WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, April 30, 2009

இலங்கை இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்த வன்னி மக்களின் அவலநிலை.....!!!

புலியா நீ ...?‏

இலங்கை இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்த வன்னி மக்களின் அவலநிலை

வன்னியில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான வன்னி மக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் அடைந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்ற இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் உங்கள் பிள்ளைகள் ஒருநாள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தாலும் தயவு செய்து முன்னரே பதிவு செய்து கொள்ளுங்கள் என உத்தரவிட்டனர்.

அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு எங்களால் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது. உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து பிரிக்கமாட்டோம். பதிவு செய்யாமல் உங்களின் பிள்ளைகள் யாராவது விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்ததாக எங்களுக்குத் தெரியவரும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்க்ள்

இதை நம்பிய பெற்றோர் தங்களின் பிள்ளைகளைப் பதிவு செய்தார்கள். பதிவு செய்த பின் பிள்ளகளை பெற்றோருடன் விட்டுச்சென்ற இராணுவத்தினர் மறுநாள் காலையில் அனைத்து முகாமுகளுக்கும் சென்று, விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என பதிவு செய்த ஆண்கள் பெண்கள் என 400 ற்கும் மேற்பட்டவர்களை பலவந்தமாக ஏற்றி சென்றுள்ளனர்.

இவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றார்கள்.

[ இந்த மின்னஞ்சல் www.odumnathi.blogspot.com என்கிற மின்னஞ்சல் திரட்டியில், திரட்டப்படுகிறது www.beyouths.blogspot.com
ஆதிசிவம், சென்னை. நன்றி!...

No comments: