WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Monday, March 15, 2010

தமிழ்மக்களின் வாக்குகளை பொறுக்குவதற்காக அலைந்துதிரியும் பெரும்பான்மைவேட்பாளர்கள் சிலர் தமிழ்மக்கள் துன்பப்படும்பொழுது எக்காளம்இட்டு சிரித்தவர்களாகும்!

மனோ கணேசன் சொல்லும் எட்டப்பர்கள் யார்? _
வீரகேசரி இணையம் 3/15/2010 11:18:13 PM


தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தமிழ்பேசும் எட்டப்பர்கள் பலர் இருப்பதாகக் கூறுகிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன்.

வயிற்றுப் பிழைப்புக்காக தமது இனத்தையே இவர்கள் காட்டிக்கொடுப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் மனோ கணேசனுக்கு பெரும்பான்மை வேட்பாளர்களின் எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

தமிழ் மக்கள் பெரும்பான்மை இனத்துடன் கலந்து சிறுபான்மையினராக வாழும் மாவட்டங்களில் இன்று சில தமிழ் எட்டப்பர்கள் தோன்றியுள்ளார்கள்.

இவர்கள் இன்று தமது வயிற்று பிழைப்பிற்காக தமிழ் மக்களின் ஜனநாயக பிரதிநிதித்துவங்களுக்கு ஊறுவிளைவிக்கின்றார்கள். தமிழ் வேட்பாளர்களுக்கு உணர்வுடன் தேர்தல் பணியாற்றும் தமிழர்களை சில பேரினவாத பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு காட்டிக்கொடுக்குமளவிற்கு இவர்களது சுயநலப்போக்கு வளர்ந்துள்ளது.

இத்தகைய நபர்கள் இன்று கண்டிஇ கொழும்புஇ பதுளை ஆகிய மாவட்டங்களில் செயற்படுகின்றார்கள். இவர்களை தமிழ் மக்கள் அடையாயங்கண்டு கொள்ளவேண்டும்.

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியஇ புசல்லாவைஇ பன்விலை பகுதிகளிலும் கொழும்பு மாவட்டத்தின் கொலொன்னாவைஇ மத்தியகொழும்புஇ வடகொழும்பு பகுதிகளிலும் மற்றும் பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இத்தகைய முறையில் வயிற்றுப் பிழைப்பிற்காக பேரினவாதிகளுக்கு தரகு வேலை செய்யும் தமிழர்களை நாம் அடையாளங்கண்டுள்ளோம்.

தமிழ் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றும் உணர்வுள்ள தமிழ் தொண்டர்களின் பெயர்விபரங்களை சேகரித்து பேரினவாதிகளுக்கு எமது இனத்தை காட்டிக்கொடுக்கும் ஈனத்தனமான நடவடிக்கைகளில் இந்த தரகர்கள் ஈடுபடுகின்றார்கள். இவர்களுக்கு எதிர்காலம் உரிய பதிலை விரைவில் வழங்கும்.

இன்று வடக்குஇ கிழக்குஇ தென்னிலங்கை ஆகிய அனைத்து பிரதேசங்களிலும் அதிகப்பட்ச தமிழ் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தவேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். வடக்குஇ கிழக்கு பகுதிகளிலே வேறு விதமான சவால்களை தமிழ் கட்சிகள் சந்திக்கின்றன. ஆனால் தென்னிலங்கையிலே தமிழர்கள் சிறும்பான்மையினராக வாழும் மாவட்டங்களில் நாம் பேரினவாத சவால்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது.

ஒரு பக்கத்தில் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமலும்இ தமிழ் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்யவிடாமலும் தடுக்கும் அப்பட்டமான பேரினவாத சட்டவிரோத நடவடிக்கைகளை ஆளுகின்ற அரசாங்கத்தை சார்ந்த பெரும்பான்மை இன வேட்பாளர்கள் முன்னெடுக்கின்றார்கள்.

அதேபோல் எதிர்க்கட்சிகளை சார்ந்த பெரும்பான்மை இன வேட்பாளர்கள் அரசியல் சதிகள் மூலம் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளை கவர துடிக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பினருமே தமிழ் மக்கள் துன்பப்படும் பொழுது ஒருதுளி கண்ணீரும் வடித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் மக்களின் வாக்குகளை பொறுக்குவதற்காக அலைந்து திரியும் பெரும்பான்மை வேட்பாளர்கள் சிலர் தமிழ் மக்கள் துன்பப்படும் பொழுது எக்காளம் இட்டு சிரித்தவர்களாகும்.

எனவே இவர்களுக்கு விருப்பு வாக்குகளையோ வழங்குவதற்கு தமிழ் மக்களுக்கும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் எந்தவித காரணமும் கிடையாது. நாங்கள் இப்படி சொல்வதை இனவாதம் என்று சொல்ல இந்த பெரும்பான்மை அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள்.

நான் சொல்வது இன்றைய விகிதாசார தேர்தல் முறையின் கீழே தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை பாதுகாத்துக்கொள்ளும் இன உரிமை கோரிக்கையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: