WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Friday, October 22, 2010

இறுதிக்கட்டயுத்தத்தின்போது நிகழ்ந்த மனிதஉரிமைமீறல்/சர்வதேசபோர்விதிகள்மீறல்முறைப்பாடுகளாக ஈமெயில்மூலமாக அனுப்பி வைக்க முடியும்.!!!

ஐ.நா. நிபுணர் குழு
|Bas Baskaran

போர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 08:22.55 AM GMT +05:30 ]

இலங்கை அரச படைகளுக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச போர் விதிகள் மீறல் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்க முடியும் என பான் கீ மூன் நியமித்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான விடயங்களுக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர்கள் குழு அறிவித்துள்ள போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல் முறைப்பாடுகள் வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோருக்கிடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு நிபுணர் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் குறித்த விடயம் தொடர்பில் ஆதாரங்களை தெரிந்து வைத்திருக்கும் எந்தவொரு நபரும் தமக்குத் தெரிந்த உண்மைகளை முறைப்பாடுகளாக ஈமெயில் (panelofexpertsregistry@un.org) மூலமாகத் தெரிவிக்க முடியும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு (panelofexpertsregistry@un.org) ஈமெயில் மூலமாகத் தகவல்களைத் தெரிவிக்கும் நபர்கள் தங்களைத் தொடர்புகொள்ளக் கூடிய அனைத்து விபரங்களையும் அந்த ஈமெயில் மூலமாக (panelofexpertsregistry@un.org) நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிபுணர் குழுவானது அவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் இரகசியமாக பேணப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழுவில் இந்தோனேசியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சூக் தருஸ்மான் தலைமைப் பொறுப்பை வகிப்பதுடன், அமெரிக்க சட்டத்தரணியான ஸ்டீவன் ரட்னர், தென்னாபிரிக்காவின் முன்னை நாள் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர் யஸ்மின் கூகா ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

panelofexpertsregistry@un.org

ஐ.நா நிபுணர் குழு உங்களுக்கு தெரிந்ததை சாட்சியாகத் தருமாறு தமிழர்களைக் கோரியுள்ளது.ஜூன் 22ம் திகதி ஐ.நா ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயுமாறு இக் குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த நிபுணர்கள் குழு எல்லாத் தமிழர்களிடம் இருந்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும், மேலதிக விபரங்களையும் பெறவிரும்புவதாக தெரிவித்துள்ளது.
நீங்கள் டிசம்பர் 15ம் திகதிவரை அவர்களை தொடர்புகொள்ள முடியும்.
10 பக்கங்களுக்கு மிகைப்படாமல் உங்கள் சாட்சியங்களையும், ஆதாரங்களையும், அல்லது பாதிப்படைந்த விதத்தையும் நீங்கள் அவர்களுக்கு அனுப்பிவைக்க முடியும்.

நிபுணர் குழுவிற்கு தமிழர்கள் தமது சாட்சியங்களை அனுப்பிவைக்க தவறினால், சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதை எவரும் மறக்கவேண்டாம்.

நமக்கு என்ன, என தமிழர்கள் நினைத்து, வெறுமனவே சும்மா இருந்து விடவேண்டாம். எம்மாலான எல்லா முயற்சிகளையும் நாம் செய்துகொண்டே இருப்போம். அதற்கான பலன் விரைவில் கிடைக்கும்.

நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது உங்கள் உறவினர் கொல்லப்பட்டு, அல்லது காணாமல் போயிருந்தாலோ, இல்லையேல் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகியிருந்தாலே ஐ,நா நிபுணர்கள் குழுவிற்கு உடனே தெரிவியுங்கள்.
அதற்கான மின்னஞ்சல் முகவரி கீழே தரப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருந்தால் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையை ஒவ்வொரு தமிழர்களும் செய்யவேண்டும் என நாம் அனைத்து தமிழர்களையும் வேண்டி நிற்கிறோம்.
உங்களால் அனுப்பப்படும் எல்லாவிதமான தகவல்களும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் எனவும், அதுவும் ஐ.நா வின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பாதுகாக்கப்படும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் விரைந்துசெயற்பட்டு, உங்கள் சாட்சிகளை உடனே ஐ.நா நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைக்கவும் என நாம் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம்.
பிரித்தானியா வாழ் மக்கள் உங்களுக்கு ஆங்கிலத்தில் கடிதத்தை எழுதுவதில் சிக்கல் இருந்தால், அருகில் உள்ள பிரித்தானிய தமிழர் பேரவை அலுவலகத்தோடு, அல்லது உறுப்பினர்களோடு தொடர்புகொள்ளவும். அவர்கள் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருவார்கள்.

panelofexpertsregistry@un.org

POSTAL ADDRESS - UN-PANEL ON SRILANKA WAR CRINES,
UNITED NATIONS,
N.Y. 10017
USA.

No comments: