WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Wednesday, July 14, 2010

1906 ல் இந்தியமொழியியல் ஆராய்ச்சிநிறுவனம் களஆய்வு செய்தபோதுதான் தமிழ்மொழி திராவிடக்குடும்பத்தைச் சேர்ந்த 30மொழிகளுக்குத் தாய்மொழி என தெரிவித்துள்ளது!

www.Thinakkural.com || info@thinakkural.com

முப்பது உலக மொழிகளுக்கு தமிழ்தான் தாய்மொழி தமிழறிஞர் சாமுவேல் கோவை: தமிழ்மொழி முப்பது உலக மொழிகளுக்குத் தாய் மொழியாக விளங்குகின்றது என்று தமிழறிஞர் ஜோன் சாமுவேல் தெரிவித்தார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முனைவர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் செம்மொழித் தகுதி கருத்தரங்கு நடந்தது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற தமிழறிஞர் முனைவர் ஜோன்.சாமுவேல் பேசுகையில்;

தமிழ்மொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளுக்குத் தாயாக விளங்குகிறது. இந்த உண்மை 18 ஆம் நூற்றாண்டுவரை யாருக்கும் தெரியவில்லை. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலும் இருந்து தோன்றியதாக அனைவரும் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால், முதன் முதலில் எப்.டபிள்யூ. எலியட்ஸ் என்ற வெளிநாட்டு அறிஞர்தான் தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கிடையேயுள்ள தொடர்பை ஆய்ந்தறிந்து கூறினார்.

பின்பு அறிஞர் கால்ட்வெல் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தமிழ் மொழி 9 மொழிகளுக்குத் தாய் என்று தெரிவித்தார். இதில் திருந்திய மொழிகள் 5 என்றும் திருந்தா மொழிகள் 4 என்றும் அவர் தெளிவுபடக் கூறினார்.இதனையடுத்து கடந்த 1906 ஆம் ஆண்டில் இந்திய மொழியியல் ஆராய்ச்சி நிறுவனம் கள ஆய்வு செய்தபோது தான் தமிழ்மொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த 30 மொழிகளுக்குத் தாய்மொழி என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.

ஆசிய மொழிகளான ஜப்பானிய மொழி,கொரியன் மற்றும் மத்திய ஐரோப்பிய மொழியான ஹங்கேரியன் ஆகியவற்றுடன் தமிழுக்குள்ள தொடர்பு தற்போது அறிஞர்கள் நடத்தும் ஆய்வுகளிலிருந்து தெளிவாகின்றது.ஜப்பானிய மொழியியல் அறிஞரான சுமோ ஜப்பானிய மொழி தமிழ் மொழியிலிருந்து தோன்றியதாகக் கூறுகிறார். இவ்வாறு பன்மொழிகளை ஈன்றதில் தமிழ்ச் செம்மொழியாக விளங்குகிறது என்றார்.

தட்ஸ்தமிழ்

No comments: