*மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழி..* மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவற்றால்
பாதிக்கப்படும் போது இசை கேட்பதாலோ, அல்லது நூல்களைப் படிப்பதாலோ அதிலிருந்து
விடுபடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவரையும் ஆட்டுவிப்பது
இசை. இதேபோல் நம்மில் பலர் புத்தக ஆர்வலராக இருப்போம்.
இத்தகைய பழக்க வழக்கங்களால் நமக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைவதாக மருத்துவ
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தம், டென்ஷனாக இருக்கும்போது புத்தகத்தைப் படித்து பலர் அதிலிருந்து
விடுபட முயல்கின்றனர். நூல்களைப் படிக்கும் போது அதிலேயே மனம் ஆழ்ந்து
விடுவதால் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பில்லை.
தொடர்ந்து 6 நிமிடங்கள் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் மன அழுத்தம்
படிப்படியாகக் குறைகிறது. படிக்கும்போது இதயம், தசைகளில் ஏற்படும் படபடப்பு
படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலை ஏற்படுவதாக, இங்கிலாந்தைச் சேர்ந்த
மருத்துவ ஆராய்ச்சியாளர் டேவிட் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
புத்தகம் படிப்பதால் 68 சதவீதம் மன அழுத்தம் குறைகிறது. இசையைக் கேட்பதன் மூலம்
61 சதவீதமும், தேநீர் அருந்துவதால் 54 சதவீதமும் மன அழுத்தம் குறைவதாக, அவர்
மேலும் கூறியுள்ளார்.
(*மூலம்* - வெப்துனியா)
அன்புடன் பாலமுரளி
துணிவு மட்டும் இருக்குமென்றால்... எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
http://vetrinadai.blogspot.com/
http://groups.google.com/group/tamilamutham?hl=ta
........................................
From: விஜி
> *மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழி..<<<*
மன உளைச்சலின் போது:
சுவாமிவிவேகானந்தர்,சுப்ரமணிய பாரதியார், சுப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த்.....
இந்த மூன்றும் உற்சாகம் தரும்.
No comments:
Post a Comment