WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, January 2, 2010

சிங்களக் காடையர்களின் மத்தியில்தான் தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கொண்டுசென்று விடப்பட்டுள்ளார்கள்...!!!

சிறீலங்காவின் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக கிளிநொச்சியில் தமிழ்ப்பெண் படுகொலை
பதிந்தவர்_வன்னியன் on January 2, 2010

சிறீலங்கா அரசின் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக கிளிநொச்சியில் தமிழ்ப்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வதை முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கிளிநொச்சிக்கு கொண்டுசென்று விடப்பட்டுள்ளவர்களில் முறிகண்டியின் மேற்குப் பகுதியில் உள்ள மக்களில் 35 அகவையுடைய நாகராஜா ஆரியமலர் என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இவரது உடலம் கிளிநொச்சியில் உள்ள காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஏ.9 முதன்மை வீதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மற்றும் முல்லைத்தீவின் மேற்குப் பகுதிகளிலும் சிங்களப் படைகள் முகாம்கள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளர்கள். இவ்வாறு சிங்களக் காடையர்களின் மத்தியில்தான் தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கொண்டுசென்று விடப்பட்டுள்ளார்கள்.

நேற்று ஆரியமலர் எனும் குடும்பப்பெண் தனது இருப்பிடத்தை விட்டு வெளியில் சென்றுள்ளதாகவும், வெளியில் சென்று நீண்டநேரமாகியும் இருப்பிடம் திரும்பாததால் இவரின் தாயார் காவல்துறையில் முறையிட்டுள்ளதை அடுத்து முறிகண்டியின் சித்தாண்டி பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய தேடுதலை அடுத்து இப்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இப்பிரதேசம் எங்கும் சிறீலங்காப் படைப்பிரிவின் 58ஆவது டிவிசன் படையணியினர் முகாம்கள் அமைத்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறான சூழலில்தான் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படுகொலைக்கு பின்பு இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் மத்தியில் அச்சநிலை தேன்றியுள்ளது.

WWW.MEENAKAM.COM

No comments: