WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, April 4, 2010

எப்போ விடியும்? எவரால் முடியும்? என்று கேட்பது நம்மூருடன் உலகமும் தானே......!!!

அம்மா என்றே வாஞ்சையுடன் என்னூரை அழைப்பதில் தவறுண்டோ!
அப்பா என்றே அழைப்பதிலும் தான் பிழையுண்டோ!
அப்பு, ஆச்சி,அம்மப்பா,அம்மம்மா எல்லோர்முகமும்அன்றோ இணுவில்!
என் இனிய ஒரே ஒரு ஊர் உலகில் அதுவன்றோ!

எம்மாம் பெரிய உலகில் எம்மவர் எங்கெங்கெல்லாம் புலம் பெயர்ந்தார்!
புதுமொழி படித்தார்!பல்கலை,கல்வி பயின்றார்!
திரைகடல் தாண்டி உயிரையும் காத்து!குடும்பமும் காத்து!
தொழிலும்,வீடும், காசும்,புகழும் தேடி!உறவுகட்குதவியும்!வாழினும்,

சும்மா இருப்பினும்,சுகம் தரும் நம்ம ஊரின் வாசனை வருமா!
வேப்பமரநிழலில் அமர்ந்து ஊர்க்கதைபேசி,ஒடியல்கூழ் குடித்து!
குதியம் குத்தி!குறும்புகள் பல செய்து!குழப்படியால் குட்டும்,முறுக்கும்,
அடியும்,உதையும் வாங்கி அழுது குளறி ஓடி ஒளித்து!

பம்மாத்து பலசெய்து,பலகாரம் எடுத்துண்டு,படிப்பிலும் கோட்டைவிடாது!
பள்ளிக்கூடத்தில் பட்டம் விட்டு,இந்து கல்லூரியில் புகுந்து!
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வந்தாலும், நம்ம ஊர் பிள்ளையாரும்,கந்தனும்,வைரவரும்,அம்மனும் மறக்கத்தான் ஏலுமோ!

காலிங்கன்தியேற்றரில் களவாகப் படம்பார்த்து,மருதனாமடம் சந்தையில்
காய்கறி வாங்கி,அப்பு,மாமிக்கு தோட்டத்தில் உதவிசெய்து!
காலை மாலை மாமா கடையில், விடுமுறைகாலம் கடின உழைப்பில்!
உலகம் உணர்ந்து!படிப்பின் முக்கியம் நன்றாய் அறிந்து!

வேலியாய் இலவசஆங்கிலகல்வியும் சபாஆனந்தர்,தவமணிசித்தியும் ஊட்டிட!
கதிரவேலு வாத்தியார் தந்த கணித நூலும்!
வெறும் நன்றியால் அடைக்க முடியுமா கடன்! மாமியின் தோசை,வடையும்!
குஞ்சியின் குழம்பும்,கறியும்!அப்புவின் பகிடிகளும்!

ஜாலியாய் கீரிமலை,கண்டி,கதிர்காமம்,செல்லசந்நிதி,நயினாதீவு,
கசுறின பீச்,கிழக்கு,மேற்கு,தெற்கு என பயணஅனுபவங்கள்!
யாமார்க்கும்குடியல்லோம் என வாழ்ந்தகாலம்போய்!போட்டுத்தள்ளும் இருண்டகாலம்!போர்க்காலம்!மனிதஉரிமை மீறல் காலம்!

சோலியைப் பார்த்து வாயை மூடி போவியா!என்ற காலம்!பல் துலக்க மட்டும் வாய்திறந்தகாலம்!அப்பப்பா!வெள்ளைவான் காலம்!சுதந்திரம் இழந்தகாலம்!
இன்னமும் விடியாதகாலம்!எப்போ விடியும்?எவரால் முடியும்?என்று கேட்பது
நம்மூருடன் உலகமும் தானே!!

நல்லையா சண்முகப்பிரபு................................................நோர்வே

தொலைபேசி..0047 -91784271
shanmugappirabunalliah@gmail.com
http://sarvadesatamilercenter.blogspot.com
http://worldtamilrefugeesforum.blogspot.com

2 comments:

Anonymous said...

மிகவும் நல்ல கவிதை பாராட்டுக்கள்.

சிவசுப்ரமணியம் சிற்சபேசன்
நியூசிலாந்து

Shan Nalliah / GANDHIYIST said...

Thank You! Your service to Tamil through RADIO/NZ is great!!!
I hope you can read this through your Radio..!!!