Date: 2009/5/29
Subject: [தமிழ் உலகம்] [Times of London] A disgraceful vote which discredits the UN Human Rights Council
To: tamil_ulagam
Cc: tamilmanram
The vote by the United Nations Human Rights Council to congratulate the Sri Lanka Government on its victory over the Tamil Tigers and to ignore calls for an inquiry into possible war crimes is a disgrace.
It marks a victory for all those countries facing domestic insurgencies who fear any serious investigation into their behaviour. It gives carte blanche to armies to use whatever means available to achieve victory. And it is a terrible betrayed of the thousands of Tamil civilians who have been killed in the crossfire as the Sri Lankan army pounded the remnant of the Tamil Tigers. [ see http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6382331.ece ]
====================
மனித உரிமை என்ற கருத்தையே ஏறி மிதிக்கின்றது இந்தத் தீர்மானம். இனிமேல் ஐ.நா. என்பது அயோக்கியர்களின் கூடாரம் என்று அமெரிக்கக் குடியரசுக் கட்சியினர் சொல்லிவந்ததைத் தமிழர்களும் ஏற்கவேண்டியதுதான்.
பண்பாடு முதிராத காட்டுமிராண்டி நாடுகளுக்கும், பண்பாடு முதிர்ந்த நாடுகளுக்கும் உள்ள வேறுபாடு இதனால் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கருங்குகைகளில் வாழும் கற்காலக் காட்டுமிராண்டிகளால் மட்டுமே இனப் படுகொலை என்பது உள்நாட்டுப் பிரச்சினை என்று கருத முடியும்.
யூதர்களை இட்லர் கொன்றது நாட்சி ஜெர்மனியின் உள்நாட்டுச் சிக்கல்தானோ?
இந்துக்களையும், சீக்கியர்களையும் பாகிஸ்தானும் வங்கதேசமும் துன்புறுத்துவது உள்நாட்டுப் பிரச்சினையோ? அண்மையில் மன்மோகன் சிங்கும், இந்திய வெளியுறவுத்துறையும் பாகிஸ்தானை சீக்கியர்கள் பற்றிய செய்தியில் கண்டித்தது அவர்கள் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதில்லையோ?
காஷ்மீர் முஸ்லிம்களை இந்தியா வதை செய்வதை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை இன்று இவர்கள் யாரேனும் ஒதுங்கப் போகிறார்களா என்ன?
ஆமாமாம், திபெத்தியர்களைச் சீனா நசுக்குவது உள்நாட்டுப் பிரச்சினைதாம்! தலாய் லாமாவையும் மூட்டை கட்டி அனுப்ப வேண்டியதுதானே? திபெத்தியர்கள் கசக்கும் ஆனால், தலாய் லாமா கொண்டு வந்து குவிக்கும் அந்நியச் செலாவணி மட்டும் இந்தியாவுக்கு இனிக்குமோ?
பிஜித் தீவுகள், மொரீஷஸ், சூரிநாம், மேற்கிந்தியத் தீவுகள், உகாண்டா, தென்னாப்பிரிக்கா என்று இனிமேல் எந்த நாடுகளிலும் வாழும் இந்தியக் கொடி வழி மக்கள் இனிமேல் வாயை மூடிக்கொண்டு, அந்தந்த நாடுகளிலேயே சமாளித்து அடிமை வாழ்வு வாழ வேண்டியதுதான். எல்லாம் "உள்நாட்டுப் பிரச்சினை" என்று இந்தியா சொல்லுமே? சொல்லுமோ? நீ தமிழனாக இருந்தால் கட்டாயம் சொல்லும். இல்லையேல் இந்தியாவின் மீசை துடிதுடிக்கும்.
இந்த "டொமெஸ்டிக்" பிரச்சினை உள்நாட்டிலும் செல்லுமோ? பெண்டாட்டியை அடிப்பவன், இனிமேல் இது எங்க வூட்டுப் பிரச்சினை, அரசு பொறுத்திக் கொண்டு போவ வாணாம்? என்று சொல்லக் கூடும்.
தம் வீட்டுக் குழந்தைகளைப் புணர்வதை செய்பவர்களும், இது எங்க வூட்டுப் பிரச்சினை என்று வாதாடுவார்களோ?
தமிழ் மொழி வழிக் கல்வியை உலக மனித உரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி எதிர்த்த நீதி மன்றங்கள், ஈழத் தமிழர் வதையையும் உள்நாட்டுப் பிரச்சினை என்று விட்டு விடலாம்.
காட்டுமிராண்டி நாட்டில் நாகரீகத்தை எதிர்பார்ப்பது பொருந்தாததுதான்.
- கணிஞன் மணிவண்ணன்
No comments:
Post a Comment