WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, November 20, 2010

2006 இற்குப் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடத்தல்களுக்கு இராணுவமே காரணம் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக பொதுமக்கள் சாட்சியம்.!!!

Thinakkural.com
2006 இற்குப் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடத்தல்களுக்கு இராணுவமே காரணம் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக பொதுமக்கள் சாட்சியம்

Saturday, 13 November 2010 19:25 .2006 ம் ஆண்டு காலப் பகுதியில் யாழ். மாவட்டத்தில் நடந்த கடத்தல் சம்பவங்கள் அனைத்தும் இராணுவத்தினராலேயே நடத்தப்பட்டதாக கடத்தப்பட்டு காணாமல் போனோரின் உறவினர்கள் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்துள்ளனர்.



ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் யாழ்.அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போதே மேற்படிச் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதுகடந்த 2006 ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் பரவலாக கடத்தல் சம்பவங்களும் கொலைச் சம்பவங்களும் நடத்தப்பட்டன. கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக இன்று வரைக்கும் எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை. அவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்களென்றே நாம் நம்புகின்றோம் என அவர்கள் சாட்சியத்தில் குறிப்பிட்டனர்.

இதில் சீவரட்ணம் சத்திய தேவி என்பவர் சாட்சியமளிக்கையில் எனது மகன் நிரஞ்சன் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் என்னுடன் தங்கியிருந்தார் 2007 ம் ஆண்டு 1ம் மாதம் 7 ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த இராணுவத்தினர் விசாரணை என்ற பெயரில் கூட்டிச் சென்றனர். இன்று வரைக்கும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.என்னுடைய மகனை ஊரெழு படை முகாமில் கண்டவர்கள் என்னிடம் கூறினார்கள். கேட்க வேண்டிய இடங்களெல்லாம் கேட்டு விட்டேன். எனக்கு என் பிள்ளைதான் வேண்டும் வேறு எந்த நிவாரணமும் எனக்கு வேண்டாம். இராணுவத்தினர் கூட்டிச் சென்றதை நான் எனது கண்களால் கண்டேன் என்றார்.

தொடர்ந்து என்னுடைய பெயர் சத்தியவாகேஷ்வரன் என்னுடைய மகனின் பெயர் ரஜீவன் யாழ். நகரில் உள்ள தனியார் கணனி நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். 2006ஆம் ஆண்டு 8 ம் மாதம் 27ம் திகதி திருமணம் முடித்தார். திருமணமாகி 15 நாட்களில் இரவு 11.15 மணியளவில் 15 பேர் கொண்ட சீருடை அணிந்த இராணுவத்தினர் 2 பீல் பைக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு நீல நிற வாகனத்தில் வந்து எனது மகனை பிடித்து இழுத்துச் சென்றனர்.காரணம் கேட்ட என் மனைவிக்கு துப்பாக்கியால் அடித்ததில் தலையில் காயமடைந்தார். வீட்டு நாய்க்கும் அடித்ததில் இன்று வரைக்கும் இயங்காமல் அந்த நாய் கிடக்கின்றது.

இப்போதும் என்னால் அவர்களை அடையாளம் காட்ட முடியும். என்னுடைய மகனை பிடித்துச் சென்ற குழுவுக்கு தலைமை தாங்கியவர் திருநெல்வேலி இராணுவ நிலையத்திற்கும் பொறுப்பாகவிருந்தவர்தான். அதனை என்னால் உறுதிபடக் கூற முடியும். இதற்குமேல் இராமநாதன் வீதியில்தான் என் வீடு உள்ளது. அந்த வீதியில் இருந்து எந்தப் பக்கத்தாலும் இரகசியமாக வெளியேற முடியாது. சகல இடங்களிலும் இராணுவத்தினரின் பாதுகாப்பு அப்போது போடப்பட்டிருந்தது. என்னுடைய பிள்ளை பற்றிய தகவல்கள் எனக்கு வேண்டும் என்றார்.இதேவேளை வியாழன்அமர்வில் சுமார் 10 ற்கும் மேற்பட்ட தாய்மார், மற்றும் மனைவிமார் காணாமல் போன தங்கள் பிள்ளைகள், கணவன்மாரை இராணுவத்தினரே பிடித்துச் சென்றனர் என கண்ணீர் மல்க கூறியழுதனர் கோப்பாய் பிரதேச செயலக கூட்டத்திலும் இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டது.

No comments: