
C.S Baskaran
திஸ்ஸநாயகத்துக்கு பீற்றர் மக்லர் மற்றும் சர்வதேச விருது
பிரசுரித்த திகதி : 01 Sep 2009
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு துணிவான, நீதியொழுக்கமுள்ள ஊடகத்துறைக்கான பீற்றர் மக்லர் விருதும், சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான விருதும் கிடைத்துள்ளது.
2009 ஆம் ஆண்டுக்கான துணிவான, நீதியொழுக்கமுள்ள ஊடகத்துறைக்கு வழங்கப்படும் பீற்றர் மக்லர் விருது திஸ்ஸநாயகத்துக்குக் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பதை பாரிசை தளமாகக் கொண்டு இயங்கும் எல்லையில்லா ஊட்கவியலாளர் அமைப்பு அறிவித்துள்ளது. திஸ்ஸநாயகம் உண்மையைக் கண்டறிந்து எழுதுபவர் என்றும், இவ்வாறான ஊடகவியலாளரை ஒருபோதும் சிறையில் அடைக்கக் கூடாது என்றும் அந்த அமைப்பின் செயலாளர் கூறியுள்ளார்.
இந்த விருதுக்காக எல்லையில்லா ஊட்கவியலாளர் அமைப்பின் அமெரிக்க கிளையும், அனைத்துலக ஊடகப் பேரவையும் சேர்ந்து திஸ்ஸநாயகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இதேவேளை ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு என்கின்ற சர்வதேச ஊடக அமைப்பு ஊடகவியலாளர் திஸநாயகத்திற்கு 2009ஆம் ஆண்டின் சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான விருதைத் தாம் வழங்குவதாகவும் நேற்று அறிவித்துள்ளது. இந்த விருதானது வரும் நவம்பர் மாதம் வழங்கப்படும்
No comments:
Post a Comment