WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Friday, September 10, 2010

186 பேர் காணாமல்போய் 20 ஆண்டுகள்..!!!

BBC-தமிழோசை

186 பேர் காணாமல்போய் 20 ஆண்டுகள்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் மற்றும் அதை ஒட்டிய கிராமங்களிலிருந்து சீருடை அணிந்தவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாகக்கூறப்படும் 186 பேரின் இருபதாம் ஆண்டு நினைவு கூறல் வியாழனன்று கடைபிடிக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி மற்றும் பனிச்சையடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், வயோதிபர் உட்பட 186 பேரே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்கள்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள்

சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்கு வருமாறு கூறி அழைத்துச் சென்ற பின்னரே இவர்கள் காணாமல் போனதாக சம்பவம் தொடர்பாக நடை பெற்ற பல்வேறு விசாரணைகளின் போது நேரில் கண்ட சாட்சிகள் உட்பட பலர் தெரிவித்திருந்தார்கள்.

சம்பவம் இடம் பெற்று 20 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாத நிலையிலேயே உறவினர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்.

அன்றைய சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய பெண்னொருவர் தனது 14 வயதில் தாய், தந்தை மற்றும் உடன் பிறப்புகள் என குடும்பத்தில் ஆறு பேர் இழந்ததை இன்னமும் தன்னால் மறக்க முடியாது என்றும், தன்னைப்போல் இப்படி இன்னும் பலர் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

.

No comments: