WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, November 4, 2010

அனுபவம் எனும் பாதையிலே ................!!!

அனுபவம் எனும் பாதையிலே ................
நல்லையா . சண்முகப்பிரபு, நோர்வே

இலங்கையின் தலைபோல வடக்கே யாழ்ப்பாணம் எனும் பச்சை பசேலென்ற அருமையான மாவட்டம்! அதன் தலைநகரின் பெயரோ யாழ்நகர்..!! . ஜப்ப்னா என ஆங்கிலத்திலும்,யாபா பாட்டுன என சிங்களத்திலும் அழைக்கப்படும் அதன் அழகும்,சிறப்பும் சொல்லிமாளாதது.!!!

அங்கே நகரிலிருந்து காங்கேசன்துறைவீதியில் சுமார் 7 கி.மீ.தொலைவில் இணுவில் எனும் அழகான ஊர்..! இணுவில் தெற்கு,மேற்கு,கிழக்கு என கே.கே.எஸ்.வீதியின் இருமருங்கும் பிரிக்கப்பட்டுள்ளது.! யாழ் நகரிலிருந்து பேரூந்தில் போகும்போது அழகான கட்டிடங்களும், கலைநயம் கொண்ட கோவில்களும், சிறப்புமிக்க பாடசாலைகளும்,காலனித்துவகால தேவலாயங்களும்,நவீனவீடுகளும்,வானுயர்ந்த தென்னை,பனை, கமுகுடன்,
பழுத்துதொங்கும் வாழை, மா,பலா,மாதுளை,கொய்யா,நாவல் பழமரங்களும்,
பணப்பயிரான புகையிலையுடன், வெங்காயம்,மிளகாய், உருளைகிழங்கு ,மரவள்ளி,பீட்ரூட்,கீரை,பயித்தை என பல்வேறு மரக்கறித்தோட்டங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டே போகலாம்.

இணுவிலில் இருந்து 1966 -76 வரை சிறப்பும்,பெருமையும் மிக்க யாழ்.இந்துக்கல்லூரியில் விஞ்ஞான பிரிவில் படிக்கும்போது, மாலைவேளையில் பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து நடந்து வீடுசெல்வது எனக்கு மிகவும் பிடித்த விடயம்!

என்ன காரணம் எனில்,அதன்மூலம் கிடைக்கும் புதிய அனுபவமும், நாவல்பழம் பறிக்கும் அனுபவமும்,மிச்சம் பிடிக்கும் பணத்தில் கல்லூரியில் தின்பண்டம்,ஐஸ்க்ரீம் அத்துடன் இடையிடையே யாழ் தியேட்டர்களில் எம்.ஜி.ஆர்.,சிவாஜி,ஜெமினி,ஜெய்சங்கர் படங்கள் நண்பர்களுடன் ரகசியமாகப் பார்ப்பதும் தான்!

எனது மைத்துனனும், நண்பனும், கல்லூரித்தோழனுமான எஸ்.ஏ.வி. யுடன் ஒருதடவை நாவல்பழம் பிடுங்க ஏறி, விழுந்து மூக்குடைந்த சம்பவங்களும் மறக்கமுடியாதவையே! சிலசமயங்களில் ஊரவர்,நண்பர் சைக்கிளில் வரும்போது அவர்களின் சைக்கிளில் ஏறி வருவதும், நம்ம ஊரவரின் கார்,லாரிகளில் இலவச பயணம் கிடைப்பதும் குதூகலமான அனுபவங்களே .!!!

மாலைவேளைகளில் எம் ஊர் கோவில்களான பரராசசேகரர்,செகராச சேகரர் பிள்ளையார்,கந்தசாமி,வைரவர் கோவில்களும்,குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் ஒரே கொண்டாட்டமாகவே இருக்கும்! பெரியவர்கள் பக்தி மயமாகவும்,இளசுகள் நகைச்சுவை பகிடி, முசுப்பாத்திகளுடன், சிறார்கள் மணல் விளையாட்டிலும், சிலர் அரசியல்,சமூக,பொருளாதார,தொழில், கல்வி பற்றி ஆழ்ந்த விவாதத்திலும் இருப்பார்!
........!

2 comments:

J.P Josephine Baba said...

இனிமையான நினைவுகள்!! வாசிக்க வாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

distance learning said...

I really thankful to you for this great read!! You did a very great job, keep it up.