WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, October 11, 2012

நல்லாசான்: அமரர்: வி.சிவசுப்ரமணியம் ஆசிரியர்:யாழ் இந்துக் கல்லூரி 1953-1972

நல்லாசான்: அமரர்: வி.சிவசுப்ரமணியம் ஆசிரியர்:யாழ் இந்துக் கல்லூரி 1953-1972 எங்கள் தமிழ்உலகு தந்த நல்ஆசான்! ஏற்றம்பெறவைத்து எமையெல்லாம்! தங்கத் தமிழராய் உலகெங்கும் தக-தகக்க வைத்தீர்கள்!நன்றி ஐயா! நன்றி! யாழ் இந்துக்கல்லூரி தந்த பல்லாயிரம் மாணவர்கள்! பலநூறு ஆசிரியர்! உலகெங்கும் புகழுற்றார்! உலகுக்கு ஒளிதந்தார்! தமிழ்திறமைகாட்டிநின்றார்! சாரணர் இயக்கமதில் சிறுவனாய் சேர்ந்ததுமே, ஐயாவின் கண்டிப்பும்,கருணையும் காரண,காரியங்களும் எமக்கெல்லாம் உதாரணங்கள்! எமக்கு வழிகாட்டினவே! சாரமான கருத்துக்கள்,கதைகளால் எம்மனதை கவர்ந்திட்டார்! புகழ் வாழியவே! பாரதூரவிடயமெனிலும் பதறாமல் கையாள்வார்! நிதானம்தேவை என்பார்!நீடுவாழி! எந்நூலை தமிழ்நாட்டில் துணைவியுடன் உவகையாய் சிறப்பித்துவெளியிட்டார்! தந்தைபோல் மாணாக்கர்க்கு உறுதுணையாய்! எப்போதும் நண்பனாய் வழிகாட்டி! எந்நூல்க்கு அருமையான விமர்சனமும் ஆங்கிலத்தில் எழுதி மகிழ்வு தந்தார்! தன் யாழ்இந்து அனுபவநூலில் என்னையும் ஆசிரியர்குழுவிலிணைத்து சிறப்பித்தார்! சீசல்சில் ஆசிரியப்பணி,சமூகப்பணி,சமயப்பணிபுரிந்து விநாயகர்கோவில் அமைத்தார்! பாசமுடன் குடும்பமதை காத்து! நம்தேசமக்கள் விடிவுக்கும் தன்பணி நன்றாய் செய்தார்! நேசமுடன் அனைவரையும் நேசித்தார்! நேர்மையாக தன்கடமை புரிந்திட்டார்! நீடு வாழி! பாசமுள்ள தந்தைபோல தன் மாணவரை என்றென்றும் நேசித்த பேராசான்!நீடு வாழி ஐயா! என்றும் நன்றியுடன் தங்கள் அன்பு மாணவன்: நல்லையா சண்முகப்பிரபு, இருமொழி ஆசிரியர் /மொழி பெயர்ப்பாளர்- நோர்வே 2012 Nalliah Shanmugappirabu, B.Sc(Agric),Dip.Journalism(London) PPU/HIBU(Norway) http://sarvadesatamilercenter.blogspot.com https://www.facebook.com/shan.nalliah

No comments: