WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Monday, October 4, 2010

புலம்பெயர்தமிழர்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்டு அமைக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்துக்கான பிரதமராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன்..!!!

புதுப்பிக்கப்பட்ட நாள்: 02 அக்டோபர், 2010 - பிரசுர நேரம் 15:38 ஜிஎம்டி

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதமர்!

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் மேலைநாடுகளில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரதமராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்ததை அடுத்து வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களால், இலங்கையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தைக் கொண்டு நடத்துவதற்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மேலை நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் தேர்தல்களை நடத்தி இந்த நாடுகடந்த தமிழீழத்துக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தது.

இந்த பிரதிநிதிகள் அமெரிக்காவில் ஐ நாவுக்கு அருகே உள்ள பிளாஸா ஹோட்டலில் கூடி ஒரு நாடாளுமன்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறும் அந்த அமைப்பின் அறிக்கை ஒன்று அந்த நாடாளுமன்றத்துக்கான சபாநாயகராக கனடாவைச் சேர்ந்த பொன். பால்ராஜ் என்பவரும், துணை சபாநாயகராக சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த சுகன்யா புத்திரசிகாமணி என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

இருந்த போதிலும், இதுவரை எந்தவொரு தனியான நாடோ அல்லது ஐக்கிய நாடுகள் மன்றம் போன்ற அமைப்புக்களோ இந்த நாடாளுமன்றத்தை அங்கீகரித்ததாக தெரியவில்லை.

இது ஒரு சட்டவிரோதமான அமைப்பு என்று இதனை இலங்கை அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.

இலங்கையிலுள்ள தமிழர்களுக்காக இந்த அமைப்பு போராடுவதாக கூறுகின்ற போதிலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு இந்த அமைப்பு பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை என்று இலங்கை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

BBC Languages

No comments: