WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, March 5, 2009

எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடனேயே !!!

Date: Mar 5, 2009 10:29 AM
எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடனேயே வன்னியில்மக்கள் காத்திருக்கின்றனர் ‐ வணபிதா அன்றனி றொக்

எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடனேயே வன்னியில்மக்கள் காத்திருக்கின்றனர் ‐ வணபிதா அன்றனி றொக்

எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடனேயே வன்னியில் மனிதப் பேரவலத்தைச் சந்தித்திருக்கும் மக்கள் காத்திருப்பதாக வலைஞர்மடத்தில் தங்கியுள்ள வணபிதா அன்றனி றொக் தனது செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


யாழ்மாவட்ட கத்தோலிக்க அமைப்பினால் மாதாந்தம் வெளியிடப்படும் பாதுகாவலன் என்ற இதழின் இறுதிப் பதிப்பிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


வட்டக்கச்சித் தேவாலயத்தின் பங்குத் தந்தையான இவர் தனது மக்களுடன் இடம்பெயர்ந்து தற்போது வலைஞர் மடப்பகுதியிலேயே தங்கியுள்ளார்.


கடந்த 3 மாதங்களுக்கு மேலாக காடுகள் கரைம்பைகள் பதுங்கு குழிகள் என அலைந்து நாய்படாப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தாம் தற்போது வலைஞர் மடப்பகுதியில்தஞ்சம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நம்பிக்கையுடன் மக்கள் இருப்பதாகவும்; அவர்கூறியுள்ளார்.


இறந்த சடலங்களை அடக்கம் செய்வதும் காயத்துக்குக்கட்டுக்களைப் போடுவதும் கண்ணீரைத் துடைப்பதுமே அனைவரதும் அன்றாடக்கடமைகளாகிவிட்டன. அடுத்த கட்டமாக கடலுக்குள் பாய்வதைத் தவிர வேறுமார்க்கமே இல்லை.


சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லை என்பதே உண்மையாக உள்ளது. ஆளுக்காள் ஆறுதல்கூறுவதனைத் தவிர தம்மிடம் வேறு எதுவும் இல்லை. ஏனைய பங்குத் தந்தைகளும் இடம்பெயர்ந்து ஒரே இடத்திலேயே தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆறுதல் அளிப்பதும் ஆராதனை பிரார்த்தனைகளை நடத்துவதிலும் இயன்றவரை பாடுபடுவதாகவும் கூறுகிறார்.குடாநாட்டில் உள்ள மக்களின் உதவிகளைப் பெரிதும் வன்னி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


புலம்பெயர்ந்த மக்கள் உறவுகள் தமக்கு ஒரு நல்லதீர்வினைப் பெற்றுத் தருவார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளார்கள் இந்தமக்கள்.


குழந்தைகள் உட்பட அனைவருமே அடுத்த வேளைக்கு உணவின்றி எதுவும்அற்ற நிலையில் ஆனால் நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக அன்றன் றொக்அடிகளார் தெரிவித்துள்ளார்.

No comments: