WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, January 20, 2011

சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா! என நம் மீனவச் சொந்தங்கள் சிங்கள கடற்படையினரால் அனுபவிக்கும் கொடுமைகள்..!!!

சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா! என நம் மீனவச் சொந்தங்கள் சிங்கள கடற்படையினரால் அனுபவிக்கும் கொடுமைகள்

தம்மிடம் சிக்கிக்கொள்ளும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் மேற்கொள்ளும் சித்திரவதைகள்

1. நமது சொந்தங்களை நிர்வாணமாக்குவது
2. கைகளை உயர்த்தி நிற்கும்போதும் கருணையே இல்லாமல் அப்பாவி மீனவர்களைச் காக்கை குருவிகளைச் சுடுவதைப் போல் சுட்டுத்தள்ளுவது
3. ஐஸ் கட்டி மீது படுக்கவைப்பது
4. ஐஸ் கட்டியைத் தலையில் சுமக்க வைப்பது
5. கல் உப்பு மீது முழங்காலிட்டு முட்டிபோட வைப்பது
6. கிரிஸ் ஆயிலுடன் மசால் பொடியைக் கலந்து உண்ணச் சொல்வது
7. இறந்த திருக்கை மீனுடன் உடலுறவு கொள்ளச் செய்வது
8. தந்தை, மகன், அண்ணன், தம்பி என்ற உறவுகளைப் பாராமல் ஒருபால் இனச்சேர்க்கை செய்ய வைப்பது.
9. முகத்தில் காறி உமிழ்வது
10.சிறுநீரை அருந்தச் சொல்வது
11. இந்திய வேசி மக்களே எனவும், கோழைத் தமிழர்களே எனவும் வசைமாரி பொழிவது
12. உடல் ஊனமுற்ற மீனவர்களைக் கடலுக்குள் தள்ளிவிடுவது
13. பிடித்து வைத்துள்ள மீன்களை அள்ளிச் செல்வது
14. பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வலைகளை அறுத்தெரிவது
15. மீனவர்களுக்குச் சொந்தமான தங்கமோதிரம், சங்கிலி, அலைபேசி, கைப்பணத்தைப் பறித்துக் கொள்வது.
16. அமில பாட்டிலைக் காட்டி மிரட்டுவது
17. பூட்ஸ் காலால் ஏறி மிதிப்பது, எட்டி உதைப்பது
18. துப்பாக்கியைத் திருப்பி, அடிக்கட்டையால் மீனவர்களைத் தாக்குவது
19. கடலில் மூழ்கடிப்பது
20. மீனவர்களைக் கைது செய்துகொண்டுபோய் இலங்கைச் சிறையில் அடைப்பது.

முத்தமிழ்
சென்னை
--
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
பாரதிதாசன்

No comments: