WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Friday, May 14, 2010

திருகோணமலை மாவட்ட: சம்பூர் மகாவித்தியாலயம், ஸ்ரீமுருகன் வித்தியாலயம் கூனித்தீவு நாவலர்வித்தியாலயம், சாயங்குடா-பாரதிவித்தியாலயம் 2006முதல் இயங்கவில்லை!

திருமலையில் 1,700 குடும்பங்கள் இதுவரை மீள்குடியேற்றப்படவில்லை : துரைரட்ணசிங்கம்

வீரகேசரி இணையம் 5/14/2010 2:36:16 PM

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து மணல்சேனை, பற்றித்திடல், கிளிவெட்டி ஆகிய பிரதேசங்களில் தற்காலிகமாக சுமார் 1700 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

எனினும் இவர்கள் இதுவரை மீள்குடியேற்றப்படவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள், தொடரும் காலநிலை மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், இதனால் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் மகா வித்தியாலயம் , ஸ்ரீ முருகன் வித்தியாலயம் கூனித்தீவு நாவலர் வித்தியாலயம், சாயங்குடா பாரதி வித்தியாலயம் ஆகியன கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இயங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, மூடப்பட்டிருக்கும் இப்பாடசாலைகளின் மாணவர்களது கல்வி நடவடிக்கைகளுக்காக மாற்று நடவடிகைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலைத் தொடர்ந்து இம்மக்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதகதியில் மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

Contact: webmaster@virakesari.lk| Online Editorial: onlinenews@virakesari.lk
© 2010 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online


[X]

No comments: