WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, May 30, 2009

மலேசியத்தமிழர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர வேண்டும்...!!! சிங்கள தூதர் எங்களை சீண்டிப் பார்க்க வேண்டாம்....!!!

From: Albert Fernando
Date: 2009/5/30
Subject: [தமிழ் உலகம்] இலங்கை தூதருக்கு எச்சரிக்கை
To: tamil_ulagam



பினாங்கு துணை முதலமைச்சர் பி. இராமசாமி : தூதரே, எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு! இலங்கை தூதருக்கு இன்று எச்சரிக்கை விடுத்தார்.


பினாங்கு துணை முதலமைச்சர் பி. இராமசாமி “எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு, எங்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்” என்று இலங்கை தூதருக்கு இன்று எச்சரிக்கை விடுத்தார்.

சிறிலங்கா தூதருக்கு அவர் இன்று விடுத்த எச்சரிக்கை அடங்கிய அறிக்கையை கீழே காணலாம்:

“இலங்கை இனவெறி அரசு நடத்தும் மிகக்கொடுரமான அழிப்புப்போரை கண்டிக்கும் மலேசியத்தமிழர்களை கோமாளிகள் என்று கூறியிருக்கும் சிங்கள இனவெறி அரசின் மலேசியாவிற்கான தூதர் டாக்டர் டி.டி ரனசிங்கே மலேசியத்தமிழர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர வேண்டும். சிங்கள தூதர் எங்களை சீண்டிப் பார்க்க வேண்டாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துமலை வளாகத்தில் ஒன்றுகூடி இலங்கை இனவெறி அரசின் அராஜகங்களை கண்டித்த மலேசியத்தமிழர்களை கோமாளிகள் என்று அழைப்பதற்கு இந்த சிங்கள காடையர் தூதருக்கு தைரியம் கொடுத்தது யார்? ரனசிங்கேவின் கூற்றானது பத்துமலையில் கூடிய தமிழர்களை மட்டுமின்றி நாடெங்கிலும் இலங்கை இனவெறியர்களை கண்டிக்கும் தமிழர்களை ஏளனம் செய்வதுப்போல் உள்ளது.

மலேசியத்தமிழர்கள் பொதுவாகவே தங்களது ஈழத்து சகோதரர்கள் மீது அளவிலா அன்பும், பற்றும் கொண்டுள்ளவர்கள். தங்களது இன சகோதரர்கள் ஈழத்தில் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் கொலைவெறிப் போரில் சிக்கித் தவிப்பதைக் கண்டு, மனம் வெதும்பி அமைதியான முறையில் நடத்தும் கண்டனக் கூட்டங்களை ஏளனம் செய்வதைப்போல் அமைந்துள்ள மலேசியாவிற்கான இலங்கை தூதரின் பேச்சை நான் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இனிமேல் இதுப்போன்ற முட்டாள் தனமான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறேன்.

எமது ஈழத்தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் சொல்லென்னா துயரைக் கண்டு மனம் வெதும்பிகிடக்கும் எங்களை, மலேசியாவில் உள்ள சிங்கள காடையர் அரசின் பிரதிநிதிகள் வீணே சீண்டி பார்க்கவேண்டாம். நாங்கள் அமைதி வழியில் நம்பிக்கை கொண்டுள்ளமையால் யாரும் எங்களை வீணே சீண்டிப் பார்க்கலாம் என்று எண்ணி விடவேண்டாம். இந்நாட்டு தமிழர்கள் ஏழைகளாக இருக்கலாம், கோழைகள் அல்ல என்பதை தமிழினத்தின் எதிரிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

புலிகளை வென்று விட்டோம் என்ற வெற்று மாயையில் உழன்றுக்கொண்டிருக்கும் இந்த சிங்கள காடையர் பிரதிநிதிகளின் பேச்சுகள் எல்லாம், நாங்கள் எங்கள் ஈழத் தமிழ் சகோதரர்கள் மீது வைத்திருக்கும் அன்பை சிதைத்து விடாது. மலேசியாவில் வாழும் தமிழர்கள் என்றுமே எமது ஈழத்தமிழ் உறவுகளை மறந்து விடமாட்டோம். ஈழத்தமிழர்கள் சுய உரிமை பெற்று தங்கள் மண்ணில் சுதந்திரத்தோடு வாழ மலேசியத் தமிழர்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும். “


நன்றி மலேசியா இன்று

No comments: