செங்கலடி இராணுவத்தினரால் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்படுகிறார்கள்.
[ புதன்கிழமை, 05 மே 2010, 08:14.02 PM GMT +05:30 ]
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வேப்பவெட்டுவான் மாவடிஓடை பிரதேசத்தில் பாதையால் பிரயாணம் செய்கின்ற தமிழ் மக்கள் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்படுகிறார்கள்.
இவர்கள் பாதையால் செல்லும்போது வழிமறித்து மதுபானம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வரும்படி இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுவதோடு வாங்கிவர மறுக்கும் பட்சத்தில் தாக்கப்படுகிறார்கள்.
இந்த பிரதேசம் 95சதவீதம் நெற்பயிர் செய்கைக்குரிய பிரதேசமாகும் பல வருடங்களாக இந்த பிரதேசம் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததனால் இராணுவத்தினர் நெற்செய்கைக்கு தடைவிதித்திருந்ததும் பின்பு குறித்த பிரதேசம் இராணுவக்கட்டுப்பாட்டில்; வந்த பிறகு இதற்கு அனுமதி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த பெரும் போகத்தின்போது குறித்த பிரதேசத்தில் நெற் செய்கையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஏக்கருக்கு ஒரு மூடை நெல் வீதம் இராணுவத்தினர் கப்பமாக பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Copyright 2005-10 © TamilWin.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment