WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, September 19, 2015

Book review/Oru Norway Tamilarin Arumaiyana Anupavangal! : Yarlini Rajendran,M.A., Chennai, Tamilnaadu

என் நோக்கில் நல்லையா சண்முகப்பிரபு அவர்கள்... ஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள். இந்நூலாசிரியர் நல்லையா சண்முகப்பிரபு அவர்கள். இந்த நூலுக்குள் நுழைகின்றபோதே எல்லையில்லாத ஒரு மகிழ்ச்சி. ஒரு மனிதரின் அனுபவங்கள், மற்றைய மனிதர்களின் போற்றுதல்களுடன் ஆரம்பித்தமையே இதன் பெருஞ்சிறப்பு. அவர் தான் கண்ட மனிதர்களில் அற்புதமானவர்கள் யார், யார் என்பதை அழகு தமிழில் கவிதைகளில் சொல்லி கவிஞராய் ஒரு தோற்றம். ஒரு மனிதனின் வரலாறு என்பது அவனை சுற்றி வாழும் மனிதர்களில் யார் அற்புதமானவர்கள் என்பதை கண்டுபிடிப்பதுதான். ஆனாலும் சிறந்த மனிதர்களை அடையாளம் கண்டவர்களுக்கு வாழ்க்கை எளிது. அவரின் கவிதை ஒவ்வொன்றும் அதை உணர்த்திச் செல்வதை பார்த்தேன். என் மாமன் பொன்னம்மான் இவரின் வகுப்புத் தோழர் என்பதை கவிதையில் கண்டபோது, சற்றுக் கலக்கமாய் இருந்தது. அதைத் தொடர்ந்து இவரின் கட்டுரைகளையும் படித்தேன். மொழி, இலக்கியம், உலகப் பயணங்கள் எனத் தொடங்கி, இறுதியாய் நோர்வே தமிழராய் ஈழப் போராட்டத்தில் நோர்வேயின் பங்களிப்பு பற்றியும் ஆழ்மனத்து உண்மைகளுடன் கட்டுரைகள் எழுதியிருப்பது ஆச்சரியம். பத்திரிக்கையாளர் வேறு. ஒரு மனிதர் ஒரு துறையில் பெயர் பெறுவதே மிகக் கடினம். இவருக்கு எப்படி இத்தனைத் திறமைகள் என்று அதிசயித்து பார்க்கிறேன். இடைவிடாத இவர் உழைப்பும், இவர் சந்தித்த மனிதர்களும் பெருமைக்குரியவர்கள் அதுவே காரணமோ என நினைக்கிறேன். தன்னைத்தான் உயர்த்த நினைப்பவர்கள் மற்றவர்களின் உழைப்பினையும் பெருமைப்படுத்தவேண்டும். இவரிடம் அதைப் பார்த்தது அடுத்த நிலை. உயர்ந்த மனிதராய் என் உள்ளத்தில் இடம்பெற்றுவிட்டார். இணுவில் இவரை ஈன்றெடுத்த மண். அந்த மண் ஒரு புண்ணிய பூமி. இவர் படித்த யாழ் இந்துக்கல்லூரி. இலட்சியவாதிகளை உருவாக்கிய களம். ஈழவிடுதலைப் போராட்டத்தில் சுதந்திர வேட்கை நிறைந்த மனிதராயும், இங்கு தன்னை நல்லையா சண்முகப்பிரபு அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார். “சர்வதேச தமிழர்” என்ற பத்திரிக்கை வாயிலாக தன் உணர்வுகளை கொட்டித் தீர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அநியாயங்களை கண்டு எதிர்க்கும் போர்க்குணம் இருக்கும்வரைதான் மனிதன் மனிதனாக வாழ முடியும். அந்த வகையில் இவர் ஒரு போராளி. ஐயா சண்முகப்பிரபு அவர்களின் 50ம் ஆண்டு அகவையொட்டி வெளியிட்ட இந்தப் புத்தகம், வரலாற்றில் நின்று நிலைக்கும். புகழ் பெறும். ஒருவரின் அனுபவங்கள் மற்றவர்களிடம் பகிரப்படுகின்ற போதுதான் வாழ்வின் சிறப்பும் தெரியும். இவரின் பன்முகத்திறமையை படித்த பின் நான் எதைச் சொல்ல?? மாமனிதராய் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் பற்றி நிறைய எழுதலாம். ஒரு படைப்பாளியாய், உயர்ந்த மனிதராய் இருக்கும் இவரின் அறிமுகம் கிடைத்தது சில ஆண்டுகள் முன்புதான். ஆனாலும் எனக்கும் மதிப்புரை செய்ய வாய்ப்புக் கொடுத்தமையை பெரும்பேறாய் கருதுகிறேன். அவரும், அவர் குடும்பமும் சிறப்புடன் பல்லாண்டு வாழவேண்டும். “எரிப்பார்கள், ஏசுவார்கள், அஞ்சவேண்டாம். உண்மையை எழுதுங்கள். உண்மையாய் எழுதுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்ற யோகசுவாமிகளின் வரிகள் எனக்கும் பிடித்தது. ​​​​​​​​​​​​ ​​​​​​​இனிய வாழ்த்துக்களுடன், யாழினி அரசேந்திரன் எம்.ஏ., தாம்பரம், சென்னை- 600064 தமிழ்நாடு. ​

No comments: