WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Wednesday, August 18, 2010

எவ்வளவு பெரியமனிதராக இருந்தாலும், அனைத்து அதிகாரங்களையும் வைத்திருந்தாலும் இறுதியில் அவர்களது அழிவு அவர்களது பிடிவாதகுணத்தால்தான் நிகழ்கிறது.!!!

Fra: தினம் ஒரு தகவல் (ananthprasath@drcet.org)
Sendt: 18. august 2010 01:38:59
Til: shanmugappirabunalliah@hotmail.com


18 ஆகஸ்ட் 2010

பிடிவாதம்

எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அனைத்து அதிகாரங்களையும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வைத்திருந்தாலும் இறுதியில் அவர்களது அழிவு அவர்களது ‘பிடிவாத’ குணத்தால்தான் நிகழ்கிறது. காலம், சூழ்நிலை, தன்நிலை, பிறர்நிலை, அறிவு சார்ந்த ஆய்வு, மாற்றத்தைப் புரிந்துகொள்ளல், புரிந்ததை ஏற்றுக் கொள்ளல் போன்றவற்றில் கவனம் செலுத்தாதவர்கள் தோல்வியடைகிறார்கள். உலகச் சர்வாதிகாரிகள் அனைவரும் இந்தப் பட்டியலில் இடம் பிடிப்பவர்களாகவே இருப்பார்கள். ஹிட்லர், முசோலினி, இடி அமீன், சதாம் உசேன் போன்றவர்களை உதாரணங்களாகக் கூறலாம்.



ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் வென்ற ஹிட்லர், பிரிட்டனை ‘கோழிக்குஞ்சு’ என்று கூறிவிட்டு சோவியத் யூனியனை (ரஷ்யா) பிடித்தால் தான் என் ஆசை தீறும் என்ற ‘பிடிவாத’ குணத்தால் ரஷ்யாவின் மீது போர் தொடுத்தான். கால நிலைகளின் மாறுதல் அறியாமையாலும், அப்போதைய தன் படையின் பலவீனத்தாலும் ‘அவனது சவம்’ அங்கேயே புதைக்கப்பட்டது. பல நாடுகளின் தலைவனாக ஆட்சி செய்த ஹிட்லர் தனது ‘பிடிவாதத்தால்’ இறுதியில் தன்னையே இழந்தார்.



“தான் எடுத்த காரியத்தில் விடாமுயற்சியுடன், சிறதும் விட்டுக் கொடுக்காமல், எந்தத் துன்பம் வந்தாலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் போராடுவது பிடிவாதம் ஆகாது”.



“அதே சமயத்தில் எது எப்படி இருந்தாலும், எனது நிலையில் இருந்து பின்வாங்க மாட்டேன். அந்த நிலைப்பாடு தவறு என்று தெரிந்தாலும் மாற மாட்டேன் என்று இருப்பதுதான் பிடிவாதம்”.



நாம் பிறர் போற்றத்தக்க அல்லது மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் இப்படிப்பட்ட குணம் உடையவர்களைப் பற்றி நம்மூர் மக்கள் கூறுவது:

காட்டான். ஒரு விஷயமும் தெரியாது.
தான் பிடித்த பிடியிலேயே இருப்பான், புரிய வைக்கவும் முடியாது.
பணம் மட்டும் இருக்கிறது, அறிவு கிடையாது.
தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிப்பான்.
இலக்கியம் கூறுவது: மகாபாரதத்தில், துரியோதனனிடம் கிருஷ்ணர் கடைசியாகக் கேட்டது ஐந்து கிராமங்களையாவது பஞ்ச பாண்டவர்களுக்குத் தர வேண்டும் என்பதைத்தான். ஆனால், அதைக்கூடக் கொடுக்க முடியாது என்ற மூர்க்கத்தனமான பிடிவாதத்தால், துரியோதனன் அனைத்தையும் இழக்க வேண்டியதாயிற்று.




உங்களின் பதில்: "தமிழ் நெஞ்சங்களுக்கான தமிழ் கருத்துரையாடல் வலைதளம்" துவக்கமாக நிறைய வாசகர்களால் கேட்கப்பட்ட இந்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு கேள்விகளையும் http://tamilforum.kapsystem.com வலைதளத்தில் கொடுத்துள்ளோம். தங்களின் பதில்களை அளித்து அனைவரும் பயன் பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எமக்கு தெரியப்படுத்தவும். தங்களது கேள்விகள் பல்லாயிரக்கண்கான வாசர்களுக்கு தினம் ஒரு தகவல் மூலியமாக அனுப்பப்படும்.

1. தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

2. Unicode Font என்றால் என்ன? இது எவ்வாறு தமிழ் எழுத்துறுக்களுடன் தொடர்புடையது?


குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe .



அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,

கொல்லிம‌லைச் சார‌ல் பொ. ஆனந்த் பிர‌சாத்



கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

No comments: