WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, December 28, 2010

இராணுவ, அரசின் நடவடிக்கைகளுக்குஎதிரானவர்களையும் அதற்கு ஒத்துழைப்புவங்காதவர்களையும் இவ்வாறே போட்டுத்தள்ள இராணுவப்புலனாய்வு திட்டங்களை வகுத்துள்ளனர்.!!!

செவ்வாய், 28 டிசம்பர் 2010

யாழில் அரச எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொல்லும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்! அதிர்ச்சித் தகவல் அம்பலம்

செவ்வாய், 28 டிசம்பர் 2010 19:31 .வன்னிப் போரின் இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்து விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சிலரை மீண்டும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அதேவேளை யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களை சுட்டுக்கொல்வதற்குமுரிய நடவடிக்கைகளை இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவின் விசேட பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.





யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளே இரண்டு கொலைச்சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று சங்காலையில் ஆலயப்பிரதம குருவும் அவரது இரு புதல்வர்களும் துப்பாக்கியால் சுடப்பட்டு 5 நாட்களின் பின்னர் ஆலய பிரதம குரு வைத்தியசாலையில் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டது.



மற்றது கடந்த 26ம் திகதி உரும்பிராய் பகுதியில் வைத்து வலிகாமம் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஆயுததாரிகளால் தனது வீட்டில் கொடுமையாக சுடப்பட்டு துடிதுடித்து இறந்தார். இவ்விரு சம்பவங்களிலும் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வந்ததாகவும் அதன்போதே இருவரும் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.



ஆனால் உண்மை அதுவன்று ஆலயபிரதம குரு சுடப்பட்டதற்கும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் சுடப்பட்டதற்கும் ஒரே ஒரு காரணம் தான் உண்டு இருவரும் அரசின் துரோகத்தனங்களுக்கு துணைபோகவில்லை என்பதே பிரதானமாகும்.



பிரதம குரு சுடப்பட்ட அன்று யாழ்பாணத்திற்கு ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துலிய ரத்தினதேரர் உட்பட ஒரு சில பௌத்த பிக்குகள் வந்திருந்ததுடன் இந்துக்குருமார்களை அவர்களது அலுவலகத்திpல் சந்தித்து கலந்துரையாடினர்.



இதன்போது இந்துக்குருமார்களையும் பௌத்தபிக்குகளையும் இணைத்து புதிய பல திட்டங்களை மேற்கொள்வதற்கும் அனைவரையும் இணைத்து இந்து பௌத்த சமயங்களை ஒன்றாக்குவதற்கு ஜனதிபதியின் ஆசி கிடைத்திருப்பதாக ரத்திணதேரர் நயவஞ்சமாக பேசியுள்ளார்.



ஆனால் குருமார் இதற்கு இணங்கவில்லை என்றும் இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் யாருடைய மதம் பெரியது என வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ரத்திணதேரரின் சொற்பொழிவுடன் இருதரப்பினருக்கும் இடையில் மீண்டும் சமாதானம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்க ஒன்று இதனாலேயே இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவினரால் நயவஞ்சமாக பிரதம குரு கொள்ளை என்ற போர்வையில் சுடப்பட்டார்.



சுடப்பட்ட சில மணிநேரத்திலேயே அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் மரணமடைந்தார் ஆனால் இதனை இராணுவப்புலானாய்வுப்பிரிவினர் வெளியில் தெரிவிக்ககூடாது என்று வைத்தியர்களுக்கு தெரிவித்ததுடன் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் பிரதம குரு உயிருடன் இருப்பதாகவும் தெரிவிக்கும் படி கூறியிருந்தனர் என பிரதம குருவின் உறவினர் ஒருவர் எமக்கு தெரிவித்திருந்தார்.



இதற்கு மிக முக்கியமான காரணம் யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்கே அப்போது யாழ்ப்பாணத்தில் இல்லை அவருக்கு கிடைத்த விருதுக்கான பாராட்டு வைபவம் யாழ்ப்பாணத்திற்கு வெளியே நடைபெற்றதால் அவர் வரும் வரையே இக்கொலை சம்பவம் வெளியே தெரியாமல் மறைக்கபட்டதுடன் அவர் வந்து யாழ்ப்பாணத்தில் பத்திரிகை செய்தியாளர்களை சந்தித்தபோது சங்கானை சம்பவம் தொடர்பில் தெரிவிக்கும் போது இராணுவத்தினருக்கு கஞ்சா கொடுத்துவிட்டு முன்னாள போராளிகள் சிலரே இராணுவத்தினரின் துப்பாக்கிகளை வாங்கி சென்று கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்களே இதனை செய்ததாகவும் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரும் கைதுசெய்யபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.



அன்று மாலையே பிரதம குரு சிகிச்சை பலனின்றி இறந்து போனதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்தன அதேபோல் வலிகாமம் பிரதிக்கல்விப்பணிப்பாளராகவிருந்த ப.விக்கினேஸ்வரன் அண்மையில் வடமாகாண கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்ட்டதைத் தொடர்ந்து அங்கு சில காலம் கல்விப்பணிப்பாளர் இல்லாமல் இயங்கும் நிலைகாணப்பட்டது இதன்போது பிரதிக்கல்விப்பணிப்பாளரான இவருக்கும் இராணுவத்தினருக்கும் இவருக்கும் இடையில் ஏற்பட்ட சில தர்க்கரீதியான நிலைகளே இவரது கொலைக்கு காரணமெனத் தெரிவிக்கபடுகின்றது.



இதற்கும் பயன்படுத்தபட்ட ஆயுதம் கொளை என்றபோர்வை அதிலும் குறிப்பாக மகளின் காதிலிருந்த தோடு ஒன்றை கழற்றமுயன்றதாகவும் பின்னர் அருகிலிருந்த தந்தையார் சுடப்பட்டு கொலைசெய்யப்படார்களையும் அவர்கள் எடுத்துக்கொண்டு சென்றனர்.



இதெல்லாம் ஒரு புறம் இருக்க யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அண்மையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் விடுதலைசெய்யபட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய வகையில் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தபடவில்லையென தெரிவித்ததுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் கொள்ளைச்சம்வங்களை குறித்து தனது மனககவலையை தெரிவித்திருந்தார்.



இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது தற்போது நடைபெறும் குற்றச்செயல்கள் யாவும் வேலையில்லாமல் இருக்கும் முன்னாள்போராளிகளே மேற்கொண்டுவருகின்றனர் என்று அரச அதிபர் தெரிவித்திருப்பதுடன் யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி முன்னாள் போராளிகளை சங்கானை சம்பவத்துடன் தொடர்புபடுத்தியிருப்பதும் முன்னாள் போராளிகளை மீண்டும் கைது செய்வதுடன் அவர்களில் ஒரு சிலரை கொள்ளை என்ற போர்வையில் கொலை செய்யவும் சிலரை அவற்றுடன் தொடர்புபடுத்தி கைது செய்யவும் இராணுவம் திட்டம வகுத்துள்ளது.



அதேபோல் இராணுவம் மற்றும் அரசின் நடவடிக்கைகளுக்குஎதிரானவர்களையும் அதற்கு ஒத்துழைப்பு வங்காதவர்களையும் இவ்வாறே போட்டுத்தள்ள இராணுவப்புலனாய்வுப்பிரிவின் விசேட பிரிவினர் திட்டங்களை வகுத்துள்ளனர்.



இதே போல முக்கியமான ஒரு சில தமிழ் வர்த்தகர்களையும் சுட்டுதள்ளுவதற்கு இத்திட்டத்தினுள்ளே இராணுவத்தினர் அவர்களின் பெயர்களையும் உள்ளடக்கியிருப்பதாக இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக வர்த்தகர் ஒருவர் எமக்கு தெரிவித்துள்ளார்.



ஓன்று மட்டும் எமக்கு தெரிகின்றது எமது வளங்களையும் சொத்துக்களையும் சிங்கள அரசு அழிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதோடு எமது தனித்துவங்களும் கலாச்சாரங்களையும் அழிக்கும் பனிப்போர் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதே தெளிவான உண்மையாகும்.

www.ellalantv.com www.tamilonlines.com www.cnncinema.com www.ellalanweb.com
©2010 www.tamilcnn.com. All Rights Reserved.

No comments: