WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Friday, April 3, 2009

இராணுவ முகாங்களுக்குள்ளிருந்து கேட்கும் பெண்களின் அழுகுரல்,,,,,,,,,,,,!!!!

வாழின் மானத்துடன் வாழ்வோம் இல்லையேல் மானத்துடன் சரித்திரமாய் வீழ்வோம்

எனது பெயர் தமிழன் நான் எனது சொந்த நாட்டில் நித்தமும் சிங்கள இராணுவத்தால் ஏவப்படும் பீரங்கிக் குண்டுகள் கொத்துக்குண்டுகள் இரசாயனக்குண்டுகள் பல்குழல் எறிகணைகள் மூலமும் எதிரியால் மேற்கொள்ளப்படும் பொருளாதார மற்றும் மருந்துத்தடைகளாலும் பட்டினி மற்றும் நோயால் செத்துக்கொண்டிருக்கும் எனது மக்களின் மத்தியில் இருந்தும் இவர்களை இந்த கொலைவெறி இராணுவத்தின் பிடியிலிருந்து காப்பதற்காக ஒருகண் நித்திரையோ சரியான உணவோ இன்றி தமது இரத்தத்தையூம் வியர்வையூம் சிந்தி இந்தியா பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளால் ஊட்டம் பெற்றுள்ள எதிரியூடன் நித்தமும் தீக்குளித்து போராடிக்கொண்டிருக்கும் வீரமிகு தமிழர்படையின் உணர்வூகளுக்கும் மத்தியில் நின்று எனது கருத்தை இங்கு பதிகிறேன்.

இக்கருத்தை இங்கு பதிய வேண்டும் என என்னைத் தூண்டியது தமிழீழ உணர்வாளர்களின் தீக்குளிப்புப் போராட்டங்கள் தொடர்பாகவூம் வன்னியில் உள்ள மக்களை புலிகள் வெளியேறவிடாது தடுத்து வைத்துள்ளனர் எனவூம் சிலரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விமர்சனங்களாகும்

முதன்முதலில் தமிழ்நாட்டில் தியாகி முத்துக்குமார் அவர்கள் தீக்குளித்தபோது அவர் எழுதிவைத்திருந்த மடலை படித்தபோது என்னுள்ளமும் உடலும் ஒருகணம் சிலிர்த்து அடங்கியது. ஈழத்தை தமது தாய்நாடாக கொண்டுள்ள ஒரு சில தமிழ்களுக்கே எமது போராட்டத்தில் இல்லாத தெளிவூம் உணர்வூம் எவ்வாறு இவருக்குள் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்த்ததுண்டு. இந்த சம்பவம் நான் எனது மக்களுக்காக இன்னும் எவ்வளவூ வீச்சுடன் உழைக்க வேண்டும் என்பதன் அளவை எனக்கு உணர்த்தியது.

இது போன்றே ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழீழத் தமிழன் ஈகப்பேரொளி முருகதாசன் சிங்கள அரசின் தமிழின அழிப்பு தொடர்பாக பன்னாட்டுக் கவனத்தை வேண்டி தனது இன்னுயிரை அர்ப்பணித்தபோது இந்த வீரத்தமிழன் பற்றியூம் அவரின் பின்னணி பற்றியூம் பலரையூம் கேட்டேன் தமிழீழத்தை பிறப்பிடமாக கொண்ட இவன் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் தனது சொந்த மண்ணைவிட்டு அரைமனதுடன் புலம்பெயர்ந்து சென்ற செய்தியை தாயகத்திலுள்ள அவரின் உறவினர் ஒருவருடாக அறிந்து கொண்டேன் அத்துடன் மட்டுமன்றி அண்மைக்காலமாக தாம் அவருடன் தொடர்புகொள்ளும் வேளைகளிலெல்லாம் தாயக நிலமைகள் தொடர்பாக கேட்பதுடன் தாயகத்து நிலமைகளை கதைக்கும்போது அவருடைய குரல் தழுதழுக்கும் எனவூம் அவர்களுடாக கேள்விப்பட்டேன். தியாகி முத்துக்குமாரின் செய்தி என்னுள் விடுதலையின் வீச்சை அதிதப்படுத்தியிருந்த அதேவேளை ஆச்சரியத்தையூம் ஏற்படுத்தியிருந்தது ஆணால் முருகதாசனின் செய்தியை நான் கேள்விப்பட்டபோது என்னுள் ஆச்சரியம் ஏற்படவில்லை பெருமையே ஏற்பட்டிருந்தது.

இவர் ஐக்கிய நாடுகள் சபைக்கு தான் எழுதிய கடிதத்தில் ஈழத்தமிழரின் அழிவை தடுத்து நிறுத்துங்கள் என வேண்டுகோளை விடுத்திருந்தபோதும் புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் சொல்லாத செய்தி ஒன்றையூம் விட்டுச் சென்றுள்ளார். உணர்வூள்ள தமிழர் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை முருகதாசன் தனது உடலில் பற்றவைத்த நெருப்பு மூலம் உலகத்தமிழர் ஒவ்வொருவருக்கும் கூறியிருந்தார் என்றே நான்கருதுகிறேன். இதன் அர்த்தம் ஒவ்வொருவரும் தமது உடலில் தீயைப்பற்றவைக்க வேண்டும் என்பது இல்லை. மாறாக அனைத்து தமிழர்களுமே தமது உள்ளங்களில் உணர்வூத்தீயை பற்ற வைக்க வேண்டும். இந்தத்தீ வானளாவ உயர்ந்து கண்மூடி மௌனிகளாக இருக்கும் சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை சுட்டு எம்மக்களுக்கான விடுதலையை பெற்றுக்கொடுக்கவேண்டும். என்பதாகவே இருக்கும் என நான் உணர்கிறேன்.

தீக்குளிப்பு நிகழ்வூகள் உலகத்தில் எவருக்கும் புதிதான நிகழ்வூ இல்லை குறிப்பாக கூறுவதானால் தமிழர் வரலாற்றில் இது பண்டைக்காலம் தொட்டு இருந்துவரும் வழக்கமாகும். அத்துடன் வியட்நாம் போர்க்காலத்தில் அமரிக்கர் கூட அந்தப்போரை நிறுத்தக்கோரி தீக்குளிப்பு செய்ததாக நான் கேள்விப்பட்டுள்ளேன். அதுமட்டுமன்றி வெவ்வேறு இன மக்களிடையேயூம் இவ்வாறான வழக்கம் இருந்துள்ளதாகவூம் நான் கேள்விப்பட்டுள்ளேன்.

எனது அன்பான உறவூகளே உரிமைக்காக நடக்கும் யூத்தத்தையூம் அதற்கு பக்கபலமாக நடைபெறும் போராட்டங்களையூம் அதன் வடிவங்களையூம் எவரும் விமர்சனம் செய்யவோ கொச்சைப்படுத்த முடியாது. ஒவ்வொரு இனமும் தனது பலம் மரபு எதிரியின் பலம் குணம் மரபுகளுக்கேற்ப தனது போராட்ட வடிவங்களை தீர்மானிக்கும். கரும்புலிகளையூம் கரும்புலித்தாக்குதல்களையூம் பிழையாகக்கூறும் உலகமும் மனிதாபிமானம் பற்றிபேசும் எமது சகோதரர்களான சிலரும் தமிழர் படையூடன் மோதும் சிங்களப்படை மிகையொலி யூத்த விமானங்களையூம் அதன்மூலம் போடப்படும் சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகள் 1000கிலோ குண்டுகள் பற்றியூம் மேலும் பாடசாலைகள் வைத்தியசாலைகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் பற்றியூம் கரிசனை கொள்ளவேண்டும் என்பதுவே எமது மக்களின் அவா.

முருகதாசனின் தீக்குளிப்பு தொடர்பாக இணையத்தளம் ஒன்றில் தனது கருத்தை பதிந்திருந்த நண்பர் ஒருவர் இவ்வாறான தீக்குளிப்புச் சம்பவங்கள் ஐரோப்பாவில் தமது இருப்பையே கேள்விக்குரியதாக்கிவிடும் என்ற தனது பயத்தினை வெளிப்படுத்தியிருந்தார். உண்மையில் தனக்காக இல்லாது இக்கருத்தினை வெளிப்படுத்திய நண்பருக்காகவூம் அவரின் குடும்பத்திற்காகவூம் அவரின் உறவினர் ஒவ்வொருவருக்காகவூம்தான் அந்த முருகேசன் தனது உயிரை அர்ப்பணித்துள்ளார் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்னுமொரு நண்பர் தாயகத்தில் நடைபெறும் அவலங்களை செய்திகளாக ஒலிபரப்பும்போது சிறுவர்களின் மனங்கள் தாக்கத்துக்குள்ளாகும் என கூறியிருந்தார். நான் இவ்விடயத்தில் ஒன்றை மட்டுமே கூறவிழைகிறேன். எமது மக்கள் இன்று தமது சொந்த மண்ணில் அவலத்தை சந்தித்து நிற்பதற்கான முழுப்பொறுப்பையூம் சிங்கள அரசே ஏற்கவேண்டும். இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் எமது உரிமைக்கான இந்த யூத்தம் நிச்சயம் வெற்றிபெறும். இந்தக்கருத்தை உங்களுக்கு பதிவூசெய்திருக்கும் நான் என்னுடன் களத்திடை நிற்கும் எனது நண்பர்கள் இங்குள்ள எமது மக்கள் அந்த வெற்றியை பார்க்க முடியாமல் போகலாம் இவ்வேளை புலத்தில் வாழும் உங்களிடமும் எமது இளம் சமுதாயத்திடமும் தான் இந்தப்போராட்டம் கையளிக்கப்படும். இவ்வேளை வெள்ளை உடைக்குப்பின் வாழும் இரக்கமே இல்லாத சிங்கள இனவெறி அரசே உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளும் சவாலாக விளங்கும் இவர்களின் உண்மை முகத்தை உங்கள் பிள்ளைகள் இப்போதே உணர்ந்துகொள்ள வையூங்கள்.

ஒரு உண்மையை அனைவரும் தௌpவாக புரிந்துகொள்ள வேண்டும் சிங்கள அரசு தமிழன் மண்ணை பிடித்தால் இங்கு மீண்டும் தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாத வகையில் ஒரு இனச்சுத்திகரிப்பை செய்து தமிழ் இனத்தையே அழிக்கும். தமிழீழம் தமிழர் என்ற இனமே எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் இருக்காது போகலாம்.

இன்று சூழ்நிலைகாரணமாக சொந்த மண்ணை விட்டு நீங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் உங்களுக்கு என்று ஒரு அடையாளமும் இங்கு ஒரு தளமும் உள்ளது. ஆனால் அனைவரும் ஒன்றாக கைகோக்காது போனால் எம் எல்லோருக்குமே எதிர்காலமில்லை என்பதே உண்மை.

கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதேபோல் ஒவ்வொருவரின் உணர்வூகளையூம் மதிக்கவூம் வேண்டும். தயவூசெய்து விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்தவர்களின் உணர்வூகளை கொச்சைப்படுத்தாதீர்கள்.

வன்னியில் உள்ள மக்களை புலிகள் வெளியேறவிடாது தடுத்து வைத்திருப்பதாக பலர் தமது கருத்துக்களை கூறுகின்றனர். ஆணால் இதிலுள்ள உண்மைத்தன்மையை இக்கருத்தை கூறுபவர்களே உணர்வார்கள். சரி மக்களை புலிகள் மறித்து வைத்திருப்பதாகவே வைத்துக்கொள்வோம் அதில் என்ன தவறு இருக்கிறது? சீன விடுதலைப்போராட்டத்திலும் சரி வியட்நாம் விடுதலைப்போராட்டத்திலும் சரி ஏன் ஸ்ராலின்கிராட் சண்டையிலாகட்டும் இன்னும் விடுதலையடைந்த பலநாடுகளும் அந்த நாட்டு அரசுகள் தமது மக்களை வலிந்தே விடுதலையை நோக்கி போராடச்செய்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து தமது பகுதிக்கு ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்திருப்பதாக சிறிலங்கா அரசு கூறுகிறது. அவ்வாறு சென்ற மக்களின் இன்றைய நிலை என்ன? இவர்களை விளம்பரப்பொருளாக்கி உலகநாடுகளிடமிருந்து இன்னும் இன்னும் உதவித்தொகைகளைப்பெற்று அதனைக்கொண்டு தமிழ்மக்களுக்கெதிரான போரை இன்னும் வேகமாக முன்னெடுக்கவே சிங்கள அரசு திட்மிட்டு செயற்படுகிறது.

