www.Thinakkural.com || info@thinakkural.com
மீளக்குடியமர்த்துவதற்கு முன்னரே வடக்கு,கிழக்கில் காணிகள் சுவீகரிப்பு
தமிழர்களை அவர்களின் பாரம் பரிய பிரதேசங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு முன்பாகவே வடக்கு,கிழக்கு மாகாணங்களில் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்குள் கவர்ந்திழுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையில் வர்த்தக,முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக சென்னையில் இடம்பெற்ற நிறுவனமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேலு கிருஷ்ணமூர்த்தி, உணவுப் பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமான பாரிய
நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னேற்றகரமான விவசாய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தக்கூடிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டின் வடக்கு,கிழக்குப் பகுதிகளின் அநேகமான பிரதேசங்கள் உல்லாசப் பயணிகளுக்கும் இந்திய முதலீட்டாளர்களுக்கும் திறந்து விடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். உல்லாசப் பயணத்துறை சார்ந்த உள்சார் கட்டமைப்பை ஏற்படுத்தவே இந்திய முதலீட்டாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி,மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிகுடா,வாகரை,அறுகம்குடா என்பன உல்லாசப் பயணத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய பகுதிகளென அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அத்துடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான முறைமைகளை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment