WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Friday, May 1, 2009

நடைப்பிணமாக ஈழக் குழந்தைகள்.................!!!







From: Swathi Swamy
Date: Thu, 30 Apr 2009 17:17:11 -0500
Local: Fri, May 1 2009 12:17 am
இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்

இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்* பிரசுரித்த திகதி :
30 Apr 2009


*நன்றி: அதிர்வு.காம்*


*படத்தை பெரிதாக்கி பார்வையிட இங்கு அழுத்தவும்*


இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை
பாருங்கள்.


பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின்
பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல
இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.


இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு
முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து
விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம்
எண்ணிப்பாருங்கள்.


இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது
உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன
அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின்
கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர்
ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார்.
இல்லையேல்
இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.


புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து
உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில்
சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது
தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால்
அடைப்பது.


--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
.......................................................................
From: தமிழினி .
Date: Thu, 30 Apr 2009 23:20:22 -0700
Local: Fri, May 1 2009 8:20 am
Subject: இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்

நடைப்பிணமாக ஈழக் குழந்தைகள்!*
[ வெள்ளிக்கிழமை, 01 மே 2009, 05:18.59 AM GMT +05:30 ]

கன்னங்கள் வற்றிப்போய் எலும்பும் தோலுமான அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு.
தமிழ் வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு
ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில்
தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.


தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்... உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட
சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்... எங்கே போவதெனத் தெரியாமல்
பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்... என ஈழம், இன்று மரணக் கேணி
ஆகியிருக்கிறது.


பன்னாட்டு அமைதி அமைப்புகளும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும்
வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால், சிங்கள இராணுவத்தின்
வெறிகொண்ட கொடூரத் தாக்குதல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு
கேட்பதே இல்லை!


வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது,


''இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில்
முக்கால்வாசி பேருக்குக் காது மந்தமாகி விட்டது. தொடர்ந்து ஒலிக்கும் சிங்கள
இராணுவ பீரங்கிகளின் கொடும் சத்தம், அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி
விட்டது. மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்
பட்டிருக்கின்றன.


இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக
குழந்தைகள் தனியாகவும், பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள்.
பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை,
மனச்சாட்சியுள்ள இராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தனித்
தனியாகப் பிரிப்பதன் மூலம் குழந்தைகளைத் தனிமைப்படுத்தும் சிங்கள இராணுவம்,
அவர்களை கம்பி வேலியிட்ட மைதானத்தில் அடைத்து வைத்திருக்கிறது. நிழலுக்குக் கூட
வழியில்லாமல் அல்லாடும் அந்தக் குழந்தைகளுக்கு, ஒரு நாளைக்கு ஒரு தடவைதான்
உணவு.


கடந்த வாரம் பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க
முயன்றபோது, இராணுவத்தினரிடம் பிடிபட்டனர். மொத்தக் குழந்தைகளும் பார்க்க...
அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி, எல்லோரையும் உலுக்கி
விட்டது.


இராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள், மருந்துக்கு வழியில்லாமல்
வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள். மதிய வேளைகளில்
ராணுவத்தினர் வரும்போது, 'ஆமி மாமா, சோறு போடுங்க...' என முகாம் குழந்தைகள் பசி
மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்து விடும்!
பாவம், பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு, எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என
எப்படித் தெரியும்? அதிலும் சில குழந்தைகள், கொடுக்கப்படும் ஒருவேளை
சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும், சாப்பிடாமல் பித்துப்
பிடித்துத் திரிகின்றன.


கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் ராணுவத்தினர், அவர்களை
என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!
அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க
விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது. ராணுவத்தின் நடவடிக் கைகளை ஆழமாகக்
கவனித்தால்... 'இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும்'
என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது.


வவுனியா மாவட்ட கலெக்டரான மிஸஸ் சார்லஸ், இந்த உண்மைகளை உலக அமைப்புகளின்
கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட ராணுவக்
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து இத்தகைய
கதிதான்!'' என்கிறார் வேதனை மேலிட. தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள்
குறித்து வருகிற செய்திகளோ, இதைவிடக் கொடூரம்..!


''கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே பத்து வயதுக்கு உட்பட்ட நாலாயிரத்துக்கும்
மேலான குழந்தைகள் போரில் இறந்திருக்கின்றன! மூவாயிரத்துக்கும் மேற்பட்ட
குழந்தைகள், கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன.
ரத்தத் தொற்று வியாதிகள் பரவி, நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி, எப்போது
மரணம் சூழுமோ என்ற நிலையில் கிடக்கின்றன. 12 வயதுக்கு மேற் பட்ட ஆண் குழந்தைகள்
ராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன. 'எதிர்காலத்தில் யாரும்
போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது!' என்பதற்காகத்தான் இப்படி திட்டமிட்டுச்
செய்கிறது ராணுவம்.

No comments: