இராணுவ பிரதேசத்தில் மக்களின் உண்மை நிலை*
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2009, 01:44.38 PM GMT +05:30 ]
புலிகளின் பிரதேசத்திலிருந்து தமிழ்மக்களை இராணுவத்தின் கைக்கூலிகள் சிலர்
இராணுவப்பிரதேசத்திற்கு கொண்டு சென்று சேர்த்து வருகின்றனர். உள்ளே உண்மையாக
என்ன நடக்கிறது என்பதை அறியாமல் குறித்த கோடரிக்காம்புகளின் பசப்பு
வார்த்தைகளில் நம்பிச்செல்லும் அப்பாவிகளின் நிலை உண்மையில் பரிதாபகரமானதாக
உள்ளது. புலிகளின் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் மாத்தளன் எனும்
பகுதியிலிருந்து அழைத்துச்செல்லப்படுகின்றனர். இவர்கள் முதலில் அங்குள்ள
சிறுகடல் பகுதியூடாக சென்று அதற்கு அப்பாலுள்ள இராணுவத்தினரின் காவல்
நிலைகளுக்கு சென்று சேருகின்றனர். இவ்வாறு செல்லும் மக்களை முதலில் சிறுகடலின்
கரைப்பகுதியில் தம்மிலிருந்து 50மீற்றர் தொலைவில் நிறுத்தி ஆண்கள் பெண்கள்
அனைவரையும் உடைகளை கழற்றுமாறு சொல்கின்றனர் (உடலில் வெடிமருந்துடன்
வந்துள்ளனரா என பரிசோதிக்க).
இதில் கொடுமை என்னவெனில் பெண்கள் அங்குள்ள ஆண்கள் அனைவரின் முன்னும்
முற்றிலுமாக நிர்வாணப்படுத்தப்படுவதுதான். இக்காட்சியை புலிகளின்
பகுதியிலிருந்து புலிகள் ஏதும் செய்யமுடியாத நிலையில் மனக்கொதிப்புடன்
தொலைநோக்கியில் அவதானித்துள்ளதுடன் அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும்
காட்டியுள்ளனர்.* (விரைவில் நிழற்படமும் வீடியோவும் இணைக்கப்படும்) *
இதன் பின்னர் உள்ளே அழைத்துச்செல்லப்படுவதுடன் இந்தக் கொடுமை முடிகிறதா
என்றால் அதுதான் இல்லை. உள்ளே சென்றதும் வந்த அனைவரினதும் உடமைகள் அனைத்தும்
முற்றிலுமாக பரிசோதிக்கப்பட்டு அவர்கள் கொண்டுவந்த பணம் நகை என்பன
இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன. பின்னர் மீண்டும் அவர்கள் அனைவரும்
நிர்வாணமாக்கப்பட்டு (ஆண்கள் பெண்கள்) 100 மீற்றர்கள் நடக்கவிடப்படுகின்றனர்.
இதனை 20 மீற்றர் தூரத்திலிருந்து இராணுவத்தினர் பார்த்து இரசிக்கின்றனர்.
அதன்பின்னர் உடைகளை கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கூறுகின்றனர். பின்னர் ஒரு
சி.டி.எம்.ஏ தொலைபேசி ஒன்றை கொடுத்து அவுட் ஸ்பீக்கரில் விட்டு
அவர்களிடமிருந்து ஒரு இலக்கத்தை பெற்று அதற்கு டயல் செய்து கொடுக்கின்றனர்.
அதில் தாம் சுகமாக வந்து சேர்ந்து விட்டதாகவும் ஏனையவர்களையும் வருமாறு சொல்லி
கதைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
பின்னர் இவர்கள் அனைவரையும் வாகனத்திலேற்றி தர்மபுரம் விசுவமடு கிளிநொச்சி
ஒட்டுசுட்டான் எனப்பிரித்து இரண்டு கிழமைகள் ஆண்களை அங்குவைத்து மரந்தறித்தல்
காவலரண் அமைத்தல் போன்ற வேலைகள் செய்விக்கின்றனர். பெண்கள் அங்குள்ள
கொமான்டர்களின் ஒருநாள் தேவைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் புலி என்றும் புலிச்சந்தேக நபர் என்ற
போர்வையிலும் பலர் காணாமல் போகின்றனர். இதன்பின்னரே இவர்களில் எஞ்சியோர்
முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்களை இங்குவைத்து வேலைவாங்குவோர்
சிங்களம் தெரிந்த புலிகளின்பிரதேசத்திலிருந்து சென்றவர்களாவர்.
இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் 100 வீதம் உண்மையானது தகவல் தந்தவரின்
பாதுகாப்பு கருதியும் தகவல் கிடைத்த ஊடகத்தின் இரகசியத்தன்மை கருதியும் தகவல்
கிடைத்த வழியை இங்கு குறிப்பிடவில்லை.
அன்பின்,
தமிழினி
http://groups.google.com/group/Piravakam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment