திருகோணமலையில் தமிழ் விவசாயிகளை பௌத்த பிக்குகள் அச்சுறுத்தியுள்ளார்கள்
ஏப்ரல் 2nd, 2010 கரன்
மகாடுலுவீவ என பெயர்மாற்றம் செய்யப்பட்ட மகா விலங்குளம் 13ம் பிரிவில் நெல்விவசாயம் செய்த நூற்றி நாற்பது தமிழ் விவசாயிகளை காணிநிலங்களை விட்டு வேறு இடங்களுக்கு செல்லுமாறு புத்தபிக்குகள் அச்சுறுத்தி வருவதாக தெரியவருகிறது.
புத்தபிக்குகள் நெல்வயல்கள் இருக்கும் இடத்தில் பழைய புத்த விகாரை இருந்ததாகவும் அவற்றினை தொல்பொருள் ஆய்வு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்கள் சாந்திபுரம் மற்றும் மகாவிலாங்குளத்துக்கு அருகாமையில் உள்ள நொச்சிக்குளம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது. இவர்கள் தற்போது மொறவீவ பிரதேச செயலரிடம் முறைப்பாடு ஒன்றினை கையளித்துள்ளார்கள். இப்பிரதேசம் முன்னர் முதலிக்குளம் என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகாவிலாங்குளம், முதலிக்குளம் ஆகியன புராதன தமிழ் கிராமங்களாகும் இவை திருகோணமலையின் வடக்கு பகுதியில் திருகோணமலை-அநுராதபுர நெடுஞ்சாலைக்கு பக்கமாக உள்ளது.
Copyright © மீனகம்.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment