கடந்த மூன்று வருடங்களில் கொலை, கடத்தல் மற்றும் காணாமல் போதல் குறித்த 15000 முறைப்பாடுகள்
எழுதியவர்வன்னியன் on November 11, 2009
கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் கொலை, கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் சுமார் 15000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக விசேட ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
படுகொலைச் சம்பவங்கள், கடத்தல்கள், அடையாளம் காணப்படாத சடலங்கள், இனந்தெரியாத படுகொலைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மூவர் அடங்கிய விசேட ஆணைக்குழுவின் தலைவர் மஹானாம திலகரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் மொத்தமாக 410 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இந்தக் பொலிஸ் நிலையங்களுக்கு நாள் தோறும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் அசமந்தப் போக்கினை பின்பற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சரியான முறையில் விசாரணைகளை நடத்தி நீதியை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
WWW.MEENAKAM.COM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment