WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Wednesday, February 16, 2011

உலகத் தமிழினமே! ஏன் இந்த மௌனம்? தொடர்ந்து அல்லல்படும் இவர்கள் உங்கள் தொப்புள்கொடி உறவல்லவா?

சுனாமி மற்றும் போரையும்விடக் கொடியதான தாயக மண்ணின் மழையும் வெள்ளமும்:

[Wednesday, 2011-02-16 06:14:18]

சுணாமியால் தாக்கப்பட்டு போரினால் அழிக்கப்பட்டு இன்று கொட்டும் மழையாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் அவலப்படும் எம்மினம் வாழவேண்டும் அவர்களை வாழவைப்போம் என்று ஏம்மில் சிலர் முன்னின்று ஆவன செய்வது வரவேற்கத்தக்கதும் போற்றப்படவேண்டியதுமாகும். அதேவேளை உலகத் தமிழினமே! ஏன் இந்த மௌனம்? தொடர்ந்து அல்லல்ப்படும் இவர்கள்இ உங்கள் தொப்பிள்கொடி உறவல்லவா?

தமிழர்களின் அவலநிலை கண்டு ஆனந்தம் அடையும் அரசாங்கம் அல்லல்ப் படுபவர்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை சிங்கள இனத்துக்குப் பயன்படுத்தும் இராஜபக்சா அரசு இத்தனைக்கும் மத்தியில் உயிர் பிளைக்கும் எம் உற்வுகள் சாவிலும் வாழும் சந்ததி என்பதற்குப் பொருள் தந்தோர் பட்டியலில் சேற்கப்படவேண்டியவர்கள் அல்லவா? இவர்கள் நிலைகண்டு வேதனையடையாத தமிழர் மட்டுமல்ல மனிதர்கூட இந்த உலகில் இருக்கமுடியாது.

வெளிநாடு வந்த நாள்த் தொடக்கம் இன்றுவரை ஒயாது உழைத்து சோராமல் ஓர் அரசங்கத்துக்கு எதிராக யுத்தத்தை நடாத்த தயங்காது உதவியவர்களே!

எம் உறவுகள் உயிர் தப்பிவாழ வேண்டித் தேவைப்படும் போதெல்லாம் உங்கள் அன்புக்கரங்களைப் பாசத்துடன் நீட்டி ஆதரவு தந்தவர்களே! மரங்கலெல்லாம் வேரோடு சரிய வீடுகளெல்லாம் வெள்ளத்தில் மூழ்க கொட்டும் மழையிலும் மேடு தேடி ஓடும் எம் உறவுகளுக்குக் கரம் கொடுங்கள். நித்திரையையும் நின்மதியையும் அமைதியயும் ஆறுதலையும் அறியாது சாகும்வரை வாழ்க்கைதான் என எண்ணி வாழும் எம் உறவுகளுக்கு உங்களால் ஆனவரை உதவுங்கள். மாற்றுடை இல்லா அந்த மறத் தமிழர்களுக்கு அவர்கள் மானத்தைக் காக்க உதவுங்கள். சாதம் இல்லாவிட்டால் வரும் அந்தச் சாவைத் தடுக்க அவர்களுக்கு உதவி செயுங்கள்.

எத்தனை தடைகள் வந்தாலும் எவ்வளவு பாதிப்புகள் எற்பட்டாலும் துணிவுடன் எதிர் நீச்சல் போடும் எம் உறவுகளே! போரைவிடக் கொடிய சுணாமியை விடக் கோரமான தாயக மண்ணின் மழையும் வெள்ளமும் உங்கள் பலத்தையும் மனத்தைரியத்தையும் கூட்டுமே அல்லாது குறைக்கமாட்டாது. நீங்கள் நாதியற்றவர்களல்ல உங்கள் உறவுகளும் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்கள். இது திண்ணம்.

பல இடங்களில் பல அமைப்புக்களால் நிவாரண வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் எவருக்கு ஊடாகவும் உங்கள் அன்பளிப்புக்களை அனுப்பலாம். அனுப்பும் பணம் அல்லல்ப்படும் மக்களுக்கு காலதாமதமின்றி சென்றடைய வேண்டும்இ அதுவே முக்கியம். யாருக்கு ஊடாக அனுப்பினாலும் தீர விசாரித்து அனுப்பவதே மேல்.

உதவி செய்வதற்கான ஐந்து தொடர்புகளை இத்துடன் இணைத்துள்ளேன்:

1. மாவை சேனாதிராசா பா.உ தமிழர் தேசியக் கூட்டமைப்பு தொ.பே.எண்: 0094 77 737 3377

2. ப். அரியேந்திரன் பா.உ தமிழர் தேசியக் கூட்டமைப்பு தொ.பே.எண்: 0094 77 308 8296

3. பொன் செல்வரசா பா.உ தமிழர் தேசியக் கூட்டமைப்பு தொ.பே.எண்: 0094 77 603 4559

4. வ்ணக்கத்துக்குரிய எல். என். ரவீந்த்திரன் தொ.பே.எண்: 0094 77 704 0060

5.Trincomalee Welfare Association
TD Bank (Mc Cowan/ Lawrence Branch, Canada)
. Account No.5207211
Branch No.1584


கலாநிதி ராம் சிவலிங்கம்

பிரதிப் பிரதமர் � நாடுகடந்த தமிழீழ அரசு

E-mail: r.sivalingam@tgte.org
----------------------------------------------------

www.seithy.com Copyright © 2008 - infoseithy@gmail.com

No comments: