WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, December 8, 2009

WAR CRIMES CASE AGAINST SRILANKA REGIME FROM DENMARK..!!!

போர்க்குற்றம் புரிந்த சிறீலங்காவுக்கு எதிராக டென்மார்க்கில் வழக்கு பதிவு

எழுதியவர்....ரமணன் on December 8, 2009

விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு மேற்கொண்ட போரின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் டென்மார்க்கில் செயல்படும் தமிழ் அமைப்புகளினால் சேகரிக்கப்பட்டு, இலங்கை அரசை நீதிக்கு முன்நிறுத்த டென்மார்க் அரச சட்டதரணி ஒருவர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கைத்தீவில் தமிழ் பேசும் மக்களின் விடுதலை வேட்கையை ஒடுக்குவதற்காக இலங்கை அரசு மேற்கொண்ட போரின் போது இலங்கை அரசபடைகள் மேற்கொண்ட மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் டென்மார்க்கில் செயல்படும் தமிழ் அமைப்புகளினால் சேகரிக்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பான திசைகள் அமைப்பினால் டென்மார்க்கில் சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும் அரச சட்டதரணிக்கு அனுப்பப்படடிருந்தது.

டென்மார்க்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தட்ப,வெப்பநிலை மாறுபாட்டின் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் இலங்கை அரச பிரதிநிதிகள் மனிதகுலத்திற்கு எதிரான அல்லது போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனரா என விசாரனை செய்யுமாறு தமிழ் அமைப்புக்கள் டென்மார்க் அரச சட்டத்தரணியை கேட்டிருந்தனர்.

திசைகள் அமைப்பினரின் வேண்டுகோளை (Journal nr.: SAIS-2009-629-0047) பதிவு செய்துள்ள டென்மார்க் அரச சட்டத்தரணி, ஜக்கிய நாடுகள் சபையின் தட்ப,வெப்பநிலை மாறுபாட்டின் குழுவும் டென்மார்க் அரசும் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ம் திகதி ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம், தங்களால் இந்த மாநாட்டிற்கு வரும் அரச பிரதிநிதிகளை கைது செய்யவோ விசாரணை செய்யவோ முடியாது என திசைகள் அமைப்பினருக்கு அறிவித்துள்ளனர்.

சூடான் அரச அதிபரை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை டென்மார்க்கை கேட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடதக்கது.

டென்மார்க் வரும் இலங்கை அரச பிரதிநிதிகள் ஜக்கிய நாடுகள் சபையின் தட்ப,வெப்பநிலை மாறுபாட்டின் மாநாடு தவிர்ந்த வேறுவிடயங்களில் ஈடுபடுவதை கண்காணிக்கும்படி திசைகள் அமைப்பினர் டென்மார்க் அரச சட்டத்தரணியிடம் டென்மாக்கில் செயல்படும் தமிழ் அமைப்புக்கள் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் இலங்கை தூதுக்குழுவினர் டென்மார்க் வருகையில் அவர்கள் மீது விசாரணைகள் நடாத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நடாத்திய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வைத்திருக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் டென்மார்க் அரச சட்டத்தரணிக்கு ஆதாரங்களை அனுப்பி இலங்கை அரசை நீதிக்கு முன்நிறுத்த உதவிடமுடியும்.

உங்களிடம் உள்ள ஆதாரங்களை அனுப்பும் பொழுது டென்மார்க் அரச சட்டத்தரணி இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக குறிப்பிட்டிருக்கும் ஆவண இலக்கம் Journal nr.: SAIS-2009-629-0047 ஐ குறிபிட்டு Statsadvokaten for Særlige Internationale Straffesager, Jens Kofods Gade 1, 1268 København K, Denmark என்ற முகவரிக்கோ அல்லது SICO@ANKL.DK என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பவும்.

டென்மார்க்கில் சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும் அரச சட்டத்தரணியின் இணையத்தளம்: http://www.sico.ankl.dk/page22.aspx

meenakam.com

No comments: