
அன்பான தமிழ்மக்களுக்கு!
தன்னிலை விளக்கம்: நடந்தது என்ன?
தமிழக உதவிப் பேராசிரியருடன் என் அனுபவம்..!!!
நல்லையா சண்முகப்பிரபு, மனிதஉரிமை ஆர்வலர், நோர்வே
1 முகநூல் (FACEBOOK) மூலம் முதலில் சிங்கள அரசுடன் நல்லுறவு பேணும் திரு.ப.ந., திரு ச.செ. என்னுடன் நண்பர்களானார்கள்.
பின்பு இந்தியஉதவிப்பேராசிரியர் : கு.ரா. முகநூல் நட்பு வேண்டியதும், நோர்வேக்கு விரிவுரை குறித்து வருவதையும் உதவமுடியுமா? எனவும் கேட்டு எழுதினார். முன்கூறிய இருவரும் தம்முடன் தங்கமுடியாத நிலையைக் கூறினர். நானும் அவரை வரவேற்று என வீட்டில் 6 - 1 -11 தொடக்கம் 14 -1 - 11 வரை (7 , 8 ம் தேதி ஓட்டலில் தங்கினார்).உணவு,கார்,வழிகாட்டல்,இணையவசதியுடன் இலவசமாக தங்கவைத்தேன். இந்தியா சென்று நன்றியும் தெரிவித்தார். தனக்கு இந்தியஉளவுப்பிரிவுடன் தொடர்புள்ளதாக ஒருகட்டத்தில் கூறினார்!
2 எனது முகநூல், நூலையும் இணையவலைகளில் படித்ததாக பாராட்டினார். ஒரு பொதுவான சிபார்சுக்கடிதம் மனிதஉரிமைகள் விருதுக்காக
தரமுடியுமா? எனக்கேட்டதும் ஆம்! என தானாகவே ஒருபக்கம் எழுதிதந்தார்! ஒரு பொன்னாடையும் தானாகவே வழங்கினார்.
3 ஏற்கனவே ஒரு நோர்வே எம்.பி.யும், இரு பேராசிரியர்களும் நோபல் சமாதானப்பரிசுக்காக என தந்த சிபார்சுக்கடிதங்களுடன் இவரது கடிதமும் நோபல் குழுவை சென்றடைந்தது. நோர்வேயில் அகதியாகவந்தோரில், மனிதஉரிமைக்காக பாடுபடும் கீழ்மட்ட தொண்டர்களை (உ-ம்: சோமாலியா,பர்மா,ஈரான்,குர்டிஸ்தான்,சீனா) சில எம்.பி.க்கள் பல்வேறு மானிட உரிமை,சமாதானவிருதுகட்கு பிரேரித்தசெய்திகளை உங்களில் பலர் நோர்வே பத்திரிகைகளில் வாசித்திருக்கலாம்.
4 . இவரை நோபல் குழு மேலதிக விபரங்களைப்பெற தொடர்பு கொண்டதும், என்னுடன் நேரடியாக தொடர்பு கொள்வதை விடுத்து மற்ற இரு நண்பர்கட்கும் குறை கூறத் தொடங்கினார்! தன்கடிதத்தையே நிராகரித்தார்! தவறான தகவல்களுடன் திரு.ப.ந. முகநூலில் கட்டுரை எழுதினார்.போலிஸ் அதிகாரி கூறியும் அதை அகற்றமறுத்த இவர் வேறு இணையங்கட்கும் தவறான செய்திகளை என் பெயர் படத்துடன்(சட்டவிரோதமாக) வெளியிடச்செய்தார் . மூவர் ஏற்கனவே கடிதம் தந்ததை(நம்பிக்கையான இருவர் அதனை பார்த்து உறுதிப்படுத்தியுள்ளனர்) நம்ப மறுத்த இவர்கள், அவர்களின் தனிப்பட்ட விபரங்களையும்,மன்னிப்பு கடிதமும்கோரி அச்சுறித்தினர். நான் மறுத்ததும் பல ஊடகங்கட்கு தவறான செய்திகளை அனுப்பினர். தமிழர் ஒற்றுமை,சமாதானம்,முன்னேற்றம் கருதி இதனை பெரிதாக்க நான் விரும்பாமையால் அதனை பலவீனமாக கருதினர்!
5 . எனினும் எனது பொதுப்பணி 1981 ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடம் ஈழத்தமிழர்க்கு இனம்,மொழி,நிலம் காக்க உதவிவேண்டி வாழ்த்துப்பா கவியரசு கண்ணதாசனின் முன் வழங்கியது முதல், 18 03 -11 நோர்வே அமைச்சர் எரிக் சூல்ஹைமை சந்தித்து தமிழர் துன்பம் நீங்க சூடான் சர்வசன வாக்குரிமை போல் வடகிழக்கு தாயகத்தில் நடத்த உதவக்கோரும்வரை 30 ஆண்டுகள் பல பிரதமர்களை,வெளிநாட்டுஅமைச்சர்களை, ராசதந்திரிகளை,அரசியல்வாதிகளை சந்தித்தஅனுபவங்களை என வலையில் பதிந்துள்ளேன். புலம்பெயர்தமிழர் ஒற்றுமை பேணி,நம் தாயகமக்கள் விடிவு பெற தொடர்ந்து உழைப்போமாக! வாழ்க தமிழ்!வளர்க தமிழர் ஒற்றுமை!
http ://sarvadesatamilercenter .blogspot .com .......shanmugappirabunalliah@gmail.com மொபில் -0047 -91784271
No comments:
Post a Comment