சிங்கள இராணுவத்திடம் சிக்கிக்கொண்ட மக்களின் நிலை இதுமட்டுமா? கிளிநொச்சியில் பொதுமக்களுக்காக என கட்டப்பட்ட பொது மருத்துவமனை இன்று சிங்கள இராணுவத்தால் என்ன தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இராணுவத்தால் பிடிக்கப்படும் மக்களில் இளைஞர் யூவதிகளை தனிமைப்படுத்தி அவர்களில் யூவதிகளை வைத்தியசாலையின் இரண்டாம் மாடியில் தடுத்து வைத்துள்ள சிங்கள இராணுவம் ஓய்வில் களமுனையிலிருந்து வரும் இராணுவத்தினரின் வக்கிரமான உடல் இச்சையை தீர்த்துக்கொள்ள அவர்களை பயன்படுத்துகிறது. இளைஞர்களை இயலுமானவரை வேலைவாங்கிவிட்டு கொன்று அங்கேயே புதைக்கின்றனர். இதனை வன்னிக் களமுனையில் இருந்து விடுமுறையில் தென்பகுதிக்கு வீடுவந்த ஒரு சிங்கள இராணுவ சிப்பாயே கூறியூள்ளார். இதனைவிட யாழ்ப்பானத்தில் கோப்பாய் பகுதியில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வாழும் மக்களிடம் சென்று சற்று ஆறுதலாக கதைத்துப்பாருங்கள். இரவூவேளைகளில் அந்த இராணுவ முகாங்களுக்குள்ளிருந்து கேட்கும் பெண்களின் அழுகுரல் சத்தங்களைப்பற்றிக் கூறுவார்கள். இந்தப்பெண்கள் வேறுயாருமல்ல வன்னியில் இராணுவம் வல்வழைப்பு செய்தபோது இங்கிருந்து அவர்களால் பிடித்துசெல்லப்பட்டு யாழ்ப்பாணத்தில் நலன்புரி முகாங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள வதைமுகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்களே இவர்களாவர். இவ்வாறான முகாமிலிருந்த பெண்னொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் குறித்த அந்த பெண் குழந்தை கிடைத்து இரண்டு நாட்களில் வைத்தியசாலையிலிருந்து இராணுவத்தால் அழைத்துச்செல்லப்பட்டிருந்தார். வவூனியாவிலுள்ள முகாம் ஒன்றிலிருந்த இரமனாதபுரம் பாடசாலையின் அதிபர் ஒருவர் தனது மகள்மார் இருவரையூம் இராணுவத்தினர் அங்கிருந்து அழைத்துச்சென்றதால் மனமுடைந்து சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அண்மையில் இரணைப்பாலைப்பகுதியை வல்வழைப்புச்செய்த இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டியடித்தபோது அந்த இராணுவத்தினரின் பதுங்ககளிக்குள்ளிருந்து இராணுவத்தால் பிடிக்கப்பட்ட ஒரு இளம்பெண் புலிகளால் மீட்கப்படார் இதற்கு அவர்களால்; என்ன விளக்கம் கூறமுடியூம்? ஏனைய அந்த இராணுவ காவலரன்கள் முழுவதும் பெண்களின் உடைகளும் உள்ளாடைகளும் இருந்துள்ளன. கைப்பற்றப்பட்ட இராணுவத்தினரின் உடைப்பைகளில் பெண்களின் உள்ளாடைகள் இருந்ததைப்பார்த்த புலிப்போராளிகள் அதிர்ச்சி அடைந்ததாக கூறினர். இவ்வாறான மனநோயூம் வக்கிர புத்தியூமுள்ள சிங்களவரா எமது மக்களுக்கு விடிவைத்;தருவார்கள்? இவர்களை நம்பி எவ்வாறு எமது மக்களை இராணுவத்திடம் அனுப்புமாறு புலிகளை கோருவது?

உண்மையில் இப்போது நடக்கும் யூத்தத்தின் கள யதார்த்தத்தை நாம் அனைவரும் உற்று நோக்குதல் வேண்டும். இந்தியா பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளின் முழுமையான உதவியூடனும் நவீன படைக்கல வசதியூடனும் போரிடும் சிறிலங்கா இராணுவத்துக்கெதிராக புலிகள் இரண்டுவருடகாலமாக எந்தவித வினியோகங்களுமில்லாமல் தனித்து யூத்தம் செய்து வருகின்றனர். எனவே இந்த யூத்தத்தில் புலிகள் பின்னடைவை சந்தித்து விட்டார்கள் என்றும் புலிகள் தோற்று விட்டார்கள் என்றும் நாம் கருத முடியாது என்பதே எனது கருத்து.

விடுதலை என்பது விலைமதிக்க முடியாதது அதற்கு உயர்ந்த விலைகள் கொடுக்கப்பட்டே தீரவேண்டும.; மலையடிவாரத்தில் புதைகுழிகள் அமையாது மலையூச்சியை வென்றெடுக்க முடியாது இது இஸ்ரேலிய தளபதி ஒருவரின் கூற்று. மானத்தை இழந்து உயிர்வாழ சில ஈனப்பிறவிகள் மட்டும் விரும்பும் ஆணால் மானமுள்ள மனிதன் சண்டையிட்டு மாளவே விரும்புவான்.

வாழின் மானத்துடன் வழ்வோம் இல்லையேல் மானத்துடன் சரித்திரமாய் வீழ்வோம்

அன்புடன்

தமிழன்

www.periyaarpaasarai.blogspot.com
www.dravidar.org

No comments: