WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Wednesday, March 18, 2009

உளப்பாதிப்புக்குள்ளாகும் பல பாடசாலை சிறுவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்!!!

உளப்பாதிப்புக்குள்ளாகும் பல பாடசாலை சிறுவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்

[18 - March - 2009]

பலவித உளப்பாதிப்புகளுக்கு உள்ளாகும் பல பாடசாலை சிறுவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க சுகாதார அமைச்சுடன் இணைந்து, உளப்பாதிப்பை எதிர்கொண்டுள்ள பிள்ளைகளுக்கு உதவும் வகையில் விசேட ஆற்றுப்படுத்தல் செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஜெகத்வெல்லவத்தே தெரிவித்தார்.

போதைப்பொருள்பாவனை,சிறுவர் துஷ்பிரயோகம், காதல் விவகாரங்கள்,கல்வியில் சித்தியின்மை,வீட்டில் சுமுகமான சூழல் இன்மை போன்ற காரணிகள் சிறுவர்களின் உளப்பாதிப்புக்கு பிரதான காரணமெனவும் வெல்லவத்தே குறிப்பிட்டார்.

இதனிடையே கல்விபயிலும் சிறுவர்களுக்காக எதிர்காலத்தில் தேசிய ஆற்றுப்படுத்தல் நிலையமொன்றை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நிறுவவுள்ளதாகவும் அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தற்சமயம் ,வன்னியில் தொடரும் யுத்த சூழல் காரணமாக வன்னியைச்சேர்ந்த பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தமது உறவுகளை இழந்தநிலையில் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

வன்னியில் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் இடம்பெயர்வை அப்பகுதிமக்கள் எதிர்கொள்ள நேரிட்டமை காரணமாக தமது பாடசாலைக்கல்வியை சிறுவர்கள் இழந்துள்ளதோடு, கல்வியைத் தொடர்வதற்கான எந்தவொரு அடிப்படை வசதியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

இருப்பிடம் ,சுத்தமான குடிநீர் ,உணவு போன்ற அடிப்படை வசதிகளை குறைந்த பட்சமேனும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வன்னிப்பிரதேச சிறுவர்கள், அரசுக்கும் புலிகளுக்குமிடையே நடைபெறும் போரில் சிக்குண்டு உயிர்துறக்கும் ஆபத்தைக்கூட இன்று எதிர்கொண்டுள்ளனர்.

அண்மையில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் சுமார் 60 ஆயிரம் சிறுவர்கள் அடிப்படை வசதிகளை இழந்த நிலையில் தமது கல்வியை தொடரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

பல மனிதாபிமான பணிநிறுவனகளும் யுத்தத்தில் சிக்குண்டுள்ள சிறுவர்கள், முதியோர், பெண்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இருதரப்பும் ஏற்பாடுகளை செய்யவேண்டுமென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளன.

Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com

No comments: