட சிங்கள ராணுவ வீரர்களுக்கான சமாதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 1981 ம் ஆண்டு ஏறத்தாழ ஒரு லட்சம் புத்தகங்களுடன் யாழ்ப்பாண நூல் நிலையத்தை சிங்கள வெறியர்கள் தீயிட்டு கொளுத்தினர். அன்று அவர்களால் ஓர் கலாசார படுகொலை தொடங்கி வைக்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக கலாசார படுகொலைகள் கிளிநொச்சியில் அரங்கேறி வருகின்றன.

இதுவரை கிளிநொச்சி பொன்னம்பலம் வைத்திய சாலையில் இருந்து கந்தசாமி கோவிலை உள்ளடக்கி கரடிப்போக்கு சந்திவரை ராணுவ தளத்திற்கான பகுதி எனவும், அது உயர் பாதுகாப்பு வளையம் எனவும் பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது. இவ்வளவு ஆக்கிரமிப்பு வேலைகளுக்கும் கண்ணிவெடி பிரச்சினை கிடையாது. அது போன்று அரசாங்கத்தால் புரளி கிளப்பிவிடப்படுகிறது. மொத்தத்தில் வன்னியை ராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்து ஒட்டு மொத்த வட கிழக்கு பகுதியை சிங்கள பவுத்த பூமியாக மாற்றுவதே அரசின் கொள்கை என தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
TNC

31-08-2009 16:31
http://adhikaalai.com

No comments